(Vijay Baskaran)
புலிகள் அமைப்பின் கொலைவெறியின் உச்சமாக நடந்தகொலைகள்.கிழக்கே இந்து இஸ்லாமிய மக்களிடையே பிளவை ஏற்படுத்த நடந்த படுகொலைகள்.ஒரு போராட்டத்தின் பெயரால் அறுபதுக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட அதுவும் அப்பாவிகளை தொழுகையின்போது சுட்டுக் கொன்றார்கள்.
இது இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான படுகொலைச் சம்பவம்.1983 இல் தமிழ் கைதிகளை வெலிக்கடை சிறையில் வைத்து சிங்கள கைதிகள் குற்றவாளிகள் படுகொலை செய்தனர்.இதில் 52 கைதிகள் கொல்லப்பட்டனர்.இது குற்றப்பின்னணியோடு சம்பந்தப்பட்டவர்களால் நடத்தப்பட்டது.ஆனால் காத்தான்குடிபடுகொலைகள் விடுதலை போராளிகள் என தம்மை அழைக்கும் ஒரு கும்பலால் நடாத்தப்பட்டது.
குற்றவாளிகளுக்கும் போராளிகளுக்கும் வித்தியாசம் உண்டு.குற்றவாளி யாரையும் கொலை செய்வான்.போராளிகள் அப்படி அல்ல.ஆனால் காத்தான் குடியில் போராளிகள் என அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட படுகொலை இது.
இந்தக் கொலைகள் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலரால் நடத்தப்படவில்லை.பிரபாகர்னின் அங்கீகாரத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்டவை.இப்போது சிலர் பிரிந்துபோன கருணாவை பொறுப்பாளியாக்கி புலிகள் அமைப்பை புனிதப்படுத்த முயல்கிறார்கள்.
கருணாதான் செய்தார் என்றால் கருணா மீது ஏன் அன்றுநடவடிக்கை எடுக்கவில்லை ?
அதைத் தொடர்ந்து பத்து வருடம் அந்த அமைப்பின் பொறுப்பாளராக கருணாவே தொடர்ந்தும் இருந்தார்.அவர் வெளியேறிய பின்பு குற்றம் சுமத்துவதன் நோக்கம் என்ன?
அந்தப் படுகொலைகளை இன்றுவரை ஏன் புலிகள் கண்டிக்கவில்லை.?
இந்தப் படுகொலைகள் நிகழத்தப்படுவதை கருணா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்பதும் உண்மை.ஆனால் கருணாவை மட்டும் குற்றவாளியாக்க முடியாது.
இந்தக் கொலைகளை மதரீதியாகப் பார்த்தாலும் புலிகளைப் பொறுத்தவரை கொலைக்கு ஒரு காரணம் தேவை.அதற்கு மதத்தை பாவுத்துள்ள்ளார்கள்.ஏனென்றால் ஏற்கனவே ரெலோ அமைப்பை அழித்தபோது பல நூறு தமிழ் இளைஞர்களையே வீதியிலே எரியும் நெருப்பில் உயிரோடு எறிந்து வேடிக்கை பார்த்தவர்கள்.புலிகள் அமைப்பு மதவெறி பிடித்த அமைப்பு அல்ல.கொலைவெறி பிடித்த அமைப்பு.கொலைகள் அவர்களுக்கு பிடித்தமான கலை.அவ்வளவுதான்.
நினைத்துப் பார்க்கவே முடியாத பயங்கரம் நிறைந்த காத்தான்குடி படுகொலைகள் இலங்கை வரலாற்றின் மிக துயரமான பக்கம்.புலிகளின் தலைவர் பிரபாகரன் அல்ல.பிரபா அசுரன்.புராண கதைகளில் கற்பனையாக புனையப்பட்ட அசுரன் போலவே நிஜத்தில் பிரபாகரன் வாழ்ந்தான்.
காத்தான்குடியில் கொல்லப்பட்ட அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.அவர்களை கொன்றவர்களும் அழிக்கப்பட்டு விட்டார்கள்.ஆனாலும் அந்த வலிகள் போகாது.