(ம.செந்தமிழன்)
நண்பர்களே,
சென்னை களத்தை நோக்கி நானும் கிளம்பிக்கொண்டுள்ளேன். ஏற்கெனவே செம்மைக் குடும்பத்தவர் சில பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரு செயல்பாடுகள், இப்போதைய உடனடித் தேவைகள்.
1. மெரினாவில் கூடியுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் தேவை. செம்மைச் சமூகம் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளது. எம்மிடம் இருக்கும் மளிகைப் பொருட்களைக்கொண்டு துவங்கிவிட்டோம். இப்பணியில் பங்கேற்க விரும்புவோர், தம் வீட்டிலேயே சமைத்து இலையில் கட்டி எடுத்து வரலாம். (பிளாஸ்டிக் தாள்களில் கட்டிவிடாதீர்கள்) அல்லது மளிகைப் பொருட்களைச் செம்மைச் சமூகப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கலாம். சமைத்தல், எடுத்துச் செல்லுதல், பரிமாறுதல் ஆகிய பணிகளில் ஈடுபட தன்னார்வர்கள் தேவை. இப்பணிகளுக்கான தொடர்புகளுக்கு: காந்திமதி: 97914 90365, உழவர் ஆனந்த்: 98409 60650, நளினி: 74012 34981.
2. சென்னை மெரினாவில் நீண்ட நேரமாக மக்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பலாம். ஆனால், மக்கள் கூட்டம் குறையாதிருக்க வேண்டும். ஆகையால், சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் வாழும் மக்கள் கூட்டம் கூட்டமாக மெரினா நோக்கிக் கிளம்புங்கள். முழு நாள் இல்லாவிட்டாலும் சில மணிநேரம் அல்லது சில நிமிடங்களாவது கூடலில் கலந்துகொள்ள வேண்டும்.
பெண்கள், குழந்தைகள், சிறுர்வகளோடு ஒரு விழாவிற்குச் செல்வதைப் போல புறப்படுங்கள். களத்தில் வழிநடத்தல் தேவைப்பட்டால், செம்மை சமூகப் பொறுப்பாளர்களைத் தொடர்புகொள்ளுங்கள்: இராஜேஸ்வர்: 97915 12095, இராஜராஜன்: 98407 12155, திருமுருகன்: 96008 93550.
மிக முக்கியமாக, களத்திற்கு வருவோர் உங்களிடம் உள்ள இசைக்கருவிகளை எடுத்து வாருங்கள். பறை, மேளம் போன்றவை இருந்தால் நல்லது.