ராசு சித்தப்பாவால் உடனடியாக ஊரைவிட்டு வரமுடியாத குடும்ப சூழல்.அவருக்கு நான்கு ஆண்குழந்தைகள்.எல்லோருமே சிறுவர்கள்.சித்திக்கு இளம்பிள்ளை வாதம் வந்ததால் சிரமப்பட்டே நடந்து தனது குடும்பவேலைகளை செய்வது வழமை.இப்படிப்பட்ட நிலையிலும் தையல்வேலைசெய்துகுடும்ப சுமையில் தானும் பொறுப்பெடுத்து வாழ்ந்துவந்தார்கள்.
ஒரு கட்டத்தில் சித்தப்பா ஊரில் இருப்பது ஆபத்து என உணர்ந்து நீர்கொழும்பு வந்துசேர்ந்தார்.ஆனால் நீர்கொழும்பில் தொடர்ச்சியாக வாழ்வதற்கேற்றபொருளாதார வசதி இல்லாத காரணத்தாலும் தனது மனைவி குழந்தைகளை பார்க்கவேண்டுமென்ற அவாவாலும் ஒருவித நம்பிக்கையோடு மீண்டும் ஊருக்கு சென்றார்.சில நாட்களிலேயே புலிகளால் மந்திகையடியில் வைத்து புலிகள் சுட்டு கொலைசெய்தார்கள்.சித்தியும் குழந்தைகளும் அனாதைகளானார்கள்.அந்த துயரம் மிக கொடுமையானது.
அதன்பின் சித்தி பல துன்பங்களுடன் தனது குழந்தைகளை வளர்த்துவந்தா.சித்திக்கு இருந்த மன அழுத்ததம்,வறுமை,குழந்தைகளை வளர்ப்பதில் கஸ்டமான நிலை இவைகளாலும் இன்னபிற புற காரணங்களாலும் திடீரென மூளை நரம்பு வெடித்து மரணமானர்.குழந்தைகள் தாய் தந்தையற்ற அனாதைகளானார்கள்.
இப்படி ஒரு மனிதனை படுகொலை செவதன்பின்னாலுள்ள துயரங்களை புரிந்துகொள்வதற்கான வலிமை எமது சமூகத்திடம் குறைவாகவே இருக்கிறது.புலிகளிடம் கொலைவெறியைத்தவிர வேறெதுவும் இன்றுவரை இல்லை.சித்தப்பாவின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் புலம்பெயர்த்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.ஆனால் அந்த வடுக்களையும் துயரங்களையும் சுமந்தபடி அவரது பிள்ளைகளும் நாமும் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். மீண்டும் ராசு சித்தப்பாவிற்கும் சித்திக்கும் அவர்களது நினைவுகளோடு எமதுஇதய அஞ்சலிகள்.