(என்.கே. அஷோக்பரன்)
இலங்கையின் வாக்கு வங்கி அரசியல் கட்டமைப்பு என்பது, நாம் விரும்பியோ, விரும்பாமலோ இன-மத தேசியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது. கொள்கைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறு அமைந்தாலும், வாக்கு வங்கியின் அத்திவாரம் என்பது, இன்றும் இன, மத தேசிய அடிப்படைகளில்தான் இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் இலங்கையின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக, நாம் அவதானிக்கக்கூடியதொரு விடயம், கட்சி சார்ந்த வாக்குவங்கியின் வீழ்ச்சியாகும்.