(Maniam Shanmugam)
கொங்கோ ஆபிரிக்காவிலுள்ள மிகவும் வளம்மிக்க நாடுகளில் ஒன்று. மத்திய ஆபிரிக்காவில் ஆரம்பித்து கொங்கோவின் ஊடாகப் பாய்ந்து அத்திலாந்திச் சமுத்திரத்தில் கலக்கும் கொங்கோ நதியினால் கொங்கோவில் மழைக்காடுகளும், புல்வெளிகளும் செழிப்புற்றிருந்தன. அதைவிட டைட்டானியம், தங்கம், வைரம், தாமிரம் போன்ற ஏராளமான கனிம வளங்களும் நிறைந்த நாடு. ரப்பர் வளமும் மிகுந்த நாடு. (இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் கொங்கோவில் இருந்துதான் தமக்குத் தேவையான பல தாதுப் பொருட்களைப் பெற்றன.) எனவே ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டின் மீது கண் வைத்துவிட்டனர்.