இந்த வைரஸ் யார் யாரை பாதிக்கும்?
1)குழந்தைகள் ,முதியவர்கள், அங்கவீனவர்கள், அங்கங்களை மாற்றியவர் கள், இரத்தஅழுத்தம், நீரழிவுநோய் உள்ளவர்களுக்கே. இதன் அறிகுறி. 2)உயர்வெப்பகாய்ச்சல். இருமல். தடிமன். தசைப்பிடிப்பு. சுவாசப்பை தாக்கம். இவை உக்கிரம்அடைந்தால் நிமோனியா உருவாகலாம். இவைகள் இருந்தால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு நபரை 14 நாள் தனிமைப்படுத்துவது மிகச்சிறந்தது இது வைரஸ்சை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை.
பின்பற்ற வேண்டிய முறைகள். 1)காய்ச்சல் இருந்தால் நீங்களே மருந்து பாவிக்ககூடாது அதனால் உக்கிரமடையும். 2)ஒரு உயிரற்ற பொருளில் 3 மணிநேரம் வைரஸ் தங்கியிருக்கும். அதனால் பொருட்களை தொட்டால் கை கழுவ வேண்டும். உயிர் உள்ளவர்களிடம் தெற்றினால் நீண்டகாலம் வாழும். 3)வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடமே வைரஸ் தொற்று அதிகமாக காணப்படுகிறது. இவர்கள் சமூகத்துடன் கூடிவாழ்ந்து கொண்டிருந்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் அல்லது கிராமசேவகர் மூலம் பதிவு செய்யவேண்டும் அல்லது PHI மூலம் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். 4 )ஒருவரை தனிமைபடுத்துவதனால் பயப்படதேவையில்லை. 14 நாள் தனிமைப்படுத்தி வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு தொற்று இருந்தால் வைத்தியம்செய்து குணமடையசெய்யலாம். இதற்காகவே ராணுவம் ,வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்து இருக்கிறார்கள். தங்கள் உயிர்களையும் பணயம்வைத்து நோயாளர்களை காப்பாற்ற நினைக்கும் இவர்கள்தான் தற்போது கடவுள்கள். இந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த வைரஸ்சை விரட்டுவதற்கு உயர் தர ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்பாதுகாப்பு நடவடிக்கை 1)மக்கள் கூட்டம்கூடகூடாது. சத்திரசிகிச்சைநேரம் பாவிக்கப்படும் முக கவசம் பாவிப்பது மிகசிறந்து. இரும்மல் தும்மல் வரும் பட்சத்தில் கையில் துணிவைத்து பாதுகாப்பாக இரும வேண்டும்.
2)1,2′ மீற்றர் தூரம் நின்று நபர்களுடன் உரையாடவேண்டும். தேவைக்கு பயணம் செய்வது நல்லது. வீடு திரும்பியதும் சுத்தமாக கைகழுவ வேண்டும்.
3)பணம் கையாளப்பட்டால் கைகழுவ வேண்டும்
4)ஏதாவது நோய் அறிகுறி தென்பட்டால் வைத்தியரை நாடவேண்டும்.
மொத்தத்தில் வைரஸ்சை தடுப்பதற்கு சுத்தம் மிக மிக அவசியம். பயமின்றி நம்பிக்கையுடன் விரட்டுவோம் உயிரை பாதுகாப்போம்.