எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 2)

  1. இலங்கையின் அரசியல் அமைப்பு… இது பல் தேசிய இனங்கள் வாழும் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை
  2. உலகப் பொருளாதாரம் குறிப்பாக பெருந்தொற்று கொரனா உக்ரேன் ரஷ்யா போர்.. இது உலகம் முழுவதற்கும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அதிக பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளாக அமைவது
  3. சுதந்திரத்திற்கு முன்னர், சுதந்திரத்திற்கு பின்னர் 1977 வரை, அதற்கு பின்னரான யுத்த காலம் 2009 வரை, யுத்தம் முடிவற்ற காலத்தில் இருந்து இன்று வரையிலான காலப் பிரிவுகளில் எப்போதும் நாட்டை முன்னகர்த்துவதற்கான அரசியல் சூழல் இல்லாமல் இருந்துவருவது
    அதாவது எக்காலத்திலும் பிரித்தாளும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு பயணப்படும் இனச் சமத்துவம் அற்ற அரசியல் செயற்பாடுகளை உடைய அரசியல் அமைப்பை அரசுகளை கொண்டிருந்தன
    இலங்கையிற்கு வருவாயை ஈட்டும் தொழில்களாக
  4. விவசாயம், கடற்தொழில்
  5. பெருந்தோட்ட தொழில்களால் வரும் வருவாய்
  6. அண்மைய உல்லாசப் பயணத் துறை
  7. ஆடை ஏற்றுமதி
  8. 1970 களின் பின்னரான மத்திய கிழக்கு, தூரக் கிழக்கு நாடுகளில் இருந்து வரும் அந்நியச் செலவாணி
  9. வரிவிதிப்புகளினால் ஏற்படும் வருவாய்
    என்பனவற்றை குறிப்பாக குறிப்பிடலாம்பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் சம்மந்தமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அவர்களிடம் இருந்து அதிக வினைத்திறனால் உருவாகும் உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது
  10. வடக்கு கிழக்கில் யுத்தம் வினைத்திறன் குறைந்த பட்டறிவினால் மட்டும் தொழில்களை கற்று அதில் ஈடுபடும் பாரிய இளைஞர் பட்டாளத்தையே விட்டுச் சென்றுள்ளது. இவர்களை அதிக வினைத்திறன் மிக்க இளைஞர் பட்டாளமாக இது வரை மாற்றப்படவில்லை
    உல்லாசத் துறையில் சர்வதேச நாடுகளின் பயணிகள் அதனை அனுபவிக்கும் அளவிற்கு உள்ளுர் மக்கள் அனுபவிக்க முடியாத பாரிய எற்றத் தாழ்வுகள் இலங்கை மக்களிடம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
    மேற்குலக நாடுகளில் இந்த ஏற்றத் தாழ்வுகள் குறைவு. அதனால் இந்த உல்லாச பயணத் துறையில் உள்ளுர் மக்களும் இணைந்து கொள்வது அதிகம் சாத்தியமாக இருக்கின்றது. இது போன்ற ஒரு நிலமை இலங்கையிலும் ஏற்படுதப்பட வேண்டும்.
    பொது விநியோகம் சங்கக் கடை முறமைகளை ஒழிகப்பட்டமையினால் உள்ளுர் உற்பத்திகளை சந்தைபடுத்திலிருந்து விநியோகம் விலைக் கட்டுப்பாடு என்பன முழுமையாக சீர் குலைந்த நிலை காணப்படுகின்றது
    2009 மே மாதம் பின்னர் உற்பத்திகளை உருவாக்க… அதிகரிக்க…. யுத்தகாலத்தில் கைவிடப்படட் தொழில்களை மீள் உருவாக்கம்…. ஆரம்பிப்பத்தல் என்பனவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை.
    இதில் அதிகம் கவனிக்கப்படாத பகுதிகளாக வடக்கு கிழக்கு காணப்படுகின்றது
    இலங்கை மக்களை அனைவரையும் இலங்கையாக உணர வைத்து ஐக்கியபடுத்தி உற்பத்தியில் நாட்டின் வளர்ச்சியில் முன்னோக்கி நகர்வதற்குரிய அரசியல் பொறி முறைகளை யுத்தம் முடிந்த பின்பும் உருவாக்கப்படவில்லை
    மாறாக ஒவ்வொரு காலத்திலும் சிறுபான்மையினரில் வலுவாக கல்வியில் தொழில் வாய்ப்பில் பொருளாதாரக் கட்டுமானத்தை அமைத்து முன்னேறும் சமூகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தல் என்ற பேரினவாத அரசின் செயற்பாடுகள் முதலில் தமிழர் பின்பு முஸ்லீம்கள் இனி மலையக மக்கள் என்றவாறான சிந்தனைச் செயற்பாடுகள்
    இலங்கையின் தற்போதைய கடன்களில்
    10 வீதம் சீனா
    10 வீதம் ஜப்பான்
    40 வீதம் இறமைப் பண முறி(ளுழஎநசநபைn உரசசநnஉல டிசநயம) யின் மூலம் கடன்

ஏனைய உள்ளநாட்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் 40 வீதம் என்பதாக கடன்கள் இருக்கின்றது
2009 இல் ஐஎம்எவ் இடம் 1.6 பில்லியன் டாலர் பெறப்பட்டு நாட்டை நகரமயமாக்கலே அதிகம் செயற்படுதப்பட்டன. மாறாக வருவாய் தரும் துறைகளில் முதலீடுகள் அதிகம் செய்யப்படவில்லை.
2016?6 மீண்டும் ஐஎம்எவ் இடம் 1.5 பில்லியன் கடனும் அடுத்த மாதம் 1.5 பில்லியன் சரவதேச நிதிச் சந்தையில் இறமை பிணை முறியாகவும் பெறப்பட்டன. இவைகளும் வருவாயைத் தரும் தொழில்களில் மதலீடகள் செய்யப்டவில்லை.
சென்ற வார சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி மூன்றாம் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதை கோடிட்டுக் காட்டி இருந்தனர். இது இன்று இலங்கையிற்கு மெத்தப் பொருந்தியும் இருக்கின்றது.
ஜஎம்எவ்(சர்வ தேச நாணய நிதியம்) இடம் கடன் பெறுவதல் தற்போது கவனம் செலுத்த வேண்டிய நிலையிற்கு தள்ளப்பட்டிருக்கும் இலங்கை கடன் வாங்கி கடனைச் செலுத்துதல் என்பiதாக காலத்தை கடத்துவதற்கே அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடன் வாங்கி முதலீடுகளில் வருவாய் தரும் முதலீடுகளில் உற்பத்திகளில் அதிகம் ஈடுபடுத்தாமல் கடன் வாங்கி கடனைக் கட்டுதல் அதற்கான வட்டியைக் கட்டுதல் என்பது மூழ்கும் கப்பலை மீட்க கப்பலுக்குள் நிரம்பிய தண்ணீரை அகற்றாமல் மேலும் தண்ணீரை உள்ளுக்குள் ஊற்றுவது போல ஆகிவிட்ட நிலமை தற்போது இலங்கையில்
அரசின் பார்வையில்… கொரனாவினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கம் அது உல்லாசப்பயணத் துறை பாதிக்கப்பட்டது, கூடவே மத்திய கிழக்கு தூரக் கிழக்கு ஆசிய நாடுகளில் இலங்கையில் இருந்து வேலையிற்காக சென்றவர்களின் வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி, ரஷ்ய உக்ரேன் யுத்தத்தினால் உலக சந்தையில் பொருட்களின் விலை ஏற்றம் தட்டப்பாடும் என்பன காரணங்களாக காட்டப்படுகின்றது
அதே வேளை எதிர்க்கட்சிகள் மக்கள் மீதான வரியை மூன்றில் ஒரு பங்காக குறைத்தினால் அரசிற்கான வருவாய் குறைந்ததே காரணம் என்றும்
மக்களைப் பொறுத்தவரை ஊழல் மிகுந்த ஆட்சியினால் இது ஏற்பட்டது என்பதாகவும்
சிறப்பாக தமிழ் மக்கள் தரப்பில் யுத்தமும் அதன் பின்னரான யுத்தத்தை தொடருவது போன்ற பேரினவாத செயற்பாடுகளுக்கான செலவீனங்களினால் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது என்பதுமாக கருத்துகள் நிலவுகின்றன
யுத்தத்த முடிவிற்கு பின்னர் பல தனியார் நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்கான அனுமதிகள் திறந்துவிடப்பட்டன இலங்கை அரசினால்
இவை மக்களுக்கான சிறு குறு நிதி கடன்களை அதிக வட்டியுடன் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வழங்கின.
மக்கள் இதனை தாராளமாக பெற்று தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஆடம்பர வாழ்கையிற்காக குறிப்பாக கைத்தொலை பேசி இரு சக்கர முக்சக்கர வாகனங்களை வாங்குதல் என்றளவிற்கு கட்டுப்பாடற்ற இறக்குமதி சூழல் உருவாக்கப்பட்டன.
இது அதிக நெருச்சலுடன் கூடிய சுற்றுச் சூழல் மாசுபடல் நாட்டை நகர மயமாக்கும் கட்டுப்பாடற்ற சிறிய கட்டங்களை கட்டுதல் அதற்கான தொழில் முயற்சிகள் ஏதும் அற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கே அதிக வாய்ப்பை ஏற்படுதின.
இறுதியில் மக்கள் வாங்கிய கடனையும் அதற்கு செலுத்த வேண்டிய வட்டியையும் செலுத்த முடியாது திவாலாகும் நிலமைகளும் இந்த வாகனங்களை பறிமுதல் செய்வதுமான சீரழிவுகள் என்ற நிலமைகளே அதிகம் ஏற்படுத்தின.
இலங்கையில் வழும் சாதாரண மக்கள் தமக்கு தேவையான அன்றாட உணவுப் பொருட்கள் ஏனைய பொருட்களை உற்பத்தி செய்தல் இதற்கு அப்பால் சிறு குறு தொழில் உற்பத்திகளை செய்வதில் அதிகம் முயற்சிக்கவில்லை… ஊக்கிவிக்கப்படவில்லை
மாறாக சந்திக்கு சந்தி கண்ணாடிகளால் அடைக்கப்பட்ட சாப்பாட்டுக் கடைகளும் குளிர்பானக் கடைகளும் அபிவிருத்தியாக முளைத்தன.
இலங்கையில் இருந்து எற்றுமதிக்காக செய்யப்படும் ஆடைகளுக்கான மூலப் பொருட்கள் அது பொத்தானாக இருக்கலாம் அவை கூட உள்ளுரில் உற்பத்தி செய்யப்படாமல் இறக்குமதியாகும் கப்பலை எதிர்பார்த்த நிலமைகைள் இருந்து வந்தன
அரசு குறிப்பாக ராஜபக்கஷ அரசுகள் நகரங்களை இணைக்கும் பெரும் தெருக்களை அமைத்து என்பது தேவையானதாக இருந்தாலும் நகரங்களை இணைத்து உற்பத்திப் பொருட்களை பரிமாறவேண்டிய அளவிற்கு உள்ளுர் உற்பத்திளை பெருக்கவில்லை
வேணும் என்றால் இவை இறக்குமதி செய்யபட்ட பொருட்களை விநியோகத்திற்கு அனேகம் பாவிக்கப்பட்டன என்று கூறலாம். அதுவும் அனேகம் ஆடம்பர பொருட்களின் விநியோகமே பெருக்கெடுத்தன. வருவாய் தரக் கூடிய துறைகளுக்கான விநியோகம் மிக அரிதாகவே நடைபெற்றன
அபிவிருத்தி என்பதில் தங்களுக்கு அதிகம் கமிசன் கிடைக்கக் கூடிய துறைகளில் பெற்ற கடன்களை பாவிப்பதல் அதிக கவனத்தை செலுத்தினர்
(தொடரும்….)