பெரியாருக்குப் பின் தி.க அவை நடத்தியவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பினார்கள் .அவரகள் சாதி வெறி பிடித்தவர்கள் என்றார்கள்இதற்கு பல தாழ்த்தப்பட்டவர்களும் ஆதரவு தெரிவித்தார்கள்.பலர் மௌனம் சாதித்தார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பிராமணர்களாக இருந்தனர்.ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாத் சாதிக்கு எதிரானவர் என்றால் அவர்களின் நம்பூதிரி என்ற சாதிப்பதத்தை எடுக்க முடியுமா என வரட்டுத்தனமான சவால்களை விட்டனர்.
அவர்கள் பிராமணர்கள்தான். ஆனால் அவர்களே இந்தியாவின் அவசியம் கருதி கம்யூனிஸ்ட் கொள்கைகளை முன்னெடுத்தவர்கள். ஆரம்பகால உறுப்பினர்கள். ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துபவர்கள். வெண்மணி படுகொலைகள் அரங்கேறியபோது அதை நாடளாவிய முறையில் கண்டித்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள். பகுத்தறிவு பாசறையில் வந்த அண்ணாவின் ஆட்சிக்காலம் அது. கருணாநிதி,எம்.ஜி.ஆர் இணந்து இயங்கிய காலம். பிராமணர்கள் அல்லாத தி.மு.க மௌனம் காத்தது. தி.மு.க ஆட்சியிலேயே குற்றவாளிகள் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யப்பட்டனர்.
சில தாழ்ததப்பட்ட சாதியினர், சமூகத்தில் செல்வாக்கானவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வார்கள். பின் பதவியை எதிர்பார்ப்பார்கள்.கிடைக்கவில்லை எனில் வெளியேறி பிராமணர் ஆதிக்கம் என்பார்கள்.கம்யூனிஸ்ட கட்சியில் பதவிஎன்பது உடனடியாக கிடைப்பதில்லை.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி, எம்.எல்.ஏ க்கள் சம்பளம் எதையும் வீட்டுக்கு கொண்டு சென்றதில்லை.சொத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி பணத்தில் வாழ்பவர்கள் .அவரகளையே சாதிவெறி பிடித்தவரகள் என கூக்குரல் போட்டனர் பகுத்தறிவு வாதிகள்.அந்தளவு தியாகம் செய்ய எந்த தாழ்ந்தசாதிக்காரனும் தயாராக இல்லை.
சாதிப்பெயரை அகற்றினால் மட்டும் அவர் சாதிவெறியர் அற்றவர் ஆகிவிடுவாரா. சாதிவெறி உயர்சாதியினர் மட்டும் கடைப்பிடிப்பதில்லை. சகல சாதியினரிடமும் உண்டு. பலர் தமக்கு அங்கீகாரம் வேண்டி நிற்கிறார்கள். சாதியை ஒழிக்கவேண்டும் என விரும்பியதில்லை.
இலங்கையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சாதிக்கு எதிராக போராடியபோது சகல தாழ்த்தப்பட்ட மக்களும் அக்கட்சியின் பின்னால் நின்றனர். அக் கட்சி நளவர் பள்ளர் கட்சி என உயர்சாதியினர் கேலி பண்ணினார்கள. ஆனால் அதை ஆதரித்த நளவர் பள்ளர் பறையர் எல்லோரும் கம்யூனிட்டுகளா. இல்லையே. இன்னமும் அதிகளவு இடதுசாரிகள் உயர்ந்த சாதி சமூகத்தவர்களே. அவர்களாலேயே சமூகம் இன்னமும் பாதுகாக்கப்படுகிறது. சாதி அடக்குமுறையின் விளைவாகவே பலர் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தனர். கமயூனிசம் பேசுகின்றனர். இவ்வளவு கூக்குரல் போடுபவர்கள் எத்தனைபேர் உள்பகை முரண்பாடு இல்லாதவர்கள்.
அர்த்தமுள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசாமல், முகங்கொடுக்காமல் முட்டையில் மயிர் பிடுங்கும் வேலையே அய்யருக்கு எதிரான வாதம். அவர் சரியானவரா தவறானவரா தெரியாது. ஆனால் பெயரை அடைமொழியை வைத்து ஒரு பிரச்சினை அவசியம் இல்லை. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விமர்சகர்களும் முட்டாள்களே. இதில் யாருக்கும் இலாபம் இல்லை.
அதி தீவிரவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் மறுவடிவமே.
(விஜய பாஸ்கரன்)