
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
‘எது வெற்றிகரமான சமூகம்?’ என்ற வினாவுக்கான பதிலை, கொவிட்-19 பெருந்தொற்று காட்டி நிற்கின்றது. மக்களுக்காக அரசும் அரசுக்காக மக்களும், எவ்வாறு கைகொடுத்துத் தோளோடு தோள்நிற்பது என்பதை, இந்தப் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளும், அவர்தம் மக்களும் காட்டி நிற்கின்றனர்.