சற்று எ(உ)ங்கள் சிந்தனைக்கு …!!

(Subakaran Mayilvaganam)

 

“எழுக தமிழ்” யாழில்(24-09.2016) நடைபெற்றது, அது தமிழர்களுக்கு மாபெரும் வெற்றி என்று புலம்புகின்றனர். ஆனால், இதை பற்றி மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும் …!! இந்த எழுக தமிழை ஏற்பாடு செய்தவர்கள் TPC அமைப்பு. அந்த அமைப்பில் பொறுப்பில் இருப்பவர்களோ, இலங்கை அரசிடம் இருந்து வாழ்க்கை முழுவது வருமானம் பெறும் திடத்தில் இருப்பவர்கள். மிகவும் பணக்காரர். நாளைய உணவிற்கு சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை.

>> அடுத்ததாக முற்றவெளியில் நடைபெற்ற எழுக தமிழ் மேடையில் பேசியவர்களை பார்ப்போம்: அவர்களும் இலங்கை அரசிடம் இருந்து வாழ் காலம் முழுவது நிரந்தர வருமானத்தை பெறுபவர்கள். அத்துடன் மிகவும் பணக்காரர்கள்.

>> ஊர்வலத்தின் மத்தியில் ஒலிபெருக்கியை வைத்து கத்தியும் பதாதைகளை ஏந்தியும் சென்றவர்களை பார்த்தால்: அவர்களும் இலங்கை அரசிடம் இருந்து வாழ்க்கை முழுவது வருமானம் பெறும் திடத்தில் இருப்பவர்கள். மதகுருமார், பாதிரியார், ஆலய சகோதரிகள், யுனிவேறுசிட்டி புரொபெஸர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள்.

>> இறுதியாக எழுக தமிழில் பங்கு பற்றியவர்களை பாப்போம்: அவர்கள் மாணவர்கள், யுனிவெர்சிட்டி மாணவர்கள், வியாபாரிகள், கூலிதொழிலாளர்கள், படித்து பட்டம் பெற்றும் வேலை கிடையாமல் இருப்பவர்கள். இவர்கள் நிரந்தர வருமானம் அற்றவர்கள். அடுத்தவேளை உணவே கேள்விக்குறி.

உண்மை என்னவெனில் இந்த நாங்காவது வகையினரானவர்கள் தான் “எழுக தமிழில்” பங்கு பற்றியவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்…!!

ஆனால் இந்த எழுக தமிழ் இவர்களுக்கு ஏதாவது நன்மைபாயிக்குமா..?? இல்லவே இல்லை என்றுதான் எங்களால் சொல்லமுடியும்.

இங்கு எழுகதமிழ்நடத்தியவர்களின் உள் நோக்கம் தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று கொடுப்பதோ அல்லது பா லும் தேனும் ஓடும் ஆற்றை கொண்டு நாடு அமைத்து கொடுப்பதோ அல்ல.

மாறாக,
தமிழர்கள், >>”பொருளாதார முறையில் முன்னேறினால்” தங்கள் அரசியல் இலாபங்களை (TPC இல் அங்கம் வகிப்பவர்களுடைய ) மறந்து விடுவார்கள்<< என்பதே உண்மையான உள் நோக்கம்…!!

எனவே சிந்திப்பவன் நன்மை பெற கடவன் ….!!!