(ஜனகன் முத்துக்குமார்)
கடந்தாண்டு இறுதியில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, மற்றுமொருமுறை ஒருமனதாக லெபனானில் குடிகொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையை இன்னொராண்டு குடியிருக்கச்செய்வய்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானன், “இத்தீர்மானமானது நிலைமையை மாற்றக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திர சாதனை” என்றும், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, குறித்த தீர்மானம் அமைதிகாக்கும் படையினர் தமது செயற்பாட்டை செய்வதற்கு பூரணமான அதிகாரம், உந்துதலை வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார். எனினும், மேற்குறித்த எதுவுமே குறித்த தீர்மானம் மூலம் நிகழப்போவதில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். மேலதிகமாக இத்தகைய கூற்றுக்கள் அமைதிகாக்கும் படை, லெபனிய அரசியலில் கட்டவிழ்க்கப்படவேண்டிய சிக்கல்களை புரிந்து கொள்ளாத நிலைமையையே நிரூபிப்பதாய் அமைகின்றது.