1983ம் ஆண்டு ஜுலை இல் நடைபெற்ற இந்த இனவழிப்பு என்பதான செயற்பாடு இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் இனிமேல் பெரினவாதத்திற்கு உள்ளான பெரும்பான்மை மக்களுடன் இணைந்து பயணிப்பது இனிமேல் சாத்தியம் இல்லை என்ற உணர்வை சமானிய தமிழ் பேசும் மக்களிடம் ஏற்படுத்தியது.
இதனை மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றியவர் ஜேஆர் ஜெயவர்த்தனா என்ற இலங்கையில் அதிமேதகு முதல் ஜனாதிபதி ஆவார்.
அப்போ அவர் ஆட்சி அமைச்சர் அவையில் இருந்தவர்கள் கட்சியில் இருந்தவர்கள் எதிர்கட்சி வரிசையில் இருந்தவர்கள் என்றாக அவர்களுக்கு இதில் பங்கு இல்லையா என்றால் அவர்களுக்கும் பங்கு உண்டு.
அவை அவர் கட்சி உறுப்பினர் என்பதாக இந்த திட்டமிடலுக்கும் செயற்பாட்டிற்கும் அன்று முழுமையான அங்கீகாரத்தை வழங்கியே அவர்கள் செயற்பட்டார்கள் என்பேன்
இவர்களில் யாரும் இதனை பாராளுமன்றத்திலோ அல்லது பொது வெளியிலோ கண்டிக்கவல்லை.
இதனைக் கண்டித்து தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனமா செய்வில்லை.
இதில் குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்.
ஜேஆரின் மருமகனாக அமைச்சர் அவை உறுப்பினராக கட்சி உறுப்பினராக பேரினவாதியாக இதனை முழுமையாக ஆதரித்தார். இதனைச் செயற்படுத்துவதற்குரிய செயற்பாடுகளில் முக்கிய பங்கும் ஆற்றினார்.
பிரதான எதிர் கட்சியாக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அன்று மிகவும் பலவீனமான நிலையில் பாராளுமன்றத்தில் இருந்திருந்தாலும் அவர்கள் தமது பாராளுமன்ற பதவியை துறந்து தமது எதிர்ப்பை காட்டவில்லை. இதற்கு எதிராக பொது வெளியில் பேசவில்லை…. போராட்டங்கள் நடாத்தவில்லை.
மாறாக இந்த ஜுலை கலவரத்திற்கான நியாயங்களi மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு முன்வைத்தனர்
அதன் உச்சம்தான் கனத்தை மயானத்தினல் உடல் எரிப்பின் பின்பு தொலைக்காட்சியில் தோன்ற ஜேஆர் பேசிய ‘போர் என்றால் போர்….” என்று வன்முறைக்கு அறைகூவல் விடுத்த…. தமது நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அழைப்பு விடுத்த போர் முரசு ஆகும்
‘குரல் அற்றவர்களாக…?’ இருந்த சில இடதுசாரிகள் இதனை எதிர்த்து ஈனக்குரலில் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும்
அன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்களுகு;கு எதிராக தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்ற ஜேவிபி போன்றவை தமக்கான முழுப்பலத்துடன் இதில் செயற்படவில்லை.
உண்மையில் அன்று அவர்கள் கள்ள மௌனம் செய்தனர்.
ஆனால் பொது மக்களாக சாதாரண சிங்கள பொதுமக்கள் மனிதாபிமானத்தில் உச்சத்தில் நின்று பல உயிர்களை காப்பாற்றினார்கள் அடைகலம் கொடுத்தனர்.
ஆனால் இவர்கள் கூட வீதியில் இறங்கி அரகலய போல் மறியல் போராட்டத்தையே உண்ணாவிரதத்தையோ செய்வில்லை.
கணிசமாக முஸலீம் சகோதரர்கள் இதில் தமது உயிரைப் பயணம் வைத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள் என்பது அன்றைய நிலை.
யாழ்ப்பாணத்தில் இருந்து… வடக்கில் இருந்து முஸ்லீம்களை தமிழீழு விடுதலைப் புலிகள் இனச் சுத்திரிகரிப்பை செய்த போது தமிழ மக்கள் இவ்வாறுதான் செயற்பட்டனர்.
பலவீனமான நிலையில் இருந்த சில தமிழ் மக்கள் சாப்பான கட்சிகள் கண்டனம் எதிர்ப்பை தெரிவித்திருந்தாலும் அவர்கள் தம்மையே புலிகளிடம் இருந்து காப்பாற்ற முடியாத சூழலில் இந்த மக்களின் துரத்தல்களை இடப் பெயர்வை வலிந்து துரத்தப்பட்ட நிகழ்வை நிறுத் முடியவில்லை.
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஏற்படுத்திய சகோதர உறவுகள் பற்றிய சந்தேகங்கள் மிக இலகுவில் தீர்ந்து போகவே இல்லை இன்றுவரை.
இனியும் போகப் போவதும் இல்லை என்றாகவே இலங்கையின் பேரினவாத அரசுகளில் செயற்பாடுகள் தொடர்கின்றன.
இவ்விரு சந்தர்பங்களிலும் பாசிசச் செயற்பாடுகளே தற்காலிக வெற்றிகளை குவித்தன.
கூடவே இது முழு இலங்கையிலும் சமாதான சக வாழ்வை இவை அதிகம் தகர்த்தன.
அப்போ இதற்கு முன்னால் பின்னால் ஏதும் நடைபெறவில்லையா என்றால்….? நடைபெற்று இருந்தன.
ஆனால் அடையாளப்படுத்தும் அளவிற்கான செயற்பாடுகளாக திருப்பங்களை தறித்ததானா உறவுகளை இலகுவாக ஒட்ட முடியாத அளவிற்கு அதிகம் செய்து முடித்தவை இவை இரண்டுமே
2009 மே இல் நடைபெற்ற முள்ளிவாய்கால் படுகொலை உண்மையில் ஒரு மிருகம் அப்பாவி மக்களை சிறைப்பிடிக்க மறு மிருகம் கொன்று குவித்து என்பதான நிலமையை நாம் ஏற்றாக வேண்டும்.
இது இருதரப்பு கொலைகளுடன் அரங்கேறிய நிகழ்வு.
முதல் இரண்டும் ஒரு தரப்பு மேலாண்மை செலுத்தி ஆயுதம் தரித்து ஆயுதம் அற்றவர்களை ஒடுக்கு முறைக்குள் கொலைகளுக்கு உள்ளாக்கியது விரட்டி அடிக்கப்பட்டதாக நடைபெற்றன
ஒரு தரப்பு நிராயுத்பாணிகளாக நின்ற நிலையில் அது சிறையில் ஆகட்டும் அதற்கு வெளியே ஆகட்டும் வெட்டிக் குவித்து அடிச்சு கலைத்த நிலையில் அனாதரவாக அவலக் குரல் எழுப்பிய ஜுலை கலவரம் அதனை அடையாளப்படுத்தும் கறுப்பு ஜுலை
வெலிக்கடை சிறைப் படுகொலை அதற்கு முன்னரான அவசர புத்தியில் நடாத்தப்படதிருநெல்வேலியில் நடைபெற்ற 13 இராணுவத்தின் மீதான கண்ணி வெடித் தாக்குதல் என்பதாக கடந்த அந்த நாட்களுக்கான நிவாரணம் மன்னிப்பு புனருத்தாரணம் என்றாக இன்று வரை இலங்கையை ஆண்ட அரசுகளில் எதும் உண்மையாக செய்வில்லை.
ஜூலை 25, 1983 வெலிக்கடை சிறைச்சாலையில் தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், தேவன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
சந்திரிகாவின் மன்னிப்பும் தற்போதைய விஜதாச ராஜபக்ச மன்னிப்பும் இதற்கு போதுமானவையா என்றால் அதனை ஒட்டிய அரசுகளில் அடுத்த நடவடிக்கைகள் அதனை உண்மையாக சொன்னதாக உணர்த்துவதாக இல்லை என்பதே இங்கு கவனத்தில் முதன்மை பெறுகின்றது
இந்த ஓட்டத்தில் புலிகளால் நடாத்தப்பட்ட கந்தன் கருணை படுகொலை என அறியப்படும் தமிமிழ் பகுதியில் நல்லூரில் அவர்களால் அடைத்து வைக்கப்பட்ட 60 வரையிலான மாற்றுக் கருத்தாளர்கள் மாற்று விடுதலை அமைப்பினரை நிராயுதபாணிகளாக இருந்து அவர்களின் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த சங்காரத்தையும் நாம் வரலாற்றில் இருந்த வசதியாக மறந்தும் பயணிக்க முடியாது.
கொலைகள் எவ்வழியில் அது ஜனநாயக மறுப்பாக மேலாண்மை செலுத்துவதாக இன வன்முறையாக இனச் சுத்திகரிப்பாக எங்கு நடந்தாலும் எம் குரல்களை எழுபபுவோம்.
அது பாலஸ்தீனத்திற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது