அவரின் முகவரியை தெரியாத கடத்தல்காரர்,முதலில் மல்வத்தை வீதியில் வசிக்கும் ITN + ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் திருமதிகெனத் ஹொன்ரர் வீட்டுக்கு சென்று அவரது கணவனிடம் ரிச்சார்டின் முகவரியை கேட்க,அவர் தெரியாது என்றார்.துப்பாக்கியைகழுத்தில் வைத்து மிரட்டினர்.அவர் தொலைபேசி Directory மூலம் ரூபவாகினியில் பணிபுரியும் அருஜுன ரணவீரவின் முகவரியை தெரிவித்தார்.அருஜுன ரூபவாகினியில் ரிச்சார்ட்டுன் வேலைசெய்பவர்.அதன் பின்னரே ரிச்சார்ட் வீட்டுக்கு வந்தனர்.
நீல ரீ- சேட்,நெற்றியை மறைக்கும் தொப்பி,அரைக்காற்சட்டை அணிந்திருந்தனர்.மிட்சுபி பஜிரோ ஜீப்பில் வந்தனர்.ஒருவர் பொலிஸ் சீருடை.மகன் எங்கே? என தாயாரிடம் கேட்க,நீங்கள் யார்? அடையாள அட்டை என்றார்.நாம் சொல்வதை செய்யாவிட்டால் சுடுவோம் என்றனர்.ஜீப் இலக்கத்தை கூறி தாயார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்.ஆனால்,நடவடிக்கை எடுக்கவில்லை.
கடத்தியவர்கள் ஜனாதிபதி பிரேமதாசவின் பாதுகாப்பு பிரிவு 1) இன்ஸ்பெக்டர் றொனி குணசிங்க,2) உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) லால் சிறியந்ததர்மசிறி ரஞ்சகோட, 3) குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி-கொம்பனி வீதி பொலிஸ்,பொதெனிய கம்லத் கெதற தேவசுரேந்திர 4) சார்ஜன்ட் மஹாவெடிக்கரகே சரச்சந்திர என விசாரணைகளில் தெரியவந்தது.
31 years ago,Richard de Zoysa was abducted and dissapeared.His dead body was later found on a beach.During the same period,literally tens of thousands of persons through out the country were also dissapeared.Richard de Zoysa was a Journalist,poet and actor.
ரிச்சார்ட் டீ சொய்சா Inter Press Service என்ற வெளிநாட்டு ஊடகம்,மற்றும் ரூபவாகினி தொலைக்காட்சி ஆங்கில நிகழ்ச்சி தொகுப்பாளர்,ஆங்கில செய்தி வாசிப்பவர்.சிறந்த நடிகர்.கவிஞன்,எழுத்தாளர்.அப்போது ஜே.வி.பியின் தாக்குதல்கள்.வெள்ளை வான் கடத்தல்கள் வீதிகளில் டயர் போட்டு சடலங்கள் எரிக்கப்பட்ட காலம். அக்காலத்தில் 60 ஆயிரம் சிங்கள இளஞர்கள் காணமல்போனார்கள் என மனித உரிமைகள் அமைப்புகள் கூறின.இவரை கடத்திச்சென்றவர்கள் பொலிசாரே என தாயார் கூறினார். ஜனாதிபதி பிரேமதாசவின் பாதுகாப்பு பிரிவின் றொனி குணசிங்க. 1993 மே 1 இல் பிரேமதாச குண்டுவெடிப்பில் பலியானார்.
Who is this ? And What is He doing ? என்ற நாடகத்தில் ரிச்சார்ட் டீ சொய்சா நடித்தவர்.அந்த நாடகம் பிரேமதாசவை மையமாக வைத்து இவரால் எழுதப்பட்டது.இதன் தயாரிப்பாளர் லக்ஸ்மன் பெரேரே சில தினங்களுக்கு முன்னரே காணாமல் போனார்.இவர் பிரேமதாசவை,ஐக்கிய தேசியக்கட்சியை பகிரங்கமாக விமர்சித்தவர்.Inter Press Service ஊடகத்துக்கு இங்குள்ள கடத்தல்,காணமல்போன விடயங்களை வெளியிட்டதும் இவரது கடத்தலுக்கு காரணம் எனவும் கூறப்பட்டது.
டாக்டர் மனோராணியின் புகாரையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் பிரியந்த தர்மசிறி,இன்ஸ்பெக்டர் கம்லத் தேவசுரேந்திர,சார்ஜன்ட் சரத் சந்திர ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.2009 நவம்பர் 9 கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி றோகினி பெரேரே விசாரணை முடிவில் எதிரிகளை விடுதலை செய்தார்.போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் தெரிவித்தார்.
ரிச்சார்ட் டீ சொய்சாவின் தலையிலும்,கழுத்திலும் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் இருந்தன.தாடை உடைக்கப்பட்டிருந்தது.கடத்திய இரவே சடலத்தை ஹெலிக்கப்டரில் எடுத்துச்சென்று ஆழ் கடலில் வீசினார்கள்.சடலம் கடலில் சிக்கி உருக்குலைந்துபோகும்,கண்டெடுக்கமாட்டார்கள் என எண்ணினார்கள்.ஆனால்,மறுநாள் மொறட்டுவ – லுனாவை கடற்கரையில் நிர்வாணமாக சடலம் ஒதுங்கியது.ஊடகவியலாளர் சிவராம் அடையாளம் காட்டினார்.ஜனாதிபதி பிரேமதாசவும் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டார்.அன்று நவீன ஊடகங்கள் இல்லை.பத்திரிகைகளில் பிரதான செய்தி.ஒரு பரபரப்பு.ஏனைய சிங்கள ஊடகவியலாளர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.சிலர் நாட்டை விட்டு சென்றனர்.
சம்பவத்தின் மறுநாள்,கடத்தல்காரருடன் அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயரட்னா இரவு விடுதி ஒன்றில் Party வைத்தார் எனதாயார் மனோராணி கூறியிருந்தார்.மனோராணிக்கும் ,அவரது சட்டத்தரணி வீரக்கோனுக்கும் கொலை மிரட்டல் விடுகப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் இது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமிக்கும்படி எதிர்க்கட்சியினர்( இன்றைய ஆளும்தரப்பினர்) பிரேரணையை முன்வைத்தனர்.”ரிச்சாரட் டீ,சொய்சா தற்கொலை செய்துவிட்டார்!அவர் ஜே.வி.பி ஆதரவாளர்!ஆண் பாலியல் தொடர்புடையவர்!” என்று அன்றைய அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ( முன்னாள் பிரதமர்)கூறியிருந்தார்.ஆளும் ஐக்கிய தேசிய கட்சி எம்.பிக்கள் ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பிரேரணை தோல்வி.ஏன் ஐக்கிய தேசிய கட்சியினர் சம்மதிக்கவில்லை ?
23 ஏப்ரல் 1990 இல் வெளியான ‘TIME ‘ ஆங்கில சஞ்சிகையில் ரிச்சர்ட் டீ சொய்சா படுகொலை,விசாரணை குறித்த கட்டுரை பிரசுரமானது.இலங்கையில் அதனை விற்க அரசு தடைசெய்து,கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைத்தது.
ரிச்சார்ட் டீ சொய்சா நினைவாக “காணாமல்போனவர்கள் ,அவர்களின் தாய்மாரின் வேதனைகள்” தொடர்பான ஒரு திரைப்படம் தயாரிக்க சிலர்முயற்சித்தனர்.அதற்கு நிதி உதவியும் கிடைத்தது.அனுமதிக்கவில்லை.இந்தப்படம் வெளிவந்திருந்தால் தற்போதைய சூழலில் அரசுக்கு பெரும் பிரச்சினையாகும்.டாக்டர் மனோராணி சரவணமுத்துவின் காணாமல்போனோரின் அன்னையர் முன்னணியுடன் அம்பாந்தோட்டை மாவட்ட சு.கட்சி எம்.பி மகிந்த ராஜபக்ச இணைந்து செயற்பட்டார்.
பிரேமதாச ஆட்சியில் காணாமல்போனோர் தொடர்பான 553 ஆவணங்கள்,பல படங்களுடன் ஜெனிவாவுக்கு 1990 செப்டம்பர் 11 எதிர்க்கட்சி எம்.பி.மகிந்த ராஜபக்ச( இன்று பிரதமர்) செல்ல முயன்றபோது கட்டுநாயக்காவில் பொலிஸ் அதிகாரியால் தடுத்து வைக்கப்பட்டு சோதனையிடப்பட்டு எடுக்கப்பட்டன.ஜெனிவாவில் செப்டம்பர் 10-14 வரை ஐ.நா.மனித உரிமைகள் கூட்டம் இடம்பெற்றது.மகிந்தராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கும் தொடர்ந்திருந்தார்.
பாராளுமன்றத்திலும் இது குறித்து வாசுதேவ நாணயக்கார,ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி எழுப்பி,விசாரணை நடத்தப்படவேண்டும்.சபாநாயகரின் அனுமதியின்றி ஒரு எம்.பியை தடுத்து வைத்து விசாரணை செய்வது பாராளுமன்ற விதிமுறைகளுக்கு மாறானது என்றனர்.
25 ஒக்டோபர் 25 மகிந்த ராஜபக்ச பாரளுமன்றத்தில் ( Hansard page 366) “I took the wailings of this country’s mothers. Do I not have the freedom to speak about them ? It was wailings of those mothers which were heard by those 12 countries”
” We asked the donor countries as to why conditions cannot be imposed when giving aid.That was the request we made.It is what has been fulfilled today.” ( Hansard page 365) ” We went and told donor nations to cut these and these, and to tell this government to protect Human Rights,of the people of this country.
If the government is going to deny human rights ,we should go not only to Geneva, but to any place in the World,or to hell if necessary, and act against the government.( Hansard page 424)