(அழகு குணசீலன்)
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நல்லாசியுடன் ஆட்சியில் அமர்ந்த நல்லாட்சி இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரவிருந்த புதிய அரசியல் அமைப்பு காலத்தால் கனியவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறிவருகிறது. ஒரு நாடு ஒரே சட்டம் பேசும் இன்றைய அரசாங்கம் மற்றொரு புதிய அரசியல் அமைப்பு பற்றி ஆரம்பத்தில் இருந்தே பேசிப் பேசி தற்போது அந்த முயற்சி ஒரு குழு வரை ஆமை வேகத்தில் நகர்ந்திருக்கிறது.