மாவட்டம் மட்டும் பார்க்கப்படவில்லை, நான் காசர்கோடு மாவட்டம் என்று சொன்னாலே மற்ற மாவட்டத்துக்காரர்கள் ஒருமாதிரியாக்தான் பார்க்கிறார்கள் என்று தெரிவிக்கின்றனர். அப்படி என்ன காசர்கோடுக்கு நேர்ந்துவிட்டதா.
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸால் இதுவரை 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 76 பேர் அதாவது பாதிக்கும் மேற்பட்டோர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் விஷயம். கேரள மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்கப்பட்ட பெரும்பலானோர் இந்த மாவட்டத்தைச் ேசர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் வெள்ளி்க்கிழமை ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது, அதில் 34 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாகத்தான் காசர்கோடு என்றாலே சிறிது, ஏற, இறக்க பார்த்துவிட்டு தள்ளிநின்று பதில் அளிக்கின்றனர்
அதுமட்டுமல்லாமல் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 17-ம்தேதி மாணவியின் தந்தை வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்தார் அவருக்கு உடல்நிலை சரியில்லாததையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ்தொற்று இருப்பது உறுதி ெசய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டனர். இந்த சூழலில் 10-ம் வகுப்பும் படிக்கும் மாணவி பொதுத்தேர்தில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார்
அந்த மாணவிக்கு நேற்று கரோனா வைரஸ் தொற்று இருந்ததால், அந்த மாணவி தேர்வு எழுதியபோது அரங்கில் இருந்த அத்தனை மாணவிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியுடன் பழகிய சகதோழிகள் அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினரும், போலீஸாரும் இறங்கியுள்ளனர். இதனால் அந்த மாணவி படித்த அரசுப்பள்ளி பெரும் பதற்றத்தில் இருக்கிறது.
இந்த மாவட்டம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் “ காசர்கோடு மாவட்டத்தில் அதிகமான கரோனா நோயாளிகள் வந்துகொண்டிருக்கிறார்கள், அங்கு சிலகட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். கரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள், நாடுகளில் இருந்து காசர்கோட்டுக்கு மக்கள் வருவதால் பாதிப்பு அதிகரிக்கிறது. யாருக்கேனும் இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக சுகாதரத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்