காற்றாலைகள்

இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் .
குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் .
இதில் உள்ள சாதக பாதகங்களை எனக்கு தெரிந்தமட்டில் பகிர்கிறேன்.
1 பாரிய அணைகட்டுககளைக் கட்டி நீர்தேக்கங்கள் உருவாக்கி அதில் இருந்து மின்சாரம் பெறும்போது ,
A இதற்கு பெரியளவில் காணி சுவிகரிக்கப்படவேண்டும் .இக்காணி சுவிகரிப்பில் பல பொதுமக்கள் தமக்குரிய நிலங்களை இழக்கின்றனர் .
B இந்நிலங்களை வாழிடமாக கொண்ட கானுயிர்கள் பாதிக்கப் படுகின்றன.
C இதனால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் காற்றாலைகளுக்கு இவ்வாறான பாரிய நிலப்பரப்பு தேவையில்லை .
2 டீசல் நிலக்கரி போன்ற , மனிதனுக்கு தேவையான எந்தவொரு மூலப்பொருள்களையும் இவை வேண்டி நிற்பதில்லை .
3 அவாறே சூழலுக்கு தீங்கான எந்தவொரு பொருளையும் இவை விடுவதில்லை .
4 பச்சை வீட்டு விளைவுகளை இவை உருவாக்குவதில்லை .
5 கடல்நீரில் இருந்து நன்நீரை உற்பத்தி செய்யும் போது , நன்நீர் பெற்றபின் செறிவான உப்புநீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுவது போன்று , இங்கு காற்றின் வேகத்தில் பெரிய மாறுபாடு ஏற்படாது .
6 காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி மும்மடியா அதிகரிக்கும் .
7 அமைப்பதற்கான மூலதனத்தை தவிர வேறெந்த மூலத்தனத்தையும் இவை வேண்டி நிற்பதில்லை .
8 பாதிப்புகள் என்று பார்க்கும் போது இவற்றின் சத்தம் பெரிதாக பேசப்படுகிறது .
குடியிருப்புகளில் இருந்து 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இவை அமைக்கப்படும்போது ,இவற்றின் சத்தம் பெரிதாக கேட்காது .
9 உயரே இருக்கும் மழை மேகங்களை இவை கலைத்து விடும் என்பது அதீத கற்பனையாகும். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பளைப் பிரதேசத்தில் கடந்த வருடங்களில் மழை வீழ்ச்சியில் எந்த மாற்றத்தையும் காணவில்லை .
10 இவற்றின் இறகுகளில் பறவைகள் மோதி இறக்கின்றன என்பது ஏதோ உண்மைதான் .
ஆனால் இது கூட்டமாக வலசை வரும் பறவைகள் வரும் இடங்களிலே இதற்கு சாத்தியப்பாடு அதிகம் .
உள்ளுர் பறவைகள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும் காலப்போக்கில் இவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தம்மை தகவமைத்து கொள்கின்றன .

எனவே எல்லாவற்றுக்கும் குறை கூறிக் கொண்டிருக்காமல் , இக்காற்றாலைகள் அமைப்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
(Vadakovay Varatha Rajan)

(மோகன் சிவராஜ)

காற்றாலை நிறுவப்படுவதற்கு ஆதரவாக கருத்து சொல்பவர்கள் மக்களுக்கு சாதக பாதகங்கள் குறித்து முறையாக விளக்கமளிக்காது இதுபோன்று எதிர்வாதங்களை முன்வைப்பதும் தான் பிரச்சினையை பூதாகரமாக்கியிருக்கிறது.

மக்களின் வீடுகள் கடற்கரையிலிருந்து எவ்வளவு தூரத்தில் அளவு பிரமாணத்தின் படி பிரதேச சபையின் அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் சுவிஸ் அரசாங்கத்தின் வீட்டு திட்ட உதவியின் கீழ் பிரதேச செயலக அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் கட்டப்பட்டவை.
ஆரம்பத்திலிருந்தே காற்றாலையை நிறுவும் பணிகளை மேற்கொண்டவர்கள் இப்பிரதேச மக்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி வருகின்றனர்.

இந்த பிரதேசத்தில் தனியார் காணிகளை உள்ளுர் தரகர்கள் மூலம் கொள்வனவு செய்தபோது என்ன நோக்கத்திற்காக கொள்வனவு செய்யப்படுகிறது என்று தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்த பகுதி கடற்கரையில் உள்ள தாளை, பூவரசு மற்றும் பனை மரங்கள் அகற்றப்பட்டு வீதி அமைக்கும் பணிகளை தொடங்கியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை பொலிஸ் அதிகாரிகளின் துணையோடு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து மிரட்டப்பட்டார்கள். இதுகுறித்து மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சபை, சுற்று சூழல் அதிகார சபை ஆகிய இடங்களுக்கு சென்ற ஊர் மக்களிடம் அந்த பிரதேசத்தில் மேற்படி பணிகளை மேற்கொள்வதற்கு தாங்கள் அனுமதி எதனையும் வழங்கவில்லை என்றே தெரிவித்திருந்தனர்.

தென்மராட்சி அபிவிருத்தி தொடர்பாக தென்மராட்சி பிரதேச சபையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இந்த பிரச்சினை பற்றி கலந்துரையாடப்பட்ட போது எந்த ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயினும் அந்த பிரதேச மக்களின் சம்மதம் பெறப்படுவது அவசியம் எனவும் எனவே அந்த மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதும், அவர்கள் முன்வைக்கும் நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதும் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது.

விஞ்ஞான வளர்ச்சியின் பயன்களும், முன்னேற்றங்களும் கிராமங்களின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் அவசியமானவை. ஆனால், தமது வாழ்நாள் முழுவதும் இந்த காற்றாடிகளுக்கு அருகிலேயே வாழ வேண்டிய நிலையில் உள்ள மக்களின் பிரச்சினைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அவர்களது சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
காற்றின் மூலம் மின்சாரம் பெறும் இந்த திட்டத்திற்கு இந்த மக்கள் எதிhப்புத் தெரிவிக்கவில்லை மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் காற்றாடிகள் அமைக்கப்படுவதற்கே தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.