தொடர்ந்து ஒரு மளிகைக் கடையில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கே கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தன் அப்பா மற்றும் மைத்துனரின் உதவியுடன் சொந்தமாகத் தனியாக ஒரு மளிகைக்கடையைத் துவக்கினார்.
முதல்முயற்சி என்பதால் பெரும் சவாலாகத்தான் இருந்திருக்கிறது. அத்தனையையும் தனது தன்னம்பிக்கையால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொண்டார் ராஜகோபால். ஆனால்
இதில் இவருக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்பட்டது.
இதனால் மனம் தளர்ந்த ராஜகோபால் மளிகைக்கடையில் 1979 ஆம் ஆண்டில் ஒரு நாள் தனது விற்பனையாளர்கள் ஒருவருடன் நடந்த உரையாடலின் விளைவாக ராஜகோபால் ஒரு ஜோதிடரிடம் தனது ஜாதகத்தை க் கொடுத்து எந்த தொழில் தனக்கு சரிப்பட்டு வரும் என கேட்டார்…
அந்த ஜோதிடரின் வழிகாட்டுதல் படி கண்டடைந்ததுதான்
1981ல் கே.கே.நகரில் முதல்
H.S.B. ஹோட்டல் சரவணபவன்…
உழைப்பு…உழைப்பு..உழைப்புஅதை தவிர
வேறு எதுவும் அறியாதவராக அண்ணாச்சி
ராஜகோபால் விளங்கினார். உழைப்பின்
காரனமாக கொஞ்சம் கொஞ்சமாக மிக
உயரத்திற்கு ஓட்டல் தொழிலில் மிக
பெரிய அளவிற்கு பறந்து விரிந்து தனி சாம்ராஜ்யமாக வளர்ந்தது………
உழைப்பால் முன்னேறிய தொழிலதிபர்களில் ஒருவர்தான் நம்ம சரவணபவன் அண்ணாச்சி. தொழில் செய்வதற்கு பணமோ, படிப்போ தேவை இல்லை, உழைப்பு ஒன்று என்று இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு சிறந்த உதாரணமே அண்ணாச்சி தான்.
நம்ம படையப்பா படத்துல வர மாதிரி ஒரு பாட்டு முடியறதுக்குல்ல பணக்காரன் ஆகியவரல்ல நம்ம அண்ணாச்சி.
உழைப்பால் அனைவரையும் தன்பால் ஈர்த்தவர்.
இவரின் முதல் உணவகம் சென்னையாக இருந்தாலும் இன்று நாடு முழுவதும் உணவகங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் 39 கடைகளும், இதில் குறிப்பாக 20 உணவகங்கள் சென்னையிலும், மீதம் 19 உணவகங்கள் தமிழகத்தின் மற்ற நகரங்களில் உள்ளது, வெளி நாடுகளில் 43 உணவகங்கள் உள்ளன.
குறிப்பாக 2000 ல் முதன் முதலாக துபாயில் தொடங்கி… ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, ஓமன், கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, சிங்கப்பூர், பக்ரைன், ஐக்கிய எமிராட்ஸ்,லண்டன், அமெரிக்கா, குவைத், சவுதி அரேபியா, கென்யா சவுத் ஆப்பிரிக்கா, கத்தார், ஹாங்காங், தாய்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த சரவணபவன் உணவகம் உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டின் படி சுமார், இந்த உணவகத்தில் இந்தியாவில் மட்டும் 8700 பேர் வேலை செய்கின்றனர். இந்த உணவகத்தின் ஆண்டு வருவாய் கடந்த 2017ம் ஆண்டின் படி, 29,782.4 மில்லியன் ரூபாயாகும். ஆமாங்க.. டாலரில் கிட்டதட்ட 430 மில்லியன் டாலராகும்.
இந்த அளவிற்கு நிமிர்ந்து நிற்கிறது சரவணபவன் எனும் ருசிகரமான ஆலவிருட்சம்.
இந்த ஆலவிருட்சம் பரந்து விரிந்து வளரக்காரணமானவர் கணபதி ஐயர் என்பவர்… அவரது கைப்பக்குவந்தான் சரவணபவன் ஓட்டல் உணவுகள் என்றாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையைக் கொண்டு வந்தது.
திருமுருக கிருபானந்த வாரியாரின் தீவிர பக்தர் ராஜகோபால் அண்ணாச்சி
இவ்வளவு நல்லமனம் படைத்த ஒரு மனிதர் அந்த வெள்ளை மனத்தின் ஓரத்தில் ஒரு கறை யையும் வைத்திருந்தது தான் துரதிர்ஷ்டம்..
திருமுருக கிருபானந்த வாரியாரின் எல்லா உரையையும் கேட்ட ராஜகோபால் அண்ணாச்சி..
வாரியார் சுவாமிகள் பிறன் மனை நோக்கான் .. ராமனையும்..பிறன் மனை நோக்கியதால் ராவணன் அழிந்ததையும் எத்தனையோ கதா கலாச்சேபங்களில் சொல்லியிருக்கிறார்..
நானும் வாரியார் அவர்களின் சொற்பொழிவை பலமுறை கேட்டிருக்கிறேன்..
ஏன் அண்ணாச்சி நீங்கள் அதை மட்டும் கேட்கவில்லை… அல்லது கேட்டதை மறந்தீர்களா..? உங்களின் உழைப்பை நம்பிய நீங்கள்
உங்கள் உள்ளத்தை அலைய விட்டது நியாயமா…
உழைப்பால் உயர்ந்த நீங்கள் பணம் தந்த ஆணவம்… காமம் கண்ணை மறைத்து அனைத்தையும் போகப் பொருளாக எண்ணத் தொடங்கிவிட்டது.
அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல சலுகைகள் செய்தார்…
வீடு கட்டிக் கொடுத்தார்… LTC கொடுத்தார் என்றெல்லாம் இன்று பலர் கதை சொல்கிறார்கள்…
இவைகளில் பாதி உண்மை உள்ளது…
ஆம் இவரது காம இச்சையை தீர்க்க ஒத்துழைத்த பல குடும்பங்கள் சுகபோக வாழ்வில் மிதந்தன …
ஒத்துழைக்க மறுத்தவர்கள் ஒழித்துக்கட்டப்பட்டனர்.
ராஜ கோபாலுக்கு வள்ளியம்மை என்ற மனைவியும் ஷிவக்குமார், சரவணன் என்ற இரண்டு மகன்கள் இருக்கும் போதே…
அவரது ஓட்டலில் பணி புரியும் ஊழியர் ஒருவரின் மனைவி கிருத்திகா என்கிற அழகான பெண்ணின் மீது இவர் காமக்கண் விழுந்தது…
அந்த பெண்ணின் கணவரை அழைத்து கொலைமிரட்டல் விடுத்து அந்த பெண்ணை விட்டு விலகிப் போக வைத்து இன்னொருவன் மனைவியை இவர் தனது இரண்டாவது மனைவியாக ஆக்கிக் கொண்டார்…
அப்படியும் அண்ணாச்சியின் காம அலைகள் ஓயவில்லை…
அண்ணாச்சியின் பெருந்திணைக் காதல். தன்னை விட வயதில் மிக இளையவரான ஜீவ ஜோதியை அண்ணாச்சி மூன்றாவது மனைவியாக மணக்க விரும்பியது ஏன்? மூடநம்பிக்கை என்கிறது இவ்வழக்கின் பழைய வரலாறு.
இதற்கு ஜோதிடத்தை காரணம் காட்டினார்.. ஜீவஜோதியை மணந்தால் ராஜகோபால் மேலும் பணம் படைத்தவராகவும், மேலும் புகழ் மிக்கவராகவும் மாறுவார் என ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் கூறியதாகவும்..
அதை அப்படியே நம்பியதால் ராஜகோபால் இப்படி ஆனார் என்கிறார் கள்…
இது மிகவும் கடைந்தெடுத்த பொய்…
இவரின் காம இச்சையை மறைக்க ஜோதிடம் பரிகார ம் என்றெல்லாம் கதைகட்டப்பட்டுள்ளது.
ஜோதிடத்தை யும் சபலத்தையும் ஒன்றிணைத்து பார்ப்பது மிகவும் முட்டாள் தனம்…
சில முட்டாள்கள் இவர் ஜோதிடத்தை நம்பியதால் தான் இப்படி ஆனார் என சபலத்திற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார் கள்.
டேபிள் துடைத்து வாழ்க்கையைத் தொடங்கிய சாதாரண நபர்…
ஜோதிடத்தை நம்பி தொழில் தொடங்கி யதால்தான் இன்று 5000 கோடிக்கு மேல் சொத்துடையவரானார்.
இதற்கு காரணம் ஜோதிடம் தான் என்பதை எவரும் சொல்வதில்லை…
ஆனால் இவர் சபலத்தில் சறுக்கி விழுந்தை மட்டும் …
ஜோதிடத்தால் அழிந்தார்…
என சில மேல் தாவிகள் சந்தடி சாக்கில் சிந்து பாடுகின்றனர்…
ஜோதிடத்திற்கு எதிராக…
தனது உணவகத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவரின் மகளான ஜீவஜோதியின் மேல் காதல்வயப்பட்டார் என்றும் கூறுகிறார் கள்…
இதைக் காதல் என்பதா? பேராசை என்பதா? பெருந்திணைக் காமம் என்பதா? என்று புரியத்தான் இல்லை. ராஜகோபாலின் நினைப்பு இப்படித் தறிகெட்டு ஓட, மறுபுறம் பள்ளி மாணவியான ஜீவஜோதியோ, தான் டியூஷன் சென்ற இடத்தில் சந்தித்த ப்ரின்ஸ் சாந்தகுமார் என்பவர் மீது காதல் வயப்பட்டார்.
இந்த சாந்த குமாரும் இவரது ஓட்டலில் பணி செய்தவர் தான்..
அவர்களது காதல் திருமணத்திலும் முடிந்தது. விஷயம் இப்படி என்று தெரிந்ததும் ஜீவஜோதியின் திருமணத்தை முறிக்க ராஜகோபால் பெரிதும் முயன்றிருக்கிறார்… முயற்சிகள் எதுவும் கதைக்காகாத பட்சத்தில்
முதலாளியான நம்மால் முடியாததை நம்மிடம் வேலைசெய்யும் ஒரு தொழிலாளி சாதித்து விட்டானே என்ற ஆணவத்தில் எழுந்த பொறாமையால் வந்த வெறுப்புணர்ச்சியில்
ஜீவஜோதியின் கணவரான ப்ரின்ஸ் சாந்தகுமாரைக் கொலை செய்வது என்று முடிவெடுத்தார் ராஜகோபால்.
முடிவெடுத்ததோடு 26.10.2001 அன்று ப்ரின்ஸ் சாந்தகுமாரை ஆள் வைத்துக் கடத்தவும் செய்தார். கணவரைக் காணோம் என்று தவித்த ஜீவஜோதி வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் சரவணபவன் உணவக உரிமையாளரான ராஜகோபால், தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், தனக்கு திருமணமான பிறகும் கூட அந்த வற்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், கணவர் காணாமல் போன விஷயத்தில் தனக்கு ராஜகோபால் மீது தான் அழுத்தமான சந்தேகம் இருப்பதாகவும் ஜீவஜோதி தனது புகாரில் குறிப்பிடுகிறார். ஜீவஜோதி புகார் அளித்த 5 நாட்களுக்குப் பின் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் கொடைக்கானல் மலைச்சாலையில் ப்ரின்ஸ் சாந்தகுமாரின் உடல் சடலமாக மீட்கப்படுகிறது. இதையடுத்து தான் காதல் கணவரின் கொலைக்கு நீதி கேட்டு ராஜகோபாலுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை வலுவாகக் கையிலெடுத்தார் ஜீவஜோதி.
ஜீவஜோதியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ராஜகோபால் தரப்பு, இது தொழில் போட்டி காரணமாக யாரோ தூண்டி விடுகிற சதி, ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலைக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை’ என்றது. ஆயினும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ராஜகோபால், அவரது உணவக மேலாளர் டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது ராஜகோபாலின் உணவக மேலாளர் டேனியல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ராஜகோபாலுக்கான தண்டனை உறுதியானது. விசாரணையின் முடிவில் 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
பின்பும் ஓயவில்லை ராஜகோபால் தரப்பு. நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு நாகை மாவட்டம், வேதாரண்யம், தேத்தாகுடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கிய ஜீவஜோதியை அங்கிருந்தும் ராஜகோபால் தரப்பு கடத்த முயற்சி செய்தது. காரணம், வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு தங்கள் தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொல்லி ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்று. ஆனால், ஜீவஜோதி இதற்கு உடன்பட மறுக்கவே கடத்தல் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அந்த முயற்சி அப்போது கிராம மக்களால் தடுக்கப்பட்டுவிட்டாலும் இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கத் தவறவில்லை ஜீவஜோதி. அவரளித்த புகாரின் கீழ் கடத்தல், கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ் ராஜகோபால் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில்…
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையார் ஜீவ ஜோதியை அழைத்து உண்மை நிலவரத்தை கேட்டறிந்து ஜீவஜோதிக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்…
ஜெயலலிதா அம்மையார் அவர்களால்தான் நீதி நிலைநாட்ட ப்பட்டது.
இல்லை என்றால் ராஜகோபால் சட்டத்தை வளைத்து நீதியை விலைபேசி வெற்றி கொண்டிருப்பார்.
இந்நிலையில் ராஜகோபாலினால் தன் வாழ்வில் நிகழ்ந்து விட்ட துயரப்பக்கங்களில் இருந்து விடுபட நினைத்த ஜீவஜோதி தனது நீண்டநாள் நண்பரான தண்டாயுதபாணி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். வேதாரண்யம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட தன் மீதான, கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கின் விசாரணைக்காக அச்சமயம் 9 மாத கர்ப்பிணியாக இருந்த ஜீவஜோதி நீதிமன்றப்படி ஏறி சாட்சி சொன்னார். முதலில் காதல் கணவரின் கொலைக்காக நீதி கேட்கும் மனநிலையில் இருந்த ஜீவஜோதி இப்போது நிறையவே மாறிப் போயிருந்தார். இரண்டாம் திருமணமும், வயிற்றில் இருந்த சிசுவும் ஜீவஜோதியின் மனதை மாற்றி விட்டனவோ என்னவோ? ‘ அண்ணாச்சி தன்னைக் கடத்தியதாகவோ, மிரட்டியதாகவோ நாகபட்டிணம் மாவட்டத்தில் இருக்கும் எந்த ஒரு காவல்நிலையத்திலும் தான் புகார் அளிக்கவே இல்லை’ என ஜீவஜோதி அந்தர் பல்டி அடித்தார். அதைத் தொடர்ந்து ஜீவஜோதியை அண்ணாச்சி தரப்பு சமரசம் செய்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் இதை ஜீவஜோதி மறுத்தார். ‘வாழ்க்கையில் நேர்ந்த துயரங்கள் அனைத்துமே தலைவிதிப்படி நடந்து விட்டதாகவும், தன்னைத் துரத்தும் பிரச்னைகளில் இருந்து ஒரேயடியாக ஒதுங்கி விடத் தான் முடிவெடுத்து விட்டதாகவும் ஜீவஜோதி அப்போது
பேட்டியளித்தார்.
இப்படி ஒருவழியாக ஜீவஜோதி கடத்தல் வழக்கில் இருந்து விடுபட முடிந்த ராஜகோபால் தரப்பால் ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுபட முடியாமல் போனதன் காரணம் விதி வலியது என்பதால்.
ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் 2004ல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
2009 ஆம் ஆண்டு அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி கே மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைத்தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்தது.
ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ‘தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என நீதிமன்றத்தில் அவர் கோரினார்.
ஆனால், இவ்வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்ததோடு ஜூலை 7 ஆம் தேதிக்குள் ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால், கடைசி நாளில் சரண் அடைவதில் விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் முறையிட்டார். ஆனால், நீதிபதிகள் ஏற்கவில்லை. இதையடுத்து, 8-ந்தேதி ஆம்புலன்சில் வந்து சரண் அடைந்தார். அதன்பிறகு சிறைக்கு செல்லாமலேயே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று வடபழனி விஜயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், ராஜகோபாலின் உயிர் பிரிந்தது.
சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து, சிறைக்கு செல்லாமலேயே தப்பி வந்த சரவணபவன் ராஜகோபால், இப்போது சிறைக்கு செல்லாமல் இறந்துபோனார். (இடையே விசாரணைக்காலத்தில் மட்டும் சில நாட்களில் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.)
2001 ம் ஆண்டு 55 வயதில் வழக்கில் சிக்கி
74 வது வயதில் உச்ச நீதி மன்றத்தால் ஆயுள்தன்டனை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் இறைவனின் நீதிமன்றத்தில் 18-07-2019 காலை 10.30 மணியளவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு இறைவனடி சேர்ந்தார்…
இந்நிலையில் அவர் தண்டனை கைதி என்பதால் அவரது உடலானது சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகுதான் அவரது உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் 18-07-209 மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அவரது உடல் சொந்தஊரான திருநெல்வேலி மாவட்டம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு புன்னைநகரில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 19-07-209 அன்று அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.
சரவணபவன் ராஜகோபால் குறித்த எனது பதிவுகள் குறித்து எனது அன்பிற்குரிய நண்பர்கள் சிலர் நான் ராஜகோபாலின் மரணத்தை கொண்டாடுவதாகவும் அது தவறு என்றும் கூறியிருந்தனர்.
★பெண்ணாசையில் கொலையும் செய்வான் காமுகன்.
★சரவணபவன் ராஜகோபாலை மரணம் வென்றது.
★பாவத்தின் சம்பளம் மரணம்.
இதுதான் ராஜகோபால் குறித்து நான் போட்ட பதிவு..
இதில் நான் ராஜகோபாலின் மரணத்தை எங்கே கொண்டாடுகிறேன்…???
ராஜகோபாலின் மரணம் உலகுக்கு உணர்த்திய செய்தியை மட்டுமே சொன்னேன்…
ஒரு சிறந்த நிர்வாகியாக இயங்கிய அவரால் அந்த திறமையை சொந்த வாழ்வில் மேற்கொள்ள முடியாமல் போனது தான் அவரது தோல்விக்கு முதல் காரணமாகி விட்டது.
மேலும் பலவீனமான பெண்களை பலமான ஆண்கள் வென்று விடலாம் என்ற ஆணாதிக்க மனோபாவமே அடுத்த தோல்வி…
பணத்தால் எதையும் விலைபேசிவிடமுடியும் என்ற பணக்கார திமிர்தான் தப்புக்கு மேல் தப்பு செய்ய தூண்டியது..
தான் சாதிக்க முடியாததை தன்னிடம் வேலை செய்யும் ஒரு வேலைக்காரன் சாதித்து விட்டானே என்ற ஆணவத்தில் வந்த வெறிதான் அறிவை மறைத்து கொலைசெய்தாவது அடைந்துவிடவேண்டும் என்று தூண்டிவிட்டது.
தனது தொழில் சாமர்த்தியத்தின் மூலம் உலகம் முழுவதும் கிளை பரப்பிய ‘சரவணபவன்’ ராஜகோபால் இன்று உலகத்தில் இல்லை.
சரவணபவன் ராஜகோபாலை மக்கள் கடுமையான உழைப்பால் உயர்ந்த உணவக முதலாளியாக மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ராஜகோபாலை பின்பற்ற விரும்புபவர்களுக்கு அது தான் உகந்தது. மற்றபடி ராஜகோபாலின் இருட்டுப் பக்கங்கள் அவரையே காவு கொண்டு இன்று அவரது வாழ்வையே முடித்து வைத்து விட்டதில் மீண்டும் உறுதியாக நம்பத் தோன்றுகிறது…
‘#ஊழ்வினைஉறுத்துவந்து_ஊட்டும்’
முன்பெல்லாம் பிறவிகள் தோறும் தொடர்ந்து வருமெனக் கருதப்பட்ட ஊழ்வினையானது…
இப்போது அதே பிறவியில் வட்டியும் முதலுமாகத் திருப்பி அளித்து விடுவது தான் அந்தோ பரிதாபம்…!!!
இராமச்சந்திர மூர்த்தி.பா