(மொஹமட் பாதுஷா)
மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர்.