சின்னாப்பின்னமாக போகும் சிறுபான்மை பிரநிதித்துவம்

புதிய பாராளுமன்றத்துக்கான தேர்தல், எதிர்வரும் 14ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்றது. ஆக வாக்களிப்புக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இறுதி வாரம் என்பதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், நாட்டில் தேர்தலொன்று நடைபெறுகின்றதா? என தங்களால் உணர முடியாமல் உள்ளதென பலரும் கூறுகின்றனர். அந்தளவுக்கு பிரசாரங்கள் முழு வீச்சில் முன்னெடுக்கப்படவில்லை.