ஜல்லிக்கட்டுப் போராட்டம் பல்வேறு சமூக பொருளாதாரபிரச்சனைகள் தொடர்பாக சலிப்பூட்டும் அனுபவங்களால் ஏற்பட்ட இளஞ்சமுதாயத்தின் அறச் சீற்றத்தின் குறியீடு. குறிப்பாக காப்பிரேட் உலகம் சாமானியர்களை புறத்தொதுக்கும் செயற்பாட்டின் வெளிப்பாடு.
சல்லிகட்டு விவாகாரதில் அது அணைகடந்த வெள்ளம் போல உடைப்பெடுத்திருக்கிறது. உலகம் முழுவதும்; இந்த இளையதலைமுறை வெஞ்சினம் வெவ்வேறு வடிவங்களில் இந்த நவதாராளவாத உலகில் காணப்படுகிறது
இப்போராட்டத்தின் பலாபலன்கள் தவறான சக்திகளால் அறுவடைசெய்யப்படாமல் இருக்கவேண்டும். அநாகரிகமான வன்முறையற்ற வழியில் காந்திய அறவழியில் இந்த வெகுஜனப் போராட்டம் நடைபெறுவது தனிச்சிறப்பு. இந்திய சுதந்திர இயக்கத்தில் பெரியாரின் சமூகசீர்திருத்த இயக்கத்தில் இது வேர்கொள்கிறது.
நிறுவன மயப்பட்ட ஊடகங்களை விட சமூக வலைத்தளங்களே இந்த மகத்தான எழுச்சிக்கு பாரிய பங்களித்திருக்கின்றன