(முகம்மது தம்பி மரைக்கார்)
‘சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது’ என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.