அது கால ஓட்டத்தில் வெவ்வேறு இனக் குழுமங்களாக இனங்களாக வளர்ச்சியடைந்து பரிணாமம் பெற்று தம்மை அடையாளப்படுதிக் கொண்டன. இது இந்த பூமிப் பந்தின் பல்வேறு பாகங்களிலும் நடைபெற்றன.
இந்த மனித குலத்திற்குள் தொடர்பாடல் என்ற மொழி ஊடகமும் அது சார்ந்த கலாச்சாரமும் உருவானது. அது பத்தும் பலதுமாக இருந்திருக்கும் என்பதே யதார்த்த வரலாறு. இதன் பின்பு அவரவர் நம்பிக்கைகளின் அடிப்படையில் விஞ்ஞானம் வளர்ச்சியடையாத சூழலில் அவை மெஞ்ஞானமாகவும் உருவகப்படுத்தப்பட்டு கடவுளும்… மதங்களும் எமக்கு அப்பாற்பட்ட சக்திகளும் என்று பலவும் உருவானவை.
இந்த மொழி உருவாக்கமும் மதங்களின் உருவாக்கமும் அது சார்ந்த நம்பிக்கைகளும் வரலாறும் ஒவ்வொருவரும் தமது மொழி மதம் கலாச்சாரம் என்பதே உயர்ந்தது என்று பேசிக் கொள்ள முயலும் போட்டி நிலையையும் உருவாக்கியது இது ஒரு இனக் குழுமம் மற்றைய இனக் குழுமதத்த்தை முதன் முதலில் சந்தித்த சந்தர்பத்திலேயே உருவாகிவிட்டது.
இந்த நாம் ‘உயர்ந்தவர்கள்’ என்பதை நிறுவுவதற்கு அந்த மொழி மதம் கலாச்சாரத்தின் தோற்றுவாய் என்று ஆய்வு ஆராய்ச்சி… ஆகழ்வு ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் இந்த மனிதர்கள். இதற்குள் ஒரு ஒடுக்கு முறையும் விலங்குடைப்பும் அநியாயங்களும் நியாயங்களும் இல்லாமலும் இல்லை. மூத்த குடி என்ற தேடல்களும் இல்லாமல் இல்லை.
கூடவே பலமானவன்… உலகின் பெரும் பகுதியை ஆண்டவன்… அவன் சொன்னதே சரியான வாக்கு என்ற எழுதப்படாத சட்டங்களும் ஏற்புடமையும் ஏற்பட்டன…. ஏற்க வைக்கப்பட்டன. மறுத்தவர்கள் அந்நியப்படுத்தப்பட்டனர் அழிக்கப்பட்டனர்.
இங்கு தொகையில் அதிகமான இனக் குழுமம், மொழிக் குழுமம், மதக் குழுமம் என்பதற்கு அப்பால் ‘வலிமையானவன்” சொல்வதே சரி சட்டம் கோட்பாடு என்றாகிப் போன நிலமைகளை. இதற்குள் அணுக் குண்டு வரை அதிகாரம் பாய்ந்த வரலாற்றைக் கண்டவர்கள் நாம்.
இந்த வலியவன் சொன்னதே சட்டம் அல்ல…. சகலரும் சமம் உழைப்பு வளங்கள்…. இயற்கை வளங்கள்… தேழவகளின் அடிப்படையில் சமமாக பகிரப்பட வேண்டும்….. நிலம் நீர் காற்று சக்தி என்பன எல்லோருக்கும் பொதுவானது போல்.
சகலரும் உழைப்பில் ஈடுபட வேண்டும் தமது இயலுமையிற்கு ஏற்ப திறமையை பாவித்து என்ற நியதிதான் சரியானது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய் அவரவர்களின் தேவையிற்கு ஏற்ப வேதனங்களாக வழங்கப்பட வேண்டும் என்ற நியதிதான் மனித குலத்தின் அறம் சார்ந்த சரியான நிரந்தர தீர்வு என்ற கோட்பாடு பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்….
ஆனால் இனங்களும் அது சார்ந்த மதங்களும் தேசங்களும் இல்லாதவர்களுக்கு தானமாக தேவை ஏற்படும் போது வழங்குகின்றோம் மாறாக சமமாக பகிர முடியாது என்பதை மறைமுகமாக மறுதலிக்கும் போக்கிற்கும் இடையோன பனிப் போராக முரண்பட்டு இருப்பதே இந்த உலகு.
இதன் போக்கில் யேசு கிறீஸ்துநாதரின் பிறப்பு சம்மந்தமான விடமும் உலகை அதிகம் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர்கள் கை கொண்ட ஆங்கிலம் என்ற மொழியும் உலகிற்கு பொதுவான மதமாகவும் மொழியாகவும் அது சார்ந்த நம்பிக்கைகளைப் பரவலாக்கலும் நடைபெற்றன.
இங்கு வல்லவன் வகுத்ததே வழி என்பது ஆளுமை செலுத்தியது. அவரகள் இதில் கணிசமான வெற்றியும் கண்டனர்.
அதுவே இன்று உலக ஒழுங்காகவும் மாறி வருகின்றது… ஏன் மாறிவிட்டது என்று கூடச் சொல்லலாம். இதற்குள் டாலரும் ஆதிக்க நாணயமாக மாறிவிட்டது.
இலகுவாக கற்றல் மொழியாக ஆங்கிலமும் சிக்கல் இன்றி இணைத்து கொள்ளல் என்ற மதமாகவும் கிறிஸ்துவம் மாறி இருக்கும் நிலையில் பலவேறு மூத்த மொழிகள் முந்திய மதக் கோட்பாடுகளை பின் தள்ளி இந்த மொழியும் மதமும் பலராலும் வேறுபாடு இன்றி கொண்டாடும் பேசிப் பழகும் கடைப் பிடிக்கும் மதக் கோட்பாடாகவும் மாறிவரும் நிலமை ஏற்பட்டு வருகின்றது.
எந்த மதத்தினையும் நித்தனை செய்வது என் நோக்கம் அல்ல. ஏற்பட்டுவரும் பதிய உலக ஒழுங்கை கூற முனைகின்றேன் அவ்வளவே. யாரின் நம்பிக்கைகளையும் நிராகரிப்பதும் எனது நோக்கம் இல்லை. இதற்குள் இருக்கும் வியாபாரத்தை கூற விளைகின்றேன். இந்த வியாபாரங்கள் பல மதங்களிலும் வியாபித்தும் இருக்கின்றது வெவ்வேறு அளவுகளில்.
பல்வேறு கலாச்சாரத்தில் வருடம் ஒன்றின் பல்வேறு மாதம், திகதிகளில் பல்வேறு பண்டிகைகள் அது மதம், மொழி, இனம், கலாச்சாரம் சம்மந்தமாக கொண்டாட்டத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவை அந்தந்த மக்களால் உணர்வுபூர்வமாக நம்பிக்கையுடன் கொணடாடப்பட்டாலும் எல்லோரும் வருடத்தின் இறுதியில் ஆரம்பித்து புது வருடத்தின் ஆரம்பம் வரையிலான ஒரு கிழமையிற்குள் கொண்டாடும் கொண்டாட்டமாக விடுமுறை நாட்களாக யேசு பிரானை மையப்படுத்திய நத்தாரும் உம் அது சார்ந்த மொழியும் உலகில் இன்று முன்னிலை பெற்று உலக மக்களின் ஒரு பொது விடுமுறை நாட்களாக கொண்டாடும் தினங்களாக மாறி இருக்கும் நிலையில் இதற்குள் இருக்கும் வியாபாரத்தைப் பேசுவோம்….!
வருட முடிவு நத்தாரும் புத்தாண்டு ஆரம்பமும் விரும்பியோ விரும்பாமலோ ஒரே வீச்சாக வியாபாரம் ஆக்கப்பட்டு லாபம் ஒன்றே என்ற குறிகோள் மறைக்கப்பட்டு இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்று யாவரையும் பரிசுப் பொருட்கள் என்று நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் இந்த விடுமுறைக் காலம் மதங்களின் கலாச்சாரங்களின் இனக் குழுமங்களின் பெயரை பின் தள்ளியுள்ளது தற்போது.
இந்த நுகர்வுக் கலாச்சாரத்தை அதிகம் தனக்குள் கொண்டிருக்கும் விடுமுறை சொப்பிங் என்ற நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் இந்த பண்டிகைகள் வீழ்ந்துவிட்டது என்பதே உண்மையான நிலை. இது இன்று பெருந்தொற்றுக் காலத்திலும் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடுதல் அல்லது ஒன்லைன் சொப்பிங் என்றும் பொறியிற்குள் வீழ்ந்துவிட்டது.
அடுத்த வேளை சாப்பாட்டிற்கும் அல்லல்படும் மக்களும், மாற்று உடையில்லாததினால் கிளிஞ்சல்களுடன் வாழும் மக்களும் ஒதுங்க இடம் இன்றி பனியிலும், மழையிலும், வெயிலிலும் தனக்கான குடிலை தனது உழைப்பிற்குள் காணமுடியாது பல கோடி மக்களின் உணர்வலைகள் தான் எனக்காக இந்த விடுமுறைக் கொண்டாட்ட சிந்தனையாக இருக்க முடிகின்றது. எனக்குத் தெரியும் பலரும் இந்த உணர்வலையுடன் இணைவீர்கள் என்று.
நம்பிக்கை இருக்கின்றது என்றோ ஒரு நாள் இந்த மக்களையும் இணைத்து ஒரு மாபெரும் விடுமுறைக் கொண்டாட்டமாக ஒரு தினத்தை…. ஒரு கிழமையை கொண்டாட முடியும் என்று அது நத்தாராகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே அல்லது வேறு ஒரு தினமாக இருந்துவிட்டுப் போகட்டுமே மத நம்பிக்கைகளுக்கு அப்பால்….
அனைவரும் கொண்டும் கொண்டாட்ட திருநாளை நோக்கிய பாதையில் பலரை வாய்ப்புகள் இன்மையினால் தவிர்த்து சிலராக கொண்டாடும் இந்த நத்தார் தினக் காலக் விடுமுறைக் கொண்டாட்டத்தை கொண்டாடும் அனைவருக்கும் எனது விடுமுறை தின
வாழ்த்துகள்.
கொண்டாட்டம் அனைவருக்குமானது… வாழ்க்கை சுகந்தமானது….. வாழ்வோம் இணைந்து…..
Dec 24, 2021