கனேடியத்தமிழ்நாடோடிக்கதை

(மே 22 மணிவிழாக்காணும் சேரன் ஒரு நாடோடிக்கதையின் கதாநாயகனும். புலிப்பாசிச சேவைகளுக்காக சேரன் மாமனிதர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்)

பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி குறைபட்டுக்கொண்டாரம். இதற்கு பொட்டரின் மனைவி ” யக்கா இதுக்கெல்லாம் போய்க்கவலைப்பர்றியளே, ஏன் உங்கட மகனை உங்கடை “இஞ்சேருங்கோ’ விட்டைச் சொல்லி லண்டன் சீமைக்கனுப்பி இங்கிலீசில ஒக்ஸ்போட்டில படிப்பிக்கலாமே ” என்று ஆலோசனை சொன்னா.

வீடு திரும்பிய மதிவதனி முதல்வேலையா தலைவரைக் கண்டு மகனை லண்டன் ஒக்ஸ்போட்டுக்கு அனுப்பிபடிப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே தேசியத்தலைவர் மதியுரைஞர் நிதானமாயிருக்கிற, தூசணம் கதைக்காத நேரமாகப் பார்த்து அவரைச்சந்தித்து மகனுக்கு ஒக்ஸ்போட்டுக்கு அனுமதி எடுத்துத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

சிங்கத்தார் தலைவரை ஒரு மார்க்கமாகப் பார்த்துக்கொண்டு

” அவன் உன்ரை மோனுக்கு அங்கை அனுமதி தரமாட்டான் கண்டியோ. ஏனெண்டால் நீதான் ஒக்ஸ்போட்டையே ஒரு கலக்கு கலக்கிய கதிர்காமர், அத்துலத் முதலி எல்லாரையும் மண்டையில போட்டனி”

என்று திருப்பி அனுப்பினார்.

இதைப்போய் தலைவர் தன்னுடைய மனுசியிடம் சொல்ல மனமுடைந்த மதிவதனி மறுபடியும் பொட்டற்ரை மனுசியிடம் அழுது ஆலோசனை கேட்டார்.

“யக்கா இதுக்குப் போயி அழுவுறியே, நீயு உண்ட மோனை அமெரிக்காவில ஹாவாட்டுக்கு அனுப்பிப்படிப்பிக்கலாம் கண்டியே, ஹவாட் ஒக்ஸ்போட்டுக்கு ஒரு இஞ்சி மேலதான் இருக்கு”

என்று மதிவதனியை பொட்டற்ர மனுசி தேற்றி அனுப்பினா.

மறுபடியும் மதிவதனி தலைவரைப் போய் நச்சரிக்க தலைவர் பாலா அண்ணையிட்டை ஓடினார். சிங்கத்தாருக்கு உள்ளுக்குள்ள கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு

“எடேயப்பா உனக்கு விசயங்கள் விளங்கிறேல்லையே. ஹவாட்டில ஒருக்காலும் உன்ரை மோனைப்படிப்பிக்கவிடமாட்டான். ஏனெண்டால் நீ மண்டையில போட்ட நீலன் திருச்செல்வம் அங்கை படிச்சது மட்டுமில்லை பிறகு அவன் அங்கை படிப்பிச்சவன் கண்டியோ” என்றார்.

இதைக்கேட்ட தலைவர்

” இந்தியாவிலையும் அவன் போய்ப்படிக்கேலாது. அப்பண்ணை என்ர மோன் படிக்க இடமே இல்லையே” என்டு சினந்தார்.

” வழி இருக்கு, வழி இருக்கு” என்று புன்னகைத்த சிங்கத்தார் ” இந்தியாவுக்கு உன்ரை பொடி போகேலாதுதான். ஆனால் இந்தியாக்காறன்ரை யுனிவேசிற்றி ஒண்டு கனடாவில வச்சு தமிழ் பீ.ஏ டிகிறீயை இங்கிலீசில படிப்பிச்சு எடுத்துக் குடுக்கிறான். அங்கை உன்ரை மேனுக்கு அட்மிஷன் எடுத்துத்தாறன். பொடிப்பிள்ளையற்ரை மாதா பிதாவின்ரை சொந்தங்கள் எல்லாம் கனடாவிலதானே கூட” என்டு முடித்தார்.

இந்த நற்செய்தியை தலைவர் மனுசியிடம் போய்ச்சொல்ல மனுஷி கேட்டார்.

“அந்தக்கனடாக் கல்லூரியிலை சம்பந்தப்பட்ட ஆக்கள் ஆரையும் நீங்கள் சுடேல்லையோ”என்டு கேட்டார்.

இதற்கு தலைவர் ” இல்லையெணை, அது எங்கடை தமிழாக்கள் தான் அதை நடத்திகினமாம் ” என்டார்

” அப்ப இனிம அங்கை ஆரையும் சுடமாட்டன் எண்டு சத்தியம் பண்ணித்தாங்கோ, ஆரோ கவிஞராம், அங்கை படிப்பிக்கிறாரம், உங்களுக்கு எதிரா பேசியும் எழுதியும் திரியிறாராம். அவரையும் சுடமாட்டன் எண்டு சத்தியம் பண்ணித்தாங்கோ”

இதைக்கேட்ட தலைவர் விழுந்து விழுந்து சிரிச்சுப்போட்டுச் சொன்னார்.

” அட அந்தக் கவிஞர். ஒருகாலத்தில அவன் எங்களுக்கெதிரா கெம்பிக்கொண்டு திரிஞ்சவன்ந்தான். இப்பதான்அவன் ஒரு நாய் மாதிரி நம்மடை காலையே சுத்திச்சுத்திவாறான். அவனை என்னெண்டு மண்டையில போர்றது”

(கனடாவாசியான சக்கரவர்த்தி கோர்த்த இந்த
நாடோடிக்கதையை நட்சத்திரன் செவ்விந்தியன் “சுட்டது”. 2006 ம் ஆண்டு
தேனீ இணையத்தில் வெளியானது)