ஒருபுறம் வடக்கு மாகாண சபை சீரழிந்து கிடக்கின்றது. ஆனால் முதலமைச்சரின் லண்டன் பயணமும் அதையொட்டிய “இங்கிலாந்து கிங்ஸ்டன் நகரும் யாழ்ப்பாணமும்” இரட்டை நகர்களாக பிரகடனப்படுத்தப்பட்டதையொட்டி ஆரவாரங்கள் தலை தூக்கியுள்ளன. எதோ தமிழீழம் கிடைத்ததுபோல் சர்வதேச விளம்பரங்கள் பறக்கின்றன. எனக்கு புரியவில்லை தென்னிலங்கையில் இருந்து முஸ்லிம்களும் சிங்களவர்களும் வந்து செல்வதால் யாழ்ப்பாணத்தின் புனிதம் கெட்டுப்போகின்றது என்று அடிக்கடி ஊளையிடும் தமிழ் தேசியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் இப்போது என்ன சொல்கின்றன? இங்கிலாந்து கிங்ஸ்டன் நகரின் நவீன ஆடவர்களும் மங்கையர்களும் இனி அடிக்கடி யாழ்மண்ணில் காலடி பதிப்பார்களே அவர்களுடன் வந்து சேர போகும் புதிய கலாசாரங்களை எப்படி எதிர்கொள்ளப்போகின்றது யாழ்மண்?
(M R Stalin Gnanam)