சமாதானத்திற்கான போரரசியல் – 4

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1994-1995இல் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் குமாரதுங்கவின் அரசியல் முன்னேற்றமாகக் கருதப்படலாம். புலிகளுடனான பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டைத் தற்காலிகமாகப் பாதுகாப்பதன் மூலம், குமாரதுங்க தனது விமர்சகர்களை மௌனமாக்குவதற்குத் தனது அரசியல் மூலதனத்தைத் திரட்டிக் கொள்ள முடிந்தது.