எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 3)

உண்மையில் யுத்தத்தின் பின்னரான காலத்தில் நாணயத்தின் பெறுமதி அதிகரித்திருக்க வேண்டும் தவறான பொருளாதார அரசியல் கொள்கைகள் செயற்பாடுகள் இதனை மறுவளமாக பயணிக்க வைத்துவிட்டது
யுத்தம் முடிந்த பின்னர் இனங்களுக்கிடையே இணக்கப்பாடு ஐக்கியப்படுத்திலை ஏற்படுத்தும் அதிகாரப்பரவலாக்கல் எல்லா மக்களையும் சமமாக பாவித்து இலங்கையர் என்ற உணர்வுடன் பயணப்பட்டு பொருளாதார மீட்சியை சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக யுத்த காலத்திலும் அதற்கு முன்பும் பாவிக்கப்பட்ட பேரினவாத சிந்னையின் அடிப்படையில் இலங்கையை ஆண்ட அரசுகள் தமது பயணத்தை தொடர்ந்தன.

என்ன ஒருவர் நண்பேன்டா என்று சொல்லிக் கொண்டும் மற்றயவர் நீ நண்பன் இல்லை என்று சொல்லிக் கொண்டும் தமது செயற்பாடுகளை ஓரே மாதிரியாக தொடர்ந்தனர்

யுத்தத்தின் காரணமாக நாட்டை விட்டு இடம் பெயர்ந்து புலம் பெயர் தேசத்தில் வாழும் இலங்கையரை குறிப்பாக தமிழர்களை நாட்டிற்குள் உள்வாங்கி அது முழுமையாகவோ அல்லது பகுதியாகவேனும் தொழில் அபிவிருத்தி முதலீடுகள் என்ற வகையிலான இலகு செயற்பாடுகள் நம்பிக்கை தரும் செய்றபாடுகளை எந்த அரசும் கொண்டிருக்கவில்லை.
அது மத்திய அரசாகவும் இருக்கலாம் மகாண அரசாகவும் இருக்கலாம் இருக்கின்ற அதிகார வரம்பிற்குள்; தேர்தல் வெற்றியிற்காக பேரினவாதத்தையும் குறும் தேசியவாதத்தையும் இரு தரப்பினரும் அதிகம் நம்பினர் செயற்பட்டனர்.

தமது தேர்தல் வெற்றியிற்கான சூழலை தொடர்ந்தும் யுத்த காலத்திற்கு முன்பும் யுத்த காலத்தின் போதும் சிறப்பாக அதன் பின்பும் தொடர்ந்தனர் இரு தரப்பினரும்.

சிந்தனை பண்பாடு கொள்கை செயற்பாடுகள் ரீதியிலான மாற்றம் எங்கும் எப்போதும் ஏற்படவில்லை யுத்தத்தில் பாடங்களை இருதரப்பும் கற்றுக் கொண்டதாக காண முடியவில்லை.

ஒரு புறம் காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக் கூறல் யுத்தக் குற்றம் என்பதான விடயங்கள் என்று தமிழர் தரப்பு கையில் எடுக்க

மறுபக்கம்
உங்களை கழுவில் ஏற்றாமல் விடமாட்டோம் என்றதற்கு 69 இலட்சம் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்ததாக ஒரு நாட்டின் தலைவர் தான் சகல மக்களுக்கான தலைவர் என்பதை மறுத்ததான பேச்சுகளும்

இடதுசாரியம் பேசிய 1970 களில் இருந்து பயணப்படும் ஜேவிபி போன்ற கட்சிகளும் வடக்கு கிழக்கு பிரிப்பு, 13 வது திருத்தச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட மாகாணசபையிற்கான எதிர்பிற்கு பிரோமதாசாவுடன் இணைந்த பயணம், யுத்தத்தின் தளபதியை அமெரிக்கா தனது கை பொம்மை ஐதே கட்சி ரணிலிற்கு பதிலாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்திய போது அவருக்கான ஆதரவு பிரச்சாரம், என்று பயணிக்க அதுபொலவே செயற்பட்டதுதான் தமிழர் மிதவாதத் தேசியத்தை காவும் தரப்பும்

நீண்ட காலமாக ஏற்படுத்தப்பட்டு வரும் இந்த பொருளாதார தாக்கத்தில் இருந்து விடுபட நீண்ட காலம் தேவைப்படும் குறைந்தது தசாப்பமாகவும் தேவைப்படலாம்

ஐரோப்பிய யூனியன் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டு நாடு திவாலாகும் நிலை கிரேக்கத்தில் ஏற்பட்ட போது ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து அந்த நாட்டை பிணை எடுப்பது போல் செயற்பட்டு நிலமைகளைச் சரி செய்ய இலங்கையிற்கு எந்த அமைப்பும் இல்லை அது சார்க் அமைப்பு உட்பட.
அப்படி யாரும் செயற்பட முற்பட்டால் அது தமது நாட்டின் இன்னொரு மாநிலமாக கருத்தும் செயற்பாட்டிற்குள் தள்ளுவதாக அமையும் இதற்கான சாத்தியப்பாடுகள் தற்போதைய பூகோள அரசியல் இல்லை என்றே கருதுகின்றேன். இதற்கு அப்பால் அது தவறான அணுகு முறையும் கண்டனத்திற்குரிய செயற்பாடும் ஆகும்

இந்தியாவின் பெரியண்ணன் என்ற சிந்தனையின் செயற்பாடும்
சீனாவின் பட்டுப் பாதையிற்கான ஒரு புள்ளியாக இலங்கையை பாவித்தல் என்பதுவும்

மேற்குலகின் அமெரிக்காவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தனது செல்வாக்கு வலயத்திற் வைத்திருப்பதற்கு என்றாக
இலங்கையை பாவிக்கவே உதவிகளை செய்தல் என்பதை நகர்த்த முற்படுவர் இவர்கள்

தற்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு அண்மையாக 1930, 1970 களில் ஏற்பட்டாலும் அன்றைய காலகட்டங்களில் உள்நாட்டிலும் சர்வ தேச அளவிலும் நிலவி சூழல் அதிலிருந்து இலங்கை மீண்டு எழுவதற்கு அதிக காலம் எடுக்காது வெளிவந்து போல் தற்போது வருவதற்கான வாய்ப்புகள் குறைவு

ஆட்கள் மாற்றமோ ஆட்சி மாற்றமோ தற்போதைய பிரச்சனைக்கு தீர்வாக அமைய மாட்டாது மாறாக மக்கள் போராட்டம் அமைப்பை (சிஸ்டம்) மாற்றுவதாக இருக்கவேண்டும், ராஜபக்சாகளை வீட்டுக்கு அனுப்புவது தொடக்கமாக இருக்கவேண்டுமே தவிர அது முடிவாக இருக்கக்கூடாது.
ஊழல் புரிந்தவர்களை, இனவாதிகளை, இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த அனைத்து அரசாங்கங்களினதும் பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் ஆகியோரையும் தூக்கி எறியாமல் போராட்டம் நிறுத்தப்படக் கூடாது

அதே சமயம் இப்போராட்டம் ஊழலுக்கு எதிரான போராட்டமாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது. இடதுசாரிகள் பலர் ஊழல் அற்றவர்கள்தான் ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட 1970 களில் அமைக்கப்பட்ட ஆட்சியின் அனுபவங்களை நாம் உள்வாங்க வேண்டும்.

இதற்குள் பிலீக்ஸ் டயஸ பண்டாரநாயக்காகளின் கரங்கள் வலுபட்டுப் போனதை நாம் பாடங்களாக கொள்ள வேண்டும்

இவர்கள் காலத்தில்தானே மலையக தமிழ் மக்கள் அதிகம் கண்ணீர் சிந்தினர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இன்று நடைபெறும் போராட்டத்தில் ஊழலை ஒழிப்பதில் காட்டப்படும் முக்கியத்துவம் இனவாதத்தை ஒழிப்பதிலும் காட்டப்பட வேண்டும்.

இதன் மூலமே மக்களை இலங்கையர் என்று ஒன்றுமைப்படுத்தி அபிவிருத்திக்கான சரியான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும்.
இதனால் போராட்டம் அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டமாக மட்டுப்படுதப்படாது அரச இயந்திரத்திற்கு எதிரான இனவாதிகளுக்கும் எதிரான போராட்டமாகவும் விரிவடைய வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக போராட்டம் அரசியல், பொருளாதார, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டமாக இது பரிணாமம் அடைய வேண்டும்.

இதுவே எமது அடிப்படை கொள்கையாக இருத்தல் வேண்டும். இல்லையேல் இப்போராட்டம் வெறுமனே கோத்தா கோ கம வின் ஆர்ப்பாட்டமாக நாளடைவில் அடங்கிப்போகும். நீர்த்துப் போகும்
ரஷ்யாவின் புரட்சி போராட்டத்தில் ஆரம்பித்து மாற்றத்தை ஏற்படுதியது அல்லவா

கியூபாவிலும் நிக்கரகுவாவிலும் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகள் மாற்றத்திற்கான வெற்றியாக அமைந்தன அல்லவா

துனிஷயாவில் நடைபாதை வியாபாரின் போராட்டத் தீப்பொறி ஆகி அரபு வசந்தமாக மாற்றம் பெற்று பெரும் எழுச்சியை ஏற்படுத்தினாலும் புறச் சக்திகளால் அது மழுங்கடிக்கக்கப்பட்டு அன்று இல்லாமல் போனது

அமெரிக்க நாட்டில் மாட்டின் லூதர் கிங்கின் கறுப்பினத்தவரின் போராட்டம் ஒரு மாற்றத்தை கொண்டுவரவிட்டாலும் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

தமிழ் நாட்டில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் முடிவுகளை நாம் அனைவரும் அறிவோம்…. இறுதியல் வறுமையான மீனக் குப்ப மக்களின் குடிசைகளைக் கொழுத்தியும் அவர்களை துன்புறுததியதக முடிந்தது தமிழ் ஆட்சியல் தமிழ் பொலிசாரினால்தான்

இதன் அடிப்படையில் இதுவரையில் தலமையற்று இளைஞர்கள் நடாத்தும் போராட்டங்கள் வெளிநாட்டுச் சக்திகளின் கரங்களினால் மழுங்கடிக்கப்பட்டு நீத்துப் போகச் செய்யப்படலாம் என்ற பாடங்களை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்

இருக்கும் திருடர்களை அகற்றி இன்னொரு திருடர் கூட்டம் ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுக்கலாம்.

புதுத் திருடன் தன் சொல்லுக் கேட்டால் போது என்று வெளி நாட்டுச் சக்த்திகள் செயற்படாது என்று உறுதியாக கூற முடியாது

(தொடரும்….)