உன் தமிழ் என்னையும் கவர்ந்தது. உன் பேச்சு என்னை ஈர்த்து. உன் எழுத்து என்னையும் எழுதத் தூண்டியது. உன் (திராவிட)இயக்கம் எனக்கு பிரமிப்பை தந்தது. உன் அரசியல் 25 இலட்சம் ஈழத் தமிழ் மக்களின் மேல் உனக்கிருந்த பற்று அக்கறையை மாகாண சபையை கலைத்து விடு என்ற போது எனக்கு புரிந்தது. உன் வன்மம் என் தோழன் நாபாவின் கொலையில் எனக்கு பாடம் சொன்னது. உன் ஆழுமை தனி ஒருவனாக மட்டும் வென்று(ராஜீவ் கொலைக்கு பின்பு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில்) சட்டசபை சென்ற போது புரிந்தது.
உன் தவறு உன் ஆட்சியின் சில காலங்களில் உணரப்பட்டது. உன் நிர்வாகம் தமிழ் நாட்டின் வளர்சியில் வெளித் தெரிந்தது. உன் பகுத்தறிவு மஞ்சள் சால்வையுடன் மங்கிப் போனது. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி உன் புகழ் தமிழர் வரலாற்றில் இந்திய வரலாற்றில் ஈழத் தமிழர் வரலாற்றில் இருந்து கொண்டே இருக்கும். நீ நல்லவன்தான்……? உனக்கு வேண்டிய அரசியல் உன் மீது பழியைப் போட வாய்பை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் நீ வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய் மனிதர்களின் இதயத்தில். சென்று வாருங்கள் தலைவர் கலைஞரே.
(Saakaran)