ஆனால் நான்கு ஈழவிடுதலை அமைப்புகள் ஒன்றாக உருவாக்கிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் ஒற்றுமையை குலைக்கு புறப்பட்ட செயற்பாடுகளை இந்த முன்னணியிற்குள் தாமதாக அவசரமாக இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர் என்பதே உண்மை. அதற்காகவே இதற்குள் அவர்கள் இணைந்தார்கள் என்ற பார்வையும் எனக்குண்டு.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த செயற்பாட்டிற்கு மூங்கணாங்கயிறு போட்டு ஒரு வழியிற்கு கொண்டு வருவதற்குள் ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச பாசறையில் பயிற்சி பெற்று எதிரியின் களத்தில் முன்னிலையில் செயற்பட்ட இரு தோழர்களை தோழர் றேகன் வவுனியாவில் மாத்தையா குழுவினாராலும் தோழர் அமீன் யாழ்ப்பாணம் கொட்டடியில் கோட்டை இராணுவத்தினரின் வெளியேற்றத்தை தடுக்கும் செயற்பாட்டில் மோட்டார் குழுவின் தலமைப் பொறுப்பில் செயற்படும்போதும் கிட்டு குழுவினராலும் வஞ்சகமாக சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்த இரு செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழவிடுதலை அமைப்புகள் உருவாகிய ஐக்கிய முன்ணியிற்குள் இருந்து கொண்டு ஈழவிடுதலை என்று போராடிய சக அமைப்பிற்கு எதிராக செயற்படுத்தினர்.
இதனால் ஏற்பட்ட கொத்தளிப்பு நிலமையை தோழர் பத்மநாபா தனது தோழர்கள் மத்தியில் சகோதரப் படுகொலையை நிராகரிக்கும் அவரின் அமைப்பின் விடாப்பிடியான கொள்கையின் அடிப்படையில் பதில் தாக்குதல் செயற்பாடுகள் ஏதும் செய்யாத வண்ணம் பார்த்துக் கொண்டார். இந்த மரண நிகழவொன்றில் அவருடன் ஒன்றாக கலந்து கொண்டு அளவளாவிய போதும் இதனை உணர்ந்து கொண்டேன்.
ஒரு விடுதலைப் போராட்டத்தில் சகோதரப் படுகொலை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்ற விடாப்பிடியான அமைப்பு சார்ந்த செயற்பாட்டை சகலரும் உள்வாங்குமாறு தலமைத்துவத்தை கொடுத்த தோழர் நாபாவின் பண்பு மகத்தானது… முற்போக்கானது மனித நேயமிக்கது.
ஆனாலும் இதன் வளர்சிப் போக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அடுத்கட்டமாக 1986 மே மாதம் திம்பு ஒற்றுமையின் 10 மாதத்திற்குள்ளாலேயே ரெலோ அமைப்பை முற்று முழுதாக தடை செய்தல் என்ற நடவடிக்கையை பிரகடனப்படுத்தி போராளிகளை கொலை செய்தும் அதன் தலைவர் சிறீ சாபாரத்தினத்தையும் கொலை செய்து போராளிகள் பலரையும் உயிருடன் நெருப்பில் போட்டும் வாட்டினர் கைதும் செய்தனர்.
சக விடுதலை அமைப்பு போராளிகளை காப்பாற்றுதல் என்ற செயற்பாட்டிற்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஈபிஆர்எல்எவ் பல்வேறு வகையான புலிகளின் அசசுறுத்தல்களுக்கு மத்தியிலும் இதனை விடாப்படியாக செய்தனர். சிறீ சபாரத்தினத்தை காப்பாற்றும் முயற்சியிலும் மணித்தியலாய இடைவெளியில் வெற்றியை தவற விட்டனர்.
ஆனால் இங்கும் புலிகளின் ஒரு மாற்று வீடுதலை அமைப்பிற்கு எதிரான படுகொலையை தடுத்து நிறுத்த ஈபிஆர்எல்எவ் ரெலோவிற்கு ஆயுத ஆதரவாக அல்லது மோதல்களை நிறுத்த ஆயும் தூக்கும் சகோதர இயக்கங்களுக்கு எதிரான மரணங்களுக்குள் தன்னை உள்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டனர். ஆனாலும் பல மிக்க வெகுஜனப் போராட்டங்கள் ஊர்வலங்களை நடாத்தினர்.
சக விடுதலை அமைப்புகளை முற்று முழுதாக தடை செய்தல் என் தொடர்ச்சியை அவர்கள் புலிகளிடம் இருந்து 1986 மார்கழி மாதம் சந்தித்த போது ஏற்கனவே தமது செயற்பாட்டை இழந்த ரெலோ மௌனமாகிப் போன ஈரோஸ் தமது செயற்பாடடை நிறுத்திக் கொண்டு புளட் என்று யாரும் அற்ற நிலையில் தனியாக ஈபிஆர்எல்எவ் ஐ தடை செய்து அதன் உறுப்பினர்களை கொலை செய்து, கைதும் செய்து தங்கள் சிறைகளில் அடைத்தனர்.
1987 ம் ஆண்டு வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடு என்ற ஏக போகமே நிலவியது. மக்களும் ஆயுதங்களுக்கு பயந்தும் ஏன் சிலர் நம்பிக்கையுடனும் எதிர்காலத்தை நோக்கியிருந்தனர். இந்த விடுதலை அமைப்புக்கு எதிரான புலிகளின் மே மாதத் செயற்பாடே ஈழவிடுதலை போராட்டத்தின் இறங்கு முகத்திற்கு சுழி போட்ட நாளாகவும் அமைந்துவிட்டது. கூடவே பெற்றோர்கள் விருப்புடன் ஏன் பெருமையுடன் விடுதலை அமைப்பிற்கு தமது பிள்ளைகளை அனுப்பியதை மாற்றி விடுதலை அமைப்புகளிடம் இருந்து விடுவித்து பாதுகாப்பான இடம் என்று கருதும் மேற்குலகிற்கும் தமது பிள்ளைகளை அனுப்பத் தொடங்கினர்.
புலிகள் மாற்று விடுதலை அமைப்புகளை தடை செய்தல் என்ற ஆயதச் செயற்பாடுகள் நடைபெறும் போதும் இந்திய அரசு தரப்போ ஏன் தமிழகத்தின் அரசியல் கட்சிகளோ இந்த சகோதரப் படுகொலைகளை நிறுத்துவதற்கு எந்த பாரிய செயற்பாடுகளையும் செய்யவில்லை. சில கண்டனக் குரல்களை எழுப்பியதை தவிர வேறு எதனையும் செய்யவில்லை.
இத்தனைக்கும் இந்த செயற்பாடுகள் நடைபெறும் போது புலிகளின் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரனின் பிரதான செய்றபாடுகளும் தமிழ் நாட்டை மையப்படுத்தி எம்ஜிஆரின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற வண்ணம் இருந்தன. கருணாநிதி மாத்திரம் சிறீ சபாரத்தினத்தின் மரணத்திற்கு முரசொலியில் இரங்கல் கடிதம் ஒன்றை வரைந்திருந்தார். இந்த சகோதர இயக்கப் படுகொலைகள் எவ்வாறு ஒற்றுமையாக செயற்பட்டு திம்பு பேச்சுவார்தை முடிவுற்று ஒரு வருட காலப்பதியில் நடைபெற்றது என்பதுதான் இங்கு முக்கிய கவனம் பெறுகின்றது… கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விடயமும் ஆகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற தீவிர வலதுசாரிகளின் கை மட்டும் ஓங்க வேண்டும் என்ற மேற்குலகின் வேலைத்திட்டத்தை இலங்கை அரசின் விருப்பத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் செயல்வடிவம் கொடுத்த விடயமாக இதனை நாம் பார்க்க வேண்டும் வலதுசாரிகளை வளர்த்துவிடுதல் பலம் பெறச் செய்தல் என்பது இடதுசாரி கருதியல் வளர்ச்சியை தறித்து வீழ்த்துவதற்கு சமன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில்தான் நான் இந்த சம்பவங்களை உய்த்து உணர்கின்றேன்.
இதன் பின்னரான இலங்கை இராணுவத்தின் வடமராட்சி மீதான தாக்குதல் கைப்பற்றுதல் என்ற ஆரம்பித்த தீவிர செயற்பாட்டை தனித்து விடப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளால் தாக்கு பிடிக்க முடியாத நிலையிலேயே இந்தியா தனது வேலைத்திட்டத்தை மீண்டும் செயற்படுத்தும் நேரமாக எடுத்துக் கொண்டது. அதற்கு மனிதாபிமான உணவுப் பொதிகளை மக்களுக்கு ஆகாய மார்க்கமாக வழங்குதல் என்று ஆரம்பித்து அது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற வரை சென்றது.
இந்த இலங்கை இந்திய அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் போது இதில் தமிழர் தரப்பின் கருத்துகளை கேட்காமலே அவர்கள் வெறும் பார்வையாளராகவே இருத்தி வைக்கப்பட்டனர். இந்திய மாநிலங்களின் அதிகார வரம்பு விடயங்களை இந்தியா ஆதாரமாக வைத்து இலங்கை இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து 13 வது திருத்தச் சட்டமும் அதன் அடிப்படையிலான மாகாண சபை முறமையும் இலங்கையில் ஜேஆர் அரசினால் சட்டமூலமாக்கப்பட்டது.
இதில் எவ்வளவு அதிகாரங்கள் இருந்தன என்பதற்கு அப்பால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு இதுவரை சட்டமூலம் கிடைக்கப் பெற்ற ஒரே ஒரு அரசியல தீர்வாக அதிகாரப் பரவலாக்கமாக இதனையே பார்க் முடியும். இது தமிழர்களுக்கானது அல்லது வடக்கு கிழக்கு மாகாணத்திற்குமானது மட்டும் அல்ல முழு இலங்கையின் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் ஆகும்.
ஆனாலும் இந்தியாவின் தமிழர் தரப்பு மதான கரிசனையும் இலங்கை அரசை விட தமிழர் தரப்புடன் நிலவிய நட்பைம் நாம் சரியாக பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்குள் நகர வேண்டும் என்ற இராஜதந்திரத்தை நாம் சரியாக கையாள வேண்டும் என்ற பார்வை இழுவிடுதலை அமைப்புகளுக்குள் தோழர் பத்மநாபாவிற்கும் அதன் அமைப்பிற்கும் இருந்ததாக நான் உணர்கின்றேன். இதனை அவர்கள் அன்றைய கால கட்டத்தில் வெளியிட் அறிக்கைகளில் வெளிப்படுத்தியும் இருந்தனர்.
ஆனாலும் இங்கும் இந்திய அரசு விடுதலை அமைப்புகளிலேயே புலிகளையே முதன்மையை ஏன் ஏக போகமாக பார்க்கும் செயற்பாட்டை அவதானிக்க முடிந்தது. ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்ணியிற்கு இருந்த சர்வதேச அறிமுகம் அவர்களையும் பின் தள்ள முடியவில்லை இந்தியாவினால்.
அதனால்தான் இலங்கை இந்திய ஒப்பமந்தம் 13 வது திருத்தச் சட்டம் அடிப்படையில் அமைந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் இடைக்கால் அரசில் அனைத்து பிரதிநிதித்துவமும் தமிழீழ விடுதலை புலிகளுக்கு அவர்களின் விருப்பப்படி வழங்கப்பட்டது. அவர்கள் தொடரந்தும் மாற்று விடுதலை அமைப்புகளைத் தவிர்த்து ஏகபோக அரசியல் செயற்பாட்டையே செய்ய விரும்பினர்.
பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் இரு பிரநிதித்துவம் மட்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டது அனைத்து விடுதலை அமைப்புகளை இந்தியா ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழைத்துப் பேசியிருந்தாலும் மற்றைய எந் விடுதலை அமைப்பிற்கும் இடைக்கால அரசில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பது இங்கு முக்கியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பரவலுக்கான ஆரம்ப புள்ளியாக எடுத்து இதிலிருந்து அடுத்த கட்டமாக நகருவோம் இது தமிழ் பேசும் மக்களுக்கான முழுமையான தீர்வும் அல்ல என்பதை உணர்ந்தே இருந்தார் பத்மநாபா, அவரின் தோழர்கள்.
நாம் ஏன் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டோம் எந்த சூழலில் இது நடைபெற்றது என்று ஒரு புத்தகத்தையே வெளியிட்டுளார் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னராக. அதனை தேடிப் படிப்பவர்கள் இதனை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இதற்கான தயாரிப்பில் வரதராஜப்பெருமாளுடன் நானும் கூட இருந்து செயற்பட்டதினால் இதனை முழுமையாக நான் அறிவேன்.
கூடவே இங்கு அமையவிருக்கும் இணைந்த மாகாண இடைக்கால அரசில்… ஏன் தேர்தல் என்ற அரசியலில் கூட நாம் எதிர்க் கட்சி செயற்பாட்டிற்குரிய வாய்ப்புக்களை மனதார ஏற்று இதன் மூலம் நாம் மக்களுக்கான சேவையை புரிதலை செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் தனது அமைப்பை தோழர் நாபா செயற்படுதிய காலத்தில்..
இடைக்கால அரசையும் அமைக்காமல் அதன் பின்பு அமையவிருந்த தேர்தலில் பங்கு பற்றாமல் தாமே குத்துவிளக்கும் பூரண கும்பமும் ஒரே வாகனத்தில் இந்திய இராணுவத்துடன் ஒனறாக பயணப் பவனி கூட்டம் போட்டு ஆயுத ஒப்படைப்பு என்று செய்த புலிகள் தமது செயற்பாடுகளை மாற்றி இந்திய இராணுவத்துடன் வலிந்து யுத்தம் ஒன்றை உருவாக்கினர் இதற்கு பின்னால் பிரோமதாசாவும் அவர்களின் மேற்குல கூட்டாளிகளும் இருந்தனர் என்பதை நாம் இங்கு கூறித் தெரிய வேண்டியதில்லை.
கூடவே தென்னிலங்கை இடதுசாரிகள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற போது அவர்களை வகை தொகையில்லாமல் கொலை செய்யும் செயற்பாட்டை ஜேவிபி இனர் செய்தனர். வடக்கு கிழக்கில் புலிகள் மீண்டும் மாற்று அமைப்பகளின் செயற்பாடடை ஆயதங்களை கையளித்துவிட்டு பின்பு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களுடன் வேட்டையாடியது போல் தென் இலங்கையில் ஜேவிபியினர் செய்தனர்.
இவ்விருவரின் செயற்பாட்டிற்கும் பிரேமதாச தனது ஆசீர்வாதத்தை ஆயுத வழங்கலை அனுமதியை தாராளமாக செய்தார். கூடவே தென்னிலங்கை ஜேவிபின் செயற்பாட்டை சுதந்திரமாக அனுமதித்து வடக்கு கிழக்கில் புலிகளின் செய்றபாட்டை முழுமையாக ஹெலிகொப்பரில் வடக்கிற்கு வந்து போகும் அளவிற்கும் கொழும்பு வீதித்தடைகளில் புலிகளின் உறுப்பினர்களையும் நிறுத்தி வைத்திருந்தனர் மாற்று விடுதலை அமைப்பினர்களை புலிகள் கைது செய்வதற்கு ஏதுவாகவும்.
இந் நிலையில் இந்தியாவிற்கு தன்னால் உருவாக்கப்பட்ட மாகாண சபையை செயற்பாட்டிற்குள் கொண்டு வருலதற்கு தேiயானவர்களா ஈபிஆர்எல்எவ் தலமையிலான ஐக்கிய முன்னணி தேவையாக இருந்தது அதுவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈஎன்டிஎல்எவ் ரெலோ ஈபிஆர்எல்எவ் கட்யூனிட்ஸ் கட்சிகள் இணைந்து தேர்தல் சந்திப்புகளும் தேர்தல் வெற்றிகளும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையும் அன்றைய பாராளுமன்றத் தேர்தலும் ஆகும்.
இதிலும் தோழர் நாபாவின் இராஜதந்திர நகர்வே தமிழ் பேசும் மக்களுக்கான முதலும் கடைசியுமான இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசின் செயற்பாடும் ஆட்சியும் ஆகும்.இன்றுவரை 30 வருடங்கள் கடந்தும் தமிழ் பேசும் தரப்பு இந்த மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தீர்வு என்பதற்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலமையை அன்றே தூர நோக்குடன் தீர்க்க தரிசமாக அறிந்து கொண்டவர்கள் தோழர் பத்மநாபாவும் அவரின் விடுதலை அமைப்பும் தோழர்களும். என்ன அன்று இணைந்த தாயகமா இருந்த ஈழ மாகாணம் இன்று வடக்கு மாகாணம் கிழக்கு மாகாணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பாரிய பிளவின் பின்பு ஓரளவிற்கு உறுதியாகிவிட்ட நிலமை இன்று.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் பங்கு பற்றுவதாக அறிவித்து பின்பு புலிகளுக்கு பயந்து கொழும்பில் இருந்து கொண்டு ஒதுங்கிக் கொண்டனர்.சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தேர்தலில் பங்கு பற்றாமல் விடுவது என்ற நிலைப்பாட்டில் இறுதிவரை இருந்தாலும் பத்மநாபாவின் ஒரு தோழமையான தந்திரோபாய செயற்பாடு இறுதியில் அவர்கள் தேர்தலில் கலந்து கொண்டு கணிசமான வெற்றியுடன் எதிர் கட்சியாக (கவனிக்க எதிரிக் கட்சியாக அல்ல) இணைந்த வடக்கு கழக்கு மாகாண சபையில் அமர்ந்து ஓரளவிற்கேனும் முறையான தேர்தல் அது என்பதை நிரூபிப்பதற்கு வாய்பை ஏற்படுத்தினர். இது பற்றி மட்டக்களப்பில் வாழும் எனது மதிப்பிற்குரிய காக்கா தோழர் எஸ்எல்எம் ஹனீபா இடம் அறிந்து கொள்ள முடியும்.
தனியாக தமிழ்த் தரப்பின் ஒரு பகுதியினர் மட்டும் கலந்து கொண்டு எனையவர்கள் முழுமையாக தேர்தலை நிராகரித்தால் அது முறையான தேர்தல் அல்ல என்ற வாதம் வலுபெற்றதாக அமைந்திருக்கும் இங்கும் பத்மநாபாவின் தூரநோக்குப் பார்வையை நாம் கருத்தில் கொண்டதுதான் ஆக வேண்டும்.
வரலாற்றில் தமிழ் பேசும் தரப்பின் முக்கியமான இரு சந்தர்பங்களில் எம்முடன் இணைந்து பணியாற்றி தோழன் மக்களை நேசிக்கும் ஐக்கிய முன்னணியின் பிதாமகன்… மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றேன் என்றவன் என்று பல பரிமாணங்களை உடையவர் பற்றி ஒரு வரலாற்றுடன் கூடிய பதிவை எழுதியுள்ளேன்.
இவை முழுமையானவையும் அல்ல இன்னும் எழுதுவேன்….