(புருஜோத்தமன் தங்கமயில்)

விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய மூவர் அணியின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே எதிர்பார்க்கப்பட்டது.