காந்தியார் கல்கத்தாவிலிருந்து நேரே தமிழ்நாட்டுக்கு வந்தார்.
வழியே ஒரிசா – ஆந்திராவைச்
சார்ந்தோரெல்லாம் எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
பெங்களூர் வாருங்கள்….நல்ல தட்பவெப்பநிலை…லட்ச ரூபா நிதியும்
தருகிறோம் என்றார்கள்.
அழைத்த இடத்துக்கெல்லாம் செல்லாமல் – அழைக்காத தமிழ்நாட்டுக்கு வந்தார்.
சென்னை தியாகராய நகரில்
பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார்.
அங்கிருந்து கிளம்பி மதுரை
மீனாக்ஷி அம்மனை வழிபடக் கிளம்பினார்.
காரணம் –
தாழ்த்தப்பட்டோர் என்று ஆலயங்களுக்கும் நுழையவிடாமல் தடுப்பிக்கப்பட்டிருந்த அரிஜனங்களை மதுரை மீனாக்ஷி கோவிலின் உள்ளே அனுமதித்ததால் – தானும் அங்கு
சென்று வழிபட விரும்பினார் மகாத்மா.
…இதிலிருந்து ஹரிஜன சேவையையும்
ஆலய பிரவேச இயக்கத்தையும்
காந்திஜி எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார் என்று தெளிவாகிறது.
எழுத்தாளர்
‘கல்கி’ இரா.கிருஷ்ணமூர்த்தி
புகைப்படத்தில் :
மதுரை மீனாட்சி கோவிலில் காந்தி.
FEBRUARY 3 – 1946