(அ.வரதராஜா பெருமாள்)
இலங்கை தற்போது எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி, நாட்டில் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அடிப்படையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கு, வெளிநாடுகளுடனான இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி மற்றும் பொருளாதார உறவுகளின் பண்புகளே பிரதான காரணமென பொதுவாக கூற முடியும். உலகில் எந்த நாடும் ஏனைய நாடுகளுடன் பொருளாதார உறவுகளின்றி மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க முடியாது. அவ்வாறு எக்காலத்தும் இருந்ததில்லை. ஆனால் வெளிநாடுகளுடனான பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது கவனத்துக்கு – பரிசீலனைக்கு உரிய பிரதானமான விடயங்களாகும்.