(Kalai Marx)
மத்திய கிழக்கு நாடுகளில் 50 வருடங்கள் சர்வாதிகார ஆட்சி நடத்திய கபூஸ் மறைவு குறித்து ஊடகங்கள் இரங்கல்பா பாடி ஓய்ந்து விட்டன. அநேகமாக எல்லா ஊடகங்களும் அவரைப் பற்றி நல்லதாகவே சொல்லி புகழாரம் சூட்டின. சமூக வலைத்தளங்களில் கூட எதிர்மறையான விமர்சனத்தைக் காணவில்லை. யாரும் சர்வாதிகாரி என்ற சொல்லை பாவிக்கவில்லை. ஏனென்றால் கபூஸ் மேற்கத்திய நாடுகளுக்கு விசுவாசமான அரசியல் தலைவர். அதனால் அவர் இறந்த பின்னரும் போற்றப் பட்டார்.