கொழும்பு கதிர்காமம்(திசமஹரகம) வரையிலான தோராயமாக 275 கிலோ மீற்றர் தூரத்தை இலகு பயணமாக்க அமைக்கப்பட்ட தெற்கு அதி வேக விரைவு சாலை மக்களுக்கு(பாமர மக்களுக்கு அல்ல) சில சௌகரியங்களை செய்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் இதற்குள் ஒரு சோகம் நிறைந்துதான் காணப்படுகின்றது. கிராமங்களை, உறவுகளைப் பிரித்து ஊடறுச் செல்லும் இந்த சாலை உறவுகள் சந்திக்க வேண்டின் சாலையில் இரு மருகிலும் உள்ளவர்கள் மிக நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவலத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மிகக்குறுகிய இடவெளிகளில் மேம் பாலங்களை அமைத்தல் என்பது தற்போதைக்கு சாத்தியமற்ற நிலமைகள் காணப்படுவதினால் இது சாதாரண பாமர் மக்களின் உணர்வுகளை பாதிப்படையச் செய்திருக்கின்றது. கட்டணம் செலுத்தும் போக்குவரத்து முறமைகளும் மத்திய தர மேல்தட்டு மக்கள் வரைக்கும் கட்டணம் செலுத்தி பயணிக்க முடிகின்றது. சாதாரண உழைக்கும் மக்கள் இந்த அதி வேக சாலையை பயன்படுத்த முடிவதில்லை. இரு வழிப்பாதையின் நடுவில் அழகாக நாட்டப்பட்டு பச்சை பசேல் என பராமரிக்கப்படும் அழகு செடிகள் மேற்குல எங்கும் காணமுடியாக அழகுதான் இதே மாதிரியான செயற்பாட்டை தமிழ் நாட்டின் வேக சாகைளின் நடுவில் ரோஜா செடிகளை நட்டு அவ்அவ் பிரதேச மக்களால் பராமரிக்கப்படும் அழகு என்னை கவர்ந்தது உண்டு.
தமிழர்கள் குத்தரி சோற்றுடன் தமது கலாச்சாரத்தை ஆரம்பித்து குரக்க உணவு இல்லாவிட்டால் உணவு முழுமை பெறாது என்ற கலாச்சாரத்தில் இருந்து வெளியேறி வெள்ளை அரிசி மாவென்று தம்மை சக்கரை வியாதிவரை இழுத்துச் சென்ற போக்ககளின் மத்தியில் சிங்கள் மக்கள் இன்றுவரை சாப்பாட்டுக் கடைகளில் கூட சம அளவில் குத்தரிசி சோறு குரகன் தேங்காய் கித்துள் என்று சரியான அளவில் கலந்து உருவான பண்டங்கள் என்று ஆரோகிய உணவுடன் கூடிய தமக்கான பாரம்பரிய உணவு பலரும் உண்ணும் வண்ணம் தயாரித்து பரிமாறல் தங்களுக்கான கலாச்சார விழுமியங்களை வளர்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வங்களை காணமுடிந்தது. சாப்பாட்டில் வல்லாரை பொன்னாங்காணி பீன்ஸ் வகை ஈரப்பிலாக்காய் (இது இல்லாமல் சிங்களவர்கள் தமது சாப்பாடு முழமை பெற்றதாக உணர மாட்டார்கள்) பருப்பு என்பன இல்லாத சாப்பாட்டை காண முடியாது. எங்கும் எதிலும் தொட்டுக் கொள்ள அவசரமாக தயாரிகப்பட்ட கட்டைச்சம்பல் ஆதிக்கம் விகித்தே வருகின்றது. கொறக்கா புளி போட்டு சமைத்த மீன்குழம்பு சுவையை நடிப்பின் மூலம் எடுத்துக்காட்ட முதல் மரியாதை சிவாஜியை அழைத்து வரவேண்டும் அவ்வளவு சுவை. (இலங்கை)தமிழர்களின் பாரம்பரிய உணவு எது என்பதற்கு பதில் கூறமுடியாமல் திணறும் கலாச்சாரத்தை தொலைத்துவிட்டு தவிக்கும் எம்மவர் மத்தியில் சிங்களவர்களின் உணவு பழக்கவழக்கங்களில் சித்தாலெப்பை சமகன் மரமஞ்சள் வரை என ஒரு கலாச்சாரப் பண்புகளை வளர்திருப்பதை எனது பயணம் எனக்கு உணர்த்தியிருக்கின்றது.
குரக்கனில் உருவாக்கப்படும் ஆரோக்கிய உணவுப் பண்டங்கள் என்ன என்பது எமது புதிய தலைமறையினரின் கேள்விகளாகவும்…? மோதகம் கொழுக்கட்டை என்று பயறைப் பிரதானப்படுத்தும் உணவுகள் தமிழ் மக்களின் கடைகளில் இப்போது காண முடிவதில்லை. பனைமரத்து உணவுப் பண்டங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் இந்த மரத்துடன் தொடர்புடைய மக்களின் ‘அடையாளம்’ மட்டும் சமூகத்தில் தாழ்ந்தவர்கள் என்று பாகுபடுத்தும் தன்மை மட்டும் குறையவில்லை. வடையும் தோசையும் (இட்லி மறைந்து வருகின்றது) தமிழ் கடைகளில் மறையாமலும் குழல் புட்டு (பெரும்பாலும் கோதுமை மாவில் உருவானது). இடியப்பம் என்று தலைகாட்டினாலும் எமது பாரம்பரியத்திற்குள் இவை அடங்கிவிட்டன என்பதை மாற்று இனத்தவர்களுக்கு பரிமாறுவதில் உள்ள பக்குவத்தால் இதனை ‘தரமான’ உணவாக எம்மவரகளால் பாரிய அளவில் வெளிப்படுத்த முடியவில்லை என்ற ஒப்பீட்டிற்கு எனது தென்பகுதி பயணம் பல பாடங்களை எனக்கு கற்பித்து நிற்கின்றது.
சிங்கள் இளைஞர்கள் தமது பாரம்பரிய உடையில் இருந்து(முஸ்லீம்கள் போல் அல்லாது) வெளியேறிவிட்டாலும் இளம் பெண்கள் உட்பட இடுப்பில் விசிறி வைத்து சேலை அழகும் இடையழகும் என்னை கவந்தே நின்றது. தமிழ் பெண்கள் பிற் கொய்யகத்தை மறந்து முற்கொய்யகத்திற்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் சிங்களப் பெண்களின் இடுப்பு விசிறிச் சேலைக்கட்டு என்னை அவர்களின் விசிறியாக மாற்றிவிட்டது. இடுப்பு விசி சேலை அணியும் பெண்கள் அலுவகங்கள் புத்த கோவில் எங்கும் வியாபித்திருப்பது காணக் கூடியதாக இருக்கின்றது. அதுவும் புத்த கோவில்களுக்கு வெள்ளை நிறத்தில் உடையணிவது அடையாளமாகவும் அழகாகவும் இருக்கின்றது. புத்த கோவில் கோபுரங்கள் பூஜைக்கு பாவிக்கும் மலர்கள் தாமரை மலர் உட்பட வெண்மைக்கு அண்மித்ததாக அறிய முடிந்தது.
தமிழ் நாடு போலல்லாது சதா ‘கோர்ன்’ அடித்து சத்தம் கிழப்பும் வாகனச்சாரதிகளுடன் ஒப்பிடுகையில் மேற்கத்திய வாகன செலுத்துனர்கள் போல் யாராவது தவறு விடும் இடத்து அறிவுறுத்தி காட்ட சத்தம் எழுப்பும் மறமை அமைதியான பயணத்திற்கு இடமளிக்கின்றது.
மேலும் பெரும்பாலும் சாலை வதிகளை பின்பற்றியே வாகனத்தை ஓட்டுகின்றனர் பிரதான சாலை எங்கும் ஒவ்வொரு 10 நிமிட இடைவெளில் சாலை ஒழுங்கை பராமரிக்கும் பொலிஸ்காரர்கள் மோட்டார் சைகிளுடன் தமது சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது. வாகனப்பத்திரங்களை சரிபார்த்தல் என்பதுடன் தமது கடமையை செய்யும் இவர்கள் கையூடுவாங்குவது பாரிய அளவில் காணப்படாவிட்டாலும் இருதரப்பும் இந்த கையூடலுக்கு காரணமாக இருப்பதை அறிய முடிகின்றது. தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடாமல் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பண்பாக இவரகள் தமது கடமையை செய்வதாக என்னால் அவதானிக்க முடிகின்றது இதில் தமிழ் நாட்டு காவல் துறையினர் போல் ‘பகிரங்க’ கையூடு தாக்குதல் வார்த்தை பிரயோகங்களை நான் இதுவரை எனது பயணத்தின் போது எனது வாகனம் சந்திக்கவில்லை. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களே அதிகமாக இந்த வீதிப்பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் மறிகப்படுவதாகவும் அறிய முடிந்து.
தங்கு விடுதிகளுக்கு அறவிடப்படும் கட்டணமும் இங்கு உணவுகளுக்கு அறவிடப்படும் பணமும் ‘டாலர்’ வருமானம் பெறுபவர்களால் மட்டும் அனுபவிக்ககூடிய நிலமை எனக்கு பெரும் உடன்பாடு அற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையில் பிறந்து இங்கு தொழில் புரியும் சராசரி சாமான்ய மகனால் ஒரு நாள் கூட இப்படியான விடுதியில் தங்கி அந்த உணவை பணம் கொடுத்து வாங்கி உண்ணும் அளவிற்கு ‘கட்டுப்பாட்டு’ வலைக்குள் உள்ளதா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் இதற்கு வெளியே சாதாரண உணவுக்கடைகளில் உணவுப் பண்டங்களின் விலை ஓரளவு பரவாய் இல்லை. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனது நாட்டின் பெரும்பான்மையான மக்களின் செயற்பாடுகளை செய்வதற்குரிய இயலுமைக்குள் விலைவாசிகள் இருக்க வேண்டும் அந்த வகையில் இலங்கையில் இந்த உல்லாசத்துறை என்பது ‘டாலர்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என்ற செய்தி என் மக்கள் இந்த உல்லாசத்தை கண்முன்னே அனுபவிக்க முடியாமல் தனது கோடிக்குள் இருக்கும் கடற்கரையும் பூங்காவும் வனநிலையங்களும் ‘அந்நியர்கள்’ இற்கு மட்டும் சொத்தம் என்ற ஏக்கங்களுடன் வாழ வழிவைத்துள்ளது. தேவைக்கு அதிகமான ‘உல்லாச’ விடுதிகள் இந்த விலையேற்றத்தின் முக்கிய காரணி என்பது என்கருத்து. கிடைக்கும் ஒருவரிடம் ஒரு நாளுக்குரிய வருவாயை கறக்கும் அணுகுமுறை இது இலங்கையின் தென்பகுதி உல்லாச புரியில் எனது பயண அனுபவங்கள் இதனை நிறுவியே நிற்கின்றது.
(இன்னும் வரும்…)