சிந்தாந்த அரசியலும் சிந்தனை அரசியலும்

ஜனநாயக சக்திகளின் கூட்டமைப்பு இதற்கான விலங்குளை அவர்களுக்கு போட்டுள்ளார்கள் என்பதில் இந்தியாவின் ஜனநாயக் தேர்தலை வெற்றியாக நாம் கொள்லாம்

இனி இலங்கை அரசியல் பரப்பிற்கு வருவோம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி என்ற ஜேஆர் ஜெயவர்த்தனாவின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம்தான் ஏலவே இலங்கையில் மேலோங்கி வந்த பௌத்த சிங்கள பேரினவாதத்தை சிறுபான்மையினரை முழுமையாக ஒழித்துக் கட்டுதல் என்ற வகையிலான யுத்தம் ஒன்றிற்கு இழுத்துச் சென்றது என்றால் மிகையாகாது.

ஐதே கட்சி ஜேஆரின் அரசியல் அவ்வாறானது

தென் இலங்கை ஜனநாயக இடதுசாரி சக்திகளும் பேரினவாதம் பேசினால்தான் அல்லது பேரினவாத்திற்கு மௌனம் சாதித்தால்தான் பாராளுமன்ற அரசியலை கதிரைகளை பெறமுடியும் என்ற நிலைக்கு தள்ளியதில் ஜேஆரின் பங்கு கோராமானது.

அதிலும் அந்த புதிய அரசியல் அமைப்பு…. நிறைவேற்று அதிகாரம் கொண்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரிநிதிகள் சபை பாராளுமன்றத்திற்கு கட்டுப்படாத ஜனாதிபதிப் பதவி என்றாக அதி உச்சம் அடையக் காரணம் ஆயிற்று

சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தில் பிரிதானியா தனது முதலாளித்துவ நவ காலனித்துவ சுரண்டலுக்கு ஏற்ற ஒரு கட்சியை இலங்கையிலும் ஏற்படுத்திவிட்டுத்தான் சென்றார்கள்

அது தான் டிஎஸ் செனநாயக்கா தலமையிலான ஐதெ கட்சியின் ஆட்சி
இதன் வழித்துதொன்றல்கள் இன்று இரு கூறாக தோற்றம் அளித்தாலும் ஒன்று ரணில் தலமை என்றாக இன்னொன்று சஜித் என்றாக பிரிந்து நின்றாலும் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்மைகள்.

வலதுசாரிகள் மேற்குலகின் செல்லப் பிள்ளைகளாக தம்மை எப்போது தகவமைத்து செயற்படும் விருப்புடையவர்கள்.

சஜித்திற்கு இது வரை அரசுத் தலைவர் பதவி கிடைக்காவிட்டாலும் அவரின் தந்தை வழி அரசியல் அதனையே கூறி நிற்கின்றது.
இதில் மேற்குலகின் பட்டி கட்டிய கனவானாக கன கச்சிதாக பொருந்துபவர் ரணில. ஆனால் இலங்கையின் குறிப்பாக கிராமப் புற ஏழை எளிய சிங்கள மக்களின் கரையோக்; கடற்தொழிலாளர்களின் மீட்போனாக அவர் எப்போதும் இருந்தது இல்லை

கோதபாயாவின் ஆட்சியல் ஏற்பட்ட பொருளாதார திவாலாகும் நிலமை ஏற்படட்டு மக்கள் வீதியிற்கு இறங்கிய போது…

பொருளாதார மீட்சி என்பதாக மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து அதி உயர் வரி பணவீக்கம் பொருட்களின் விலை ஏற்றம் கடன்வாங்கி கடனைத் தீர்த்தல் என்பதற்கு அப்பால் இவரிடம் எந்த பொருளாதாரக் கொள்ளையும் இல்லை.

நாட்டை மேற்குலக நாடுகளிடம் அடகு வைக்கும் செயற்பாட்டிலும் இறங்கியும் விட்டார்

நாட்டின் வளங்களில் அடிப்படையில் சுயசார்புப் பொருளாதாரமா…? அப்படி என்றால் என்ன…? எனக்கு ஐஎம்எவ் ஐ தான் தெரியும் என்றாக ரணில் இன்று மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஒருவரும் நாட்டின் அதி உயர் பதவியிற்கும் வரலாம் என்றான அரசியல் முறையால் பதவியில் இருப்பவர்.

எங்கே ஏதாவது தேர்தலை வைத்தால் தன்னால் மீண்டும் மீண்டும் தோற்றுவிடுவேமோ என்பதான நிலமையில் உள்ளுராட்சித் தேர்தல்களைக் கூட நடாத்தாமல் பின்னடிக்கின்றார்.

இதற்குள் அதிகம் சிக்குண்டு இருப்பது அதிகாரப் பரவலாக்கல் என்பதான மாகாணசபைத் தேர்தல்

ஆரம்ப காலத்து ஐதே கட்சியிற்று மாற்றழுடாகக சுதேசியத்தை முன்னிறுத்தி இடதுசாரிகளை அரவணைத்து பயணப்படுவதாக ஆரம்பிக்கப்பட்ட சுதந்தரக் கட்சியும் கால ஓட்டத்தில் பேரினவாதத்திற்குள் வீழ்ந்தாலும்…

இதற்குள் இளையோடி இருந்து அமெரிக்க விருப்பமின்மை என்பது இந்து சமுத்திரப் பிராந்திய அமைதியிற்கு சில விடயங்களை செய்திருக்கின்றது என்பதை நாம் மறுதலிக்க முடியாது.

இலங்கையின் சுய பொருளாதாரத்தை கட்டியமைக்க உருவான உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலான இறக்குமதித் தடை உள்ளநாட்டு உற்பத்தியை பெருக்கும் என்றான சிறீமாவோ பண்டாரநாயக்கா தலமையிலான ஐக்கிய முன்னணி அரசு சில பொருளாதார முன்னேற்ற மாற்றங்களை இலங்கையில் ஏற்படுத்தியது
கூடவே மிக முக்கியமாக இலங்கையை குடியரசாக்கி பிரித்தானியா போன்ற நாடுகளின் நவகாலனித்துவ பிடியில் இருந்து இலங்கையை விடுதவித்;தான செயற்பாடுகளைக் கொண்டிருந்து இலங்கை முழுவதற்குமான பாய்ச்சல்தான்.

ஆனாலும் பேரினவாதத்தை தனது ஆட்சியிற்கான அத்திவாரமாக தொடர்ந்தும் கை கொண்ட செயற்பாடுகள் ஒரு எல்லையைத் தாண்டி இலங்கையின் வளர்ச்சியை ஒருமைப்பாட்டை சகோதரத்துவத்தை சமத்துவத்தை இலங்கையில் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகின்றது

கூடவே இதற்கு முன்னர் ஜேஆரின் கண்டி யாத்திரை என்தினால் எஸ்டபிள்யூஆர்டி இன் தமிழருக்கு உரிமை வழங்குவதான ஒப்பந்தத்தை கிழித்துப் போட்டது என்பதாக இலங்கையின் சிறுபான்மையினர் அது இலங்கை தமிழர்கள் மலையகத் தமிழர்கள் முஸ்லீம்கள் என்பதாக பல் தேசிய இனங்களும் சம உரிமை பெற்று வாழுதல் என்பதாக தனது அரசியலை நகர்த்த முடியாமல் போனதாக அமைந்தன.

அது சிங்களம் மட்டும் என்ற சட்டம் என்ற வரை செல்ல வேண்டி இருந்து.
சந்திரிகாவின் சமஸ்டிக்கு அப்பால் சென்ற வரையலான அரசியல் திருத்தத் திட்டம் இது வரை முன்னெடுக்கப்பட்ட மிகச் சிறந்து அரசியல் அணுகு முறையாக இருந்தாலும் இதனை தோற்கடிப்பதில் ஐதேக இன் ரணிலும், தமிழர் தரப்பு தமிழ் தேசியக் கூட்மைப்பும், கூடவே அவரின் மாமனாரும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான அனுரத்த ரத்தவத்தையும் கணிசமான பங்கை வழங்கி
பாராளுமன்றத்திற்குள்ளேயே ஒப்பந்தத்தின் நகலை கொழுத்துதல் என்பதாக முடிந்தும் விட்டது

மேலே கூறிய ஐதே கட்சி சுதந்திரக் கட்சிகள் மாதிரியான செயற்பாடுகளைதான் தமிழர் தரப்பிலும் இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற வலதுசாரி கட்சியும் அதிலிருந்து தன்னை வேறுபடுத்தி ஆரம்பித்த முற்போக்கான பாத்திரத்தை கொண்டிருந்து சமஸ்டி தமிழரசுக் கட்சியிலும் இறுதியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்ற வலதுசாரி செயற்பாட்டிற்குள் தம்மை தேர்தல் தோல்விகளின் பின்பு இன்னொரு தேர்தல் வெற்றிக்காக தனிநாடு என்றாக பிரகடனத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர்

இதன் இன்னொரு வடிவம்தான் சிவாஜிலிங்கத்தின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் இன்றைய தமிழர் தரப்பு பொது வேட்காளர் என்ற செயற்பாடுகளும் ஆகும். இதற்கு அப்பால் இதில் ஏதும் இல்லை என்பதாக பார்க்க முடிகின்றது

தமிழ் காங்கிரசாக இருக்கட்டும் தமிழரசுக் கட்சியாக இருக்கட்டும் பின்பு இணைந்து உருவான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகட்டும் புலிகளால் உருவாகப்பட்ட விடுதலை இயகங்கள் சிலவற்றை யும் இணைத்து தமிழரசுக் கட்சியின் மேலாதிகத்தில் உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றாக எல்லோரும் இலங்கையின் வலதுசாரிக் கட்சியான ஐதே கட்சியின் செல்லபிள்ளைகள்.

அவர்கள் எமது உரிமைகளை தங்கத் தாம்பாளத்தை வைத்து அடுத்த பொங்கலுக்கு…. தீபாவளிக்கு தீர்வை தருவார்கள் என்றுதான் பயணத்தவர்கள்.

இதற்கு உபகாரமாக அந்த வலதுசாரி அரசுகள் கொழும்பில் ஒரு சுக போக வாழ்விற்கான காணி நிலம் கார் காசு என்றாக பலதையும் கொடுத்து உதவியதை தமிழ் மக்கள் அறிவர்.

ஆனாலும் தேர்தல் என்று வந்தால் விடியற் காலை எழுந்து கண்ணை கசக்கியபடி ‘போடு புள்ளடி வீட்டிற்கு நேரே’ என்பதாகவே அதிகம் பயணப்படுகின்றனர்.

இதில் மக்களை பெருவாரியாக விழிப்படையச் செய்வதில் தமிழர் தரப்பு இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள் ஜனநாகவாதிகள் அதிக முன்னேற்றத்தை காணவில்லை என்பதையும் நான் கருத்தில் கொண்டதாக வேண்டும்

மலையகத்து தொண்டமான தலமைகளும் அருளம்பலம் தியாகராசா காலத்தில் இருந்து இன்று அமைச்சராக விளங்கும் தமிழ் அமைச்சர்கள் யாவரும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாம் தயார் பதவிகளைப் பெற இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நியாயமான வாழ்க்கையை அமைக்கலாம் கோட்டைகளையைக் கட்டிவிடலாம் என்றே அதிகம் பயணித்தனர்…. பயணிக்கின்றனர்….

இந்த சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை அரசியலில் சிங்கள இளைஞர்களை அதிகம் நம்பிய ஜேவிபி இன் கிளர்ச்சிகளும் செயற்பாடுகளும் தமிழரர் தரப்பில் இளைஞர்கள் அதிகம் இணைந்த இணைக்கப்பட்ட ஈழவிடுதலைப் போரளிகளும் அவர்களில் சில அமைப்பினர் இடதுசாரிக் கருத்தியலை பேசினாலும் தமது மக்களுக்கு அப்பால் ஒரு மக்கள் இணைப்பை ஏற்படுத்தும் அரசியலை ஆள் திரட்டலை கலந்துரையாடலை அதிகம் செய்யவில்லை

இதனால் இலங்கையில் தமிழர் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் வலதுசாரிக் கருத்தும் அதுசார்ந்த அரசியலுமே அதிகம் ஆதிகத்தில் இருக்கின்றது ஆட்சியில் இருக்கின்றது

தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் அல்ல முழு இலங்கை மக்களுக்குமான அதிகாரப் பரவலாக்கல் என்பதான 13 வது திருத்தச் சட்டத்தை அது தமிழருக்கான உரிமைகளை மட்டும் வழங்குவதாக அது உருவாக்கப்பட்ட போது சிங்களத் தரப்பில் பிரசாரப்படுத்தப்பட்டது.

அதே போல் தமிழ் தரப்பிலும் இதில் அதிகாரம் ஏதும் இல்லை காணி பொலிஸ் என்பதாக என்று கூறி நிராகரித்த செயற்பாடும் ஏதோ மகாணசரபை என்பது தமிழருக்கான அரசியல் தீர்வு தனியாக பிரிந்து போய்விடுவார்கள் என்று பேரினவாத சக்திகளும் இதில் ஏதும் இல்லை என்பதாக தமிழர் தரப்பில் பெருபான்மையினரும் முழு இலங்கையிற்கான அதிகாரப் பரவலாக்கத்தை குறுக்கி ஏதும் அற்றதாக ஆக்கினாலும்…

இதில் மகாணசபை முறமையிற்கு ஆரம்பதில் யார் யார் மும்மூரமாக செயற்பட்டார்களோ இதனை எதிர்தார்களோ அவரகள்தான் இன்று இந்த மாகாணசபை ஆட்சியை அதிகாரத்தில் தொங்க வேண்டும் என்று அதிகம் அலைந்தும் திரிகின்றனர்.

கூடவே மகாணர அரசும் தமது ஏக சொத்தாகவும் இதனைக் காட் செயற்படுகின்றனர் இதில் அதிகம் முந்துபவர்கள் தமிழரசுக் கட்சியினர்.
ஜேவிபி தனது ஆரம்ப கால அரசியல் ஐந்து வகுப்புகளில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றாக மலையக மக்களை காட்டிய வெறுப்பு வாதமும் இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையை நீதி மன்றம் சென்று பிரித்ததும் வரலாற்றில் அவர்கள் தம்மை இடதுசாரிகளாக முழு இலங்கையிற்குமான பிரநிதிகளாக சிறப்பாக தமிழ் மக்கள் நம்பும் படியாக அதிகம் முன்னேற முடியாத காரணிகளை கொண்டிருக்கின்றனர்

சிறீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடற்றவர் என்றவாகவும் நாடு கடத்தபட்டவர்களாகவும் மலையக மக்களை கையாண்டதையும் ஜேவிபின் ஐந்து வகுப்பில் சொன்ன இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை

இதுவரை இதற்காக சளாப்பிற்கு அப்பாற்பட்ட விளக்கங்ள் அவரகளிடம் இருந்து வரவே இல்லை.

பல ஜேவிபி நண்பர்களுடன் தனிப்பட முறையில் பேசிய பல சந்தர்பங்களிலும் கூட அவர்களின் வெளிப்படுத்தல் இதனை ஒட்டியதாகவே இருந்த அனுபங்களே எனக்கு உண்டு

13 வது திருத்தச் சட்டத்திற்கு எதிரான பிரேமதாசாவின் செயற்பாட்டிற்கு தெற்கில் ஆயுத வடிவம் கொடுத்து அதனை ஆதரித்தவர்களை கொன்றொழிப்பதில் ஜேவிபியிற்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு தமிழ் பிரதேசங்கள் எங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உண்டு.

இதில் பிரேமதாசாவிற்கு இரு குழல் துப்பாக்கிகளாக செயற்பட்டவர்கள் ஜேவிபி உம் தமிழீழ விடுதலைப் புலிகளும் இரு தரப்பிற்குமான ஆயுத வழங்கல் ஏனைய விடயங்கள் யாவற்றையும் வலதுசாரி பிரேமதாசாதான் செய்தார்.

தனது தேவைகளை நிறைவேற்றிய பின்பு தனக்கு உதவியர்களை அழிக்க முற்படுகையில் அவரும் அழிந்து போனார் என்பது வேறு கதை
இந்த இருதரப்பு ஆயுத செயற்பாட்டாளர்களும் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் உம் அவருடன் ஐக்கிய முன்னணி அமைத்த சில விடுதலை அமைப்புகளும் இடதுசாரி கட்சிகளையும் தவிர ஏனைய அனைவரும் எதிராக ஏதோ ஒருவகையில் பிரேமதாசாவுடன் இணைந்து மாகாணசபையை நிராகரித்தல் என்ற அரசியல் செய்தவர்கள் அதில் இணைந்து கொண்டவர்கள்

அழிக்கப்பட முடியாத பாசிசத்தை புலிகள் கொண்டிருந்தனர் என்பதான வளர்ச்சியை கொண்டிருந்த போது மகிந்த ஆட்சியாளர்கள் அவர்களை யுத்தத்தில் வென்றாலும் தொடரந்து தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை.

காரணம் யுத்தத்தின் பின்னரான அவர்களின் அரசியல் யுத்த வெற்றியைக் கொண்டே சிங்கள மக்களின் வாக்குளைக் கொண்டே ஆட்சியை விடாது தொடரலாம் என்ற மமதை அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக காட்டப்பட்டாலும் அது மீண்டும் நீறு பூத்த நெருப்பாக மீண்டும் எழுந்து வருவதற்கான வாய்புகள் அதிகம் உள்ளதாக இலங்கை அரசியல் உள்ளது

இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் அதனைத் தொடர்ந்த பெரும் தொற்று கொரனா நாட்டைக் கட்டியெழுப்புதல் என்பதான திட்டமிடாத கடன் பெறுதல் என்பதாக நகர்ந்து அரகலய போராட்டம் என்றாக மக்களின் தன் எழுச்சி சரியான தலமைத்துவம் இன்றி உருவான போது இதனை ஒவ்வொருவரும் தமக்கு சாதமாக பாவிக்கும் வரை இழுபட்டது.

அது ‘கோதபாய கோகம’ என்பதற்கு ரணிலும் ஆதரவு என்று அறிகைவிட்டு அவரையும் தப்பிச் சென்று மீண்டும் நாட்டிற்கு பத்திரமாக கொண்டு வந்த அளவிற்குதான் இந்த மக்களின் எழுச்சி போராட்டம் மழுங்கடிகப்பட்டது.

இந்த அரகலய போராட்ட காலத்தில் இலங்கையில் உள்ள இடதுசாரிகள் அல்லது அவ்வாறு அதிகம் தம்மை கூறி நிற்கும் இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக இருந்த ஜேவிபி தனக்கான அரசியல் கடமையை கையில் எடுத்துக் கொணடதா என்றால் இது விவாதத்திற்குரியது.

குறிப்பாக இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிறுபான்மை மக்களை அதிகம் இணைக்கும் செற்பாடுகளை காத்திரமாக முன்னெடுக்காது நழுவல் போக்கில் செயற்பட்டனர்

ஆனாலும் இன்றுள்ள நிலமையில் கடந்த 70 வருடங்களால ஐதே கட்சி சுதந்திரக் கட்சி என்று பயணத்த நிலையில் இருந்து விலகி ஜேவி யினருக்கு ஒரு வாய்ப்பை அழுத்தமான நியாமான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் அவர்களை வெற்றி பெறச் செய்து ஆட்சி பொறுப்பை கொடுப்பதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்றே என் பார்வை இருக்கின்றது

அனைத்து மக்களும் சம உரிமையுடன் சிறுபான்மை பெரும்பான்மை எனறு இல்லாமல் வாழும் சூழல் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கையின் வழங்களின் அடிப்படையில் உற்பத்தி சார்ந்த சுயசார்புப் பொருளாதார நகர்வுகளை முன்னெடுக்தல் என்பதான பொருளாதாரத் திட்டம் புதிய அரசின் பொருளாதாரக் கொள்கையாக இருத்தல் வேண்டும் என்பதான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்.

இது பற்றி தொடர்ந்தும் பேசுவோம்….