என் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது.

 

என்னுடைய வாப்பா ஊடாகத் தான் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் நிரம்ப சிறுவயதிலேயே எனக்கு பரீட்சயமாகின.

அவர் தமிழும் பிறகு சிங்களப் பாடசாலைகளில் சிங்கள இலக்கியமும் கற்றுக் கொடுத்தவர்.

மார்டின் விக்ரமசிங்க,குமாரதுங்க முனிதாச, ஜெயகாந்தன்,கல்கி, மு,வரதராசன் Anton chekhov,Tolstoy,victor hugo,ernest hemingway போன்றவர்களையெல்லாம் வாப்பா அறிமுகப்படுத்தினார்.

அப்போது எனக்கு ஜெயகாந்தனின் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ தொகுதி மிகப் பிடித்தமாயிருந்தது.13603301_10154471106812323_5788229307986596911_o (1)

வாப்பா அவரது இளமையில் மார்க்ஸிச்ட் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.

வாழ்க்கையைப்பற்றிய ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது.

தீவிரமான வாசிப்பும் தேடலும் அவரிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்ட பழக்கங்கள்.

அதற்கு அப்பால் எனது வாசிப்பும் தேடலும் நீட்சி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.

நான் பிறந்தது மாவனல்லையில். சூழ வர இருந்தவை சிங்களக் கிராமங்கள்.

எனது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் அரசதுறையில் பணியாற்றுபவர்களும் மீதிப் பேர் வியாபாரத்திலும் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்ட சமூகம்.

இலக்கியம்,ரசனை இவற்றில் அதிக ஈடுபாடற்ற அல்லது அதற்கான நேரத்தை கொண்டிராத சமூகம்.

Academics அறிவுத்துறையில் அதிகம் ஈடுபடக் கூடியவர்கள் இருந்த போதிலும் எழுத்து,இலக்கியம் ஆக்கத் துறை சார்ந்த நுண்ணுணர்வுகள் முன்னுரிமை பெறாத சமூக ஒழுங்கு.

தமிழ் நூற்கள் வாங்குவதென்றால் கண்டிக்குச் செல்ல வேண்டும்.மாவனல்லை நூலகத்தில் சிங்கள நூற்களே அதிகமாயிருந்தன,மருந்துக்குப் போல சில தமிழ் நூற்கள்