
(சாகரன்)
வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை இலங்கை அரசாங்கத்தின் மிக மோசமான செயற்பாட்டை காட்டி நிற்கும் கொலை. இலங்கை பேரினவாத அரசாங்கத்தின் தனது நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தின் மீதான மனித உரிமை மீறல்களின் உச்சத்தை குறியீட்டு ரீதியில் உலகிற்கு எடுத்துக் காட்டிய வரலாற்று நிகழ்வு. இது 1983 ஜுலை 25, 28 இரு தினங்களாக நடைபெற்றன.