சர்வதேச பெண்கள் தினத்தில் ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கி ன்றன.அவர்களில் ராஜனி திரணகம, செல்வி,சிவரமணி,சரோஜினி யோகேஸ்வரன்,மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா….. …… என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்க ளாயுள்ளோம்.இந்த இழப்புகள் இயற் கையில் வந்தவை யல்ல.தவிர்த்திருக்க முடியாதவையுமல்ல. ஆனால் கடந்த காலத்தில் இலங்கையில் கோலோச்சிய வன்முறை சூழலும் அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டு கலாசாரமுமே நாம் இழந்துபோன இந்த ஆளுமைகளை தீர்த்து கட்டியிருந்தது. இன்று பெண்களை பாதுகாப்போம், பெண்களை மீட்டெடுப்போம், பெண் களுக்கு சுதந்திரம் வழங்குவோம் என்று நாம் ஒவ்வொருவரும் கோசங்களை உச்சரித்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் எம்மால் பல பெண் ஆளுமைகளின் இருப்புகளை கடந்த காலங்களில் காப்பாற்ற முடியவில்லை.எமது சமூகத்தை வழிநடத்தும் மிகப்பெரும் திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த பெண்களை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.அதன் பிரதிபலனானாகவே எமது பெண்சமூகம் இன்று மீளமுடியாத அகலபாதாலத்துக்கு சென்று கொண் டிருக்கிறது எனலாம்.