யூதரான Henry Kissinger இஸ்ரேலுக்கு விஜயம் செய்த போது அவருக்கு கோட் சூட் தைக்க யூதர்கள் நல்லதொரு துணியொன்றை பரிசளித்தார்களாம். சந்தோசத்துடன் அதை வாங்கிய கிஸ்சின்ஜர் அமேரிக்கா திரும்பியதும் அதை தைக்க டெய்லரிடம் போனால் துணி பத்தாது என்றுவிட்டார். பிறகு கிஸ்சின்ஜர் தனது பிறந்த நாடான ஜெர்மனுக்கு அதை கொண்டு போனால் அங்கும் கோட்டுக்கும் சூட்டுக்கும் உது போதாது என்றுவிட்டார்கள்.
இங்கிலாந்து, பிரான்சு என்று அலைந்து எங்கும் சாத்தியமில்லாமல் போக இஸ்ரேலுக்கு திரும்ப போயிருக்கின்றார் .
டெயிலர் அடுத்த நாளே மிக அழகாக கோட் சூட் தைத்து கொடுத்துவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த கிஸ்சின்ஜர் டெய்லரிடம் போய்
“இது எப்படி சாத்தியம் ” என்று நடந்தவற்றை சொல்ல ,
அதற்கு இஸ்ரேலிய டெய்லர் சிரித்துக்கொண்டே,
“அவர்களுக்கு நீங்கள் பெரிய ஆளாக இருக்கலாம் ஆனால் எமக்கு அப்படியல்ல ” என்றாராம் .
விக்கியரின் புக்கையும் நாட்டில் அவியாது போக புலம் பெயர்ந்தவர்களிடம் அவிக்க தொடங்கியிருக்கின்றார்.
(Parathan Navaratnam)