இதற்கானபிரதானகாரணிகளாக இரண்டினைக் குறிப்பிடலாம். அதாவதுதேசிய இனப் பிரச்சனையைமுன்னெடுத்ததமிழரசுக் கட்சிஅல்லது கூட்டமைப்புதமிழ்த் தேசியவாதத்தினைத் தனதுமுதலாவதும், இறுதியானதும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இதனால் தமிழ் அரசியலிற்குள் பிளவுகள் மிகக் குறைவாக இருந்தன.ஆனால் தற்போதுதமிழ் அரசியலில் தேசியவாதம் பலவீனமடைந்து கூறுகளாகியுள்ளதால் அதுசிங்களஅரசியலில் அதற்கானமுக்கியத்துவத்தினைமிகவும் குறைத்துள்ளது.
அடுத்தது,சிங்களப் பகுதிகளில் பிரதான இரு அரசியற் கட்சிகளுக்கானஆதரவுகணிசமாக இருந்தது. இதனால் போட்டிஅதிகமாக இருந்தது. வெற்றிபெறுவதற்குஅல்லதுஆட்சிஅமைவதற்குதமிழ்த் தேசியவாதிகளின் துணைதேவையாகியது.அதன் காரணமாகதேசிய இனப் பிரச்சனைக்கானதீர்வுக்கானநிலைப்பாடுகளைமேற்கொள்ளவேண்டியிருந்தது.
தற்போதுநிலைஅவ்வாறில்லை. பிரதானஅரசியற்கட்சிகளுக்கிடையேதேசியபொருளாதாரக் கொள்கைகளில் பாரியவேறுபாடுகள் இல்லை. இதனால் கட்சித் தாவல்கள் மிக இலகுவாகவேநடைபெறுகின்றன. பொருளாதாரக் கொள்கைகளில் பாரியவேறுபாடு இல்லாதநிலையில் இக் கட்சிகளைவேறுபடுத்துவதுதனிநபர் அல்லதுகுழு அல்லதுவம்சஅரசியலேபிரதானகாரணியாகவுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் தேசியஅரசியல் என்பதுகுடியேற்றஅரசியல் ஆதிக்கசக்திகளின் எச்சசொச்சங்களுக்கும்,உள்நாட்டுபௌத்தசிங்களதேசியவாதசக்திகளுக்குமிடையேயானவேறுபாடாகஅமைந்தது. இதனால் தரகுமுதலாளித்துவத்திற்கும்,தேசியமுதலாளித்துவத்திற்குமிடையேயானபிரதானவேறுபாடாகஅவைஅமைந்தன.
1978 இல் ஐ தே கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டதிறந்ததாராளவாதபொருளாதாரகோட்பாடுகள் உள்ளுர் தேசியமுதலாளித்துவத்திற்குபெரும் வாய்ப்பைஅளித்தன. இதனால் தேசியமுதலாளித்துவசக்திகள் சர்வதேசசந்தையில் இணையவாய்ப்புஏற்பட்டது. சந்தைகள் விரிவடைந்தன. இவைமேற்குலகஆதரவுதரகுமுதலாளித்துவத்திற்கும்,உள்ளுர் தேசியமுதலாளித்துவத்திற்குமிடையேயானவேறுபாடுகளைமிகவும் குறைத்தன. இம் மாற்றங்கள் தரகுமுதலாளித்துவசக்திகளுக்கும்,தேசியமுதலாளித்துவசக்திகளுக்குமிடையேபோதுமான இணக்கத்தைஏற்படுத்தஉதவின. இதன் விளைவாககட்சித் தாவல்கள் சிக்கலில்லாமல் நடந்தேறின.
ஒரேமுதலாளித்துவநலன்களைநோக்கியபாதையில் செயற்படும் இரண்டுபிரதானகட்சிகள் இணைந்தும், இணையாமலும் செயற்படும் வழிமுறைபடிப்படியாகஏற்பட்டது. அதாவதுதேசியபொருளாதாரக் கோட்பாடுகளைச் செயற்படுவதில் ஏறக்குறையஒரேவிதமாக இருந்தபோதிலும் அதிகாரத்தைப் பகிர்வதில் வேறுபாடுகள் தொடர்ந்தன. இதற்குப் பிரதானகாரணம் அரசஅதிகாரவர்க்கங்களிடையேகாணப்பட்டவம்சஆதிக்கமாகும். இதுவே இன்றுபிரதானகட்சிகளைவேறுபடுத்தும் மாறிலிஆகும்.
தரகுமுதலாளித்தவசக்திகளிடையேகாணப்பட்டஆங்கிலகுடியேற்றஆதிக்கவம்சகுணாம்சங்களும்,உள்ளுர் தேசியவாதசக்திகளிடையேகாணப்பட்டசிங்கள,பௌத்தபஞ்சமகாசக்திகளெனஅழைக்கப்படும் கூறுகளானவிவசாயிகள்,தொழிலாளர்கள்,பிக்குகள்,ஆசிரியர்கள்,உள்ளுர் வைத்தியர்கள்என்பனஇணைந்தஇன்னொருபிரிவாகவும் இருவேறுஅதிகாரவம்சங்களைஆதரித்தன. தற்போது இந்தஐந்துசக்திகளுடன் ராணுவமும் இணைக்கப்பட்டுள்ளது. இவை இலங்கையின் முதலாவதுபிரதமரான டி எஸ் செனநாயக்காதலைமையிலும், எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்காதலைமையிலும் இயங்கின. இவர்களே இலங்கையின் அதிகாரவர்க்கவம்சஅரசியலின் பிதாமகர்களாகும்.காலமாற்றம் காரணமாகசிறீலங்காசுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ளகுடும்பஆதிகங்களில் பிளவுஏற்பட்டுதற்போதுபண்டாரநாயக்ககுடும்பஆதிக்கம் குறைந்து ராஜபக்ஸ குடும்பஆதிககுணாம்சம் அதிகரித்துவருகிறது.
ஏற்கெனவேகுறிப்பிட்டதுபோலதேசியபொருளாதாரகட்டுமானம் தொடர்பானவேறுபாடுகள்,கோட்பாட்டு; அணுகுமுறைகள் படிப்படியாகமறைந்தநிலையில்,தொடர்ந்தும் அதிகாரவம்சஅரசியல் நிலைப்பதைஉறுதிசெய்வது எவை?;
தற்போதுஉலகபொருளாதாரம் மேற்குலகநாடுகளின் ஆதிக்கத்திலிருந்துகைமாறிச் செல்கிறது. சீனா, இந்தியா,பிறேசில்,தென்னாபிரிக்கா, ரஷ்யா,தென்கொரியா,எண்ணெய் வளமிக்கஈரான்,சவூதிஅரேபியாபோன்றநாடுகளும் இயற்கைவளத்திலும்,தொழில் வளத்திலும்,நிதிவளத்திலும் பலமிக்கநாடுகளாகவளர்ந்துள்ளதாலும், இந் நாடுகளில் பலமேற்குலகஆதிக்கத்திலிருந்துவிடுபட்டுச் செல்வதாலும், இந் நாடுகள் தேசியஅரசியல்,மனிதஉரிமை, ஜனநாயகம் போன்றவைகுறித்து இலங்கையின் தேசியஅரசியலில் அதிகதலையீடுகாட்டுவதில்லைஎன்பதால் இத் தேசியமுதலாளித்துவசக்திகள் மேற்குலகஎதிர்ப்பைக் கோட்பாடாகமாற்றிக் கொண்டுள்ளன. இதுவே‘கூட்டுச்சேராகொள்கை’என்பதன் பின்னால் ஒழிந்துசெல்வதன் பின்னணியாகும்.
இலங்கையின் தேசியஅரசியல் என்பதுஅதிகாரவம்சங்களின் கட்டுப்பாட்டிற்கள் சென்றுள்ளநிலையில் இன்னமும் இரு கட்சிஆட்சிமுறைதொடர்வதற்கானபிரதானகாரணம் அதிகாரகுடும்பவம்சதொடர்புகளாகும். இலங்கையில் ஏற்பட்ட30 ஆண்டுகால ஆயதவன்முறையுடன் கூடியசிவில் போராட்டங்கள்,அதில் ராணுவத்தின் பங்களிப்புஎன்பனதொடர்பாகமேற்குநாடுகளின் தலையீடு,அதில் ஐ தே கட்சி,சிறீலங்காசுதந்திரக் கட்சிஎன்பனஎடுத்தநிலைப்பாடுகள் தேசியபாதகாப்பு,தேசிய இனப் பிரச்சனை,தேசியநல்லிணக்கம்,தேசியபொருளாதாரவளர்ச்சிஎன்பனகுறித்தவிவாதங்களைபிளவுபட்டநிலைக்குஎடுத்துச் சென்றன.
2005ம் ஆண்டுமுதல் 2015ம் ஆண்டுவரையான 10 ஆண்டுகாலப் பகுதியில்மேற்குறித்தபிரச்சனைகளில் மகிந்தஆட்சியாளர்கள் கொண்டிருந்தகொள்கைகள் தெளிவாகஅடையாளம் காணப்பட்டன. சிறுபான்மையினர் என்றஒருபிரச்சனை இல்லைஎனவும்,தேசிய இனப் பிரச்சனைஎன்பதுபயங்கரவாதமேஎனவர்ணிக்கப்படுவது,தேசிய இனப் பிரச்சனைக்கானதீர்வுகளைஉலகமனிதஉரிமைஅமைப்புகள் வலியுறுத்தினால் அவற்றைநாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிஎனவர்ணிப்பதும், இறுதிப் போரில் சிவிலியன்கள் எவரும் கொல்லப்படவில்லைஎனவும்,ராணுவம் ஜெனீவாமனிதஉரிமைக் கோட்பாடுகளுக்குஅமைவாகவேசெயற்பட்டதுஎனவும்,ராணுவத்தைத் தண்டிக்கமுடியாதுஎனவும் தெரிவித்தனர்.
ஆனால் 2015ம் ஆண்டில் பதவிக்குவந்தரணில் அரசுசர்வதேசபொருளாதாரஉதவிகளைப் பெறுவதற்குநாட்டின் மனிதஉரிமைப் பிரச்சனைதடையாக இருப்பதைஉணர்ந்துஅதனைநீக்கும் பொருட்டு ஜெனிவாத் தீர்மானங்களைஅமுல்படுத்துவதாகவும்,அதற்குஏற்றவகையில் தேசியசட்டங்களில் மாற்றங்களைஎற்படுத்துவதாகவும் உறுதிஅளித்துஅதன் பிரகாரம் அரசியல் அமைப்பில் 19வது திருத்தம்,சுயாதீனஆணைக்குழுக்கள் நியமனம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம்,காணாமல் போனோர் காரியாலயம் அமைத்தல் என்பவற்றைமேற்கொண்டது.
மகிந்ததலைமையிலான 2005ம் ஆண்டுமுதல் 2015ம் ஆண்டுவரையானஆட்சிமேற்குலகநாடுகளின் தலையீட்டிற்குஎதிராகச்செயற்பட்டதுமட்டுமல்ல,தேசியஅளவிலானஎதிர்ப்புகளைஒடுக்கும் வகையில் சட்டத்திற்குப் புறம்பானபலநடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,அரசியல் அமைப்பில் 18வது திருத்தத்தினைமேற்கொண்டு ஜனாதிபதிஆட்சியின் காலத்தின் கட்டுப்பாட்டைகாலவரையற்றநிலமைக்குமாற்றியது. மகிந்தவின் 10 ஆண்டுகாலஆட்சியில் ஏற்பட்டவிரக்திஆளும் தரப்பிற்குள்ளும் பிளவுகளையும்,பாதுகாப்பற்றநிலமைகளையும்,ஏற்படுத்தியது. சிறீலங்காசுதந்திரக் கட்சி, ஐ தே கட்சிஆகியவற்றிற்கிடையேஉட் பிளவுகள் ஏற்பட்டன. இதன் விளைவாகமகிந்தஆட்சிக்குஎதிராக அக் கட்சியின் செயலாளர்மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்கடித்தார்.
இம் மாற்றங்களைவெறுமனேசெய்திகள் என்றவகையில் நோக்காமல் இந் நடைமுறைகள் அரசியலில் ஏற்படுத்தியதாக்கங்களையும்,அதன் இன்றையவிளைவுகளையும் கவனித்தல் அவசியமாகிறது. உதாரணமாக 2015ம் அமைந்தமைத்திரி–ரணில் தலைமையிலானஅரசுதேசியபொருளாதாரம்,தேசியஅரசுக் கட்டுமானம்,தேசியநல்லிணக்கம்,தேசிய இனப் பிரச்சனைஎன்பவற்றில் பாரியமாற்றங்களைஏற்படுத்திஊழலற்ற‘நல்லாட்சி’ஒன்றைநிர்மாணிப்பதாகவாக்குறுதிஅளித்தது. ஆனால் அவையாவும் அரைகுறையானதாகவும்,செயற்படுத்தமுடியாதனவாகவும் மாறிஏமாற்றத்தைஅளித்தன. இதனால் தேசியஅளவிலானபிரச்சனைகளை இரு கட்சிகள் இணைந்தாலும் தீர்க்கப்படமுடியாதுஎனமக்கள் விரக்திஅடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
எனவே 2005ம் – 2015ம் ஆண்டுகாலஆட்சியும், 2015ம் – 2019ம் ஆண்டுகாலஆட்சியும் தேசியப் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாதஅளவிற்கு இறுக்கமடைந்தள்ளதோடு,மேலும் பிரச்சனைகளைஉக்கிரப்படுத்தியுள்ளதாகவேஉள்ளது. தற்போதையதேர்தல் பிரச்சாரங்களில் தேசியநல்லிணக்கம்,தேசிய இனப் பிரச்சனைஎன்பனகாணாமல் போயுள்ளன. தேசியபாதுகாப்பு,தேசியபொருளாதாரம் என்பனமுன்னிலைக்குவந்துள்ளன. கடந்தகாலத்தில் தேசியஇனப் பிரச்சனை,தேசியநல்லிணக்கம் என்பனவேஅரசியலின் பிரதானவேறுபாடுகளைஅடையாளப்படுத்தும் காரணிகளாக இருந்தன. தேசியநல்லிணக்கமேவிரைவான,நிரந்தரமானபொருளாதாரதிட்டமிடுதலுக்குஅவசியமெனக் கருதப்பட்டது. மனிதஉரிமைகளைப் பேணுதல்,சகலதரப்பாரையும் தேசியக் கட்டுமானத்தில் இணைத்தல் என்பது இன்றுதொலைந்துள்ளது.
பிரதானவேட்பாளர்கள் இவைபற்றித் தெளிவாகமுன்வைப்பதைஅல்லதுஅவைபற்றிப் பேசுவதைபெரிதளவில் தவிர்த்துள்ளனர். பதிலாகபலமானஅரசின் அவசியத்தையும்,தேசியபாதுகாப்புஆபத்திலுள்ளதாகவும்,நாடுவெளித் தலையீடுகளால் பிளவுபடுவதுதேசிய இறைமைக்குஆபத்தானதுஎனவும்,முதலில் உள்நாட்டு,வெளிநாட்டுஊடுருவல்களைத் தடுப்பதுஅவசியம் என்பதால் பலமான, இறுக்கமான,ராணுவவலிமையுள்ளஅரசைமுதலில் உருவாக்கவேண்டும் என்றவாதங்கள் நகர்த்தப்படுகின்றன. இந்தவிடயத்தில் பிரதானகட்சிகளின் பார்வைஒரேமாதிரியாகவேஉள்ளன. கோதபயவின் வாதங்களைஏற்றுள்ளகாரணத்தினால்தான் மகேஸ் செனநாயக்கஅபேட்சகராவதும்,சரத் பொன்சேகபாதுகாப்புஅமைச்சர் எனவும் கூறும் நிலைஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிகளின் போக்குமிகவும் கவனத்திற்குரியதாகஉள்ளது. வழமையாக இடதுசாரிகள் ஐ தே கட்சிக்குஎதிராகவேஎப்போதும்தமதுநிலைப்பாடுகளைஎடுத்துள்ளனர். ஆனால் தற்போதையதேர்தலில் இடதுசாரிக் கட்சிகளிடையேயும் பிளவுகள் மிகவும் தெளிவாகவேஏற்பட்டுள்ளன. முகிந்ததரப்பினரின் அணுகுமுறை,விவாதங்கள் என்பனபாசிசத்தின் அடிப்படைகளைக் கொண்டிருப்பதால் முதலில் ஜனநாயத்தைப் பாதுகாப்பதுபிரதானமானதுஎன்றநிலைஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் உலகமகாயுத்தத்தில் அமெரிக்கா,பிரித்தானியாபோன்றநாடுகளுடன் ரஷ்யாவும் இணைந்தேபாசிசம் தோற்கடிக்கப்பட்டது. எனவேபாசிசத் தோற்றப்பாட்டினைமுளையிலேகிள்ளிஎறிவதுமுதன்மையானதுஎன்பதால் இடதுசாரிக் கட்சிகளும் இப் பிரச்சனையில் வலதுசாரிகளுடன் அணியில் உள்ளனர்.
இங்குகுறிப்பாகதமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ளமாற்றங்களேதேசியஅரசியலில் தேசிய இனப் பிரச்சனைகைவிடப்பட்டமைக்கானகாரணமாகஉள்ளது. மைத்திரி–ரணில் அரசைஆதரித்ததமிழர் கூட்டமைப்புதமிழ் மக்கள் சார்பில் அளித்தஎந்தவாக்குறுதிகளையும் நிறைவேற்றமலேயேஅந்தஆட்சியைத் தொடர்ந்துஆதரித்துமக்கள் விரோதவரவுசெலவுத் திட்டங்களையும் ஆதரித்தது. அத்துடன் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகஉரிமைகளைக் கடந்த 71 வருடங்களாகப் பேசிஅரசியல் தீர்வும் அற்றுத் தேசியஅபிவிருத்தியையும்கைவிட்டநிலையில்,தற்போதுஅபிவிருத்திஎன்றபெயரில் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகஉரிமைகளைமுற்றாகக்கைவிட்டு,அபிவிருத்திதொடர்பாகஅரசைஆதரிக்கமுடியும் என்றநிலைக்குச் சென்றுள்ளமையால் சிங்களதரப்பில் தமிழ்ப் பிரதேசஅபிவிருத்திகுறித்துத் தாமேநேரடியாகபேசமுடியும் என்றநிலைஏற்பட்டுள்ளது.
எனவே கூட்டமைப்புத் தனதுநிலைப்பாட்டில் மாற்றத்தைஏற்படுத்தியுள்ளமைசிங்களஅரசியல் சக்திகள் மத்தியில் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகஉரிமைகள் பற்றிஅலட்டிக் கொள்ளாமல் அபிவிருத்திபற்றிப் பேசும் நிலைகாணப்படுகிறது. தமிழரசுக் கட்சிஅல்லது கூட்டமைப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தமாற்றம் தமிழ் அரசியலில் கூட்டமைப்பின் பிற்போக்கு,குறுந் தேசியவாதஆதிக்கத்தைஉடைப்பதற்கானவாய்ப்புகளைத் திறந்துள்ளது.
உதாரணமாகதமிழ்ப் பகுதிகளில் மிகநீண்டகாலமாகசெயற்பட்டுவரும் ‘தமிழர் சமூக ஜனநாயக் கட்சி’எனப் பெயர் மாற்றம் கொண்டுள்ளமுன்னாள் ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலைமுன்னணி ( நாபாபிரிவு) தற்போதுபொதுஜன பெரமுனவேட்பாளர் கோதபய ராஜபக்ஸ அவர்களைஆதரித்துப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளது. இம் முடிவுஎன்பதுகடந்த 71 ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் காணப்பட்டகுறும்தேசியவாதஅரசியலின் முடிவிலிருந்துபுதியதொடக்கத்தைநோக்கிச் செல்வதற்கானதந்திரோபாயமாகவேகருதுகின்றனர்.
1987 இல் ‘ இலங்கை – இந்தியஒப்பந்தம்’காரணமாகஅமைந்தவடக்கு–கிழக்கு இணைந்தமாகாணசபைஉருவாக்கப்பட்டுத் தேர்தல்கள் நடைபெற்றபோதுமக்கள் மத்தியில் ஆழமானஆதரவற்றநிலையிலும்,தமிழ் மக்களின் ஜனநாயகவிழுமியங்களை ஸ்தாபனவடிவில் பலப்படுத்தும் நீண்டநோக்கில் விடுதலைப்புலிகளின் பயமுறுத்தல்கள்,தமிழரசுக் கட்சியின் தயக்கங்கள், இந்தியசமாதானப் படையின் பிரசன்னம் என்பவற்றிற்குமத்தியில் தேர்தலில் குதித்துவடக்கு–கிழக்குமாகாணத்திற்கென ஓர் நிர்வாகக் கட்டுமானத்தின் முதலாவதுநிர்வாகத்தைப் பொறுப்பேற்றனர். இதுவேதேசிய இனப் பிரச்சனையில் இதுவரைமேற்கொள்ளப்பட்ட ஸ்தாபனஅடிப்படையிலானஒரேஏற்பாடாகும். இங்கிருந்தேஅதிகாரபகிர்வு,அதிகாரபரவலாக்கம் என்றகோட்பாட்டுவிவாதங்கள் ஊற்றுப் பெற்றுள்ளன. மிகவும் கொடுமையானகொலைப் பயமுறுத்தல்களின் பின்னணியில்,மிகவும் சிறியஅமைப்பாக இருந்தபோதிலும் தேசியமுக்கியத்துவம் வாய்ந்தமுடிவின் பங்குதாரிகளாகதம்மைஅன்றுமாற்றியதுபோலவேஇன்றும் தாம் நம்பும் கோட்பாடுகளுக்குமுரணானநிலமைகள்,நம்பிக்கைகள்,விவாதங்கள்காணப்பட்டபோதிலும்,தமிழர் தரப்பில் கோதபயகுறித்துஆழமானசந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டபோதிலும்,தேசியஇனப் பிரச்சனையில் யார் பதவிக்குவரினும் தீர்ப்பதற்கானவாய்ப்புகள் குறைவுஎன்பதுதெளிவாகஉள்ளதுஎனக் கருதி,தேசியபொருளாதாரகட்டுமானத்தை,தமிழ்ப் பிரதேசஅபிவிருத்தியைகுறைந்தபட்சஅளவிற்குஊழலற்றவகையில்,மிகவும் இறுக்கமான,தமிழ் சந்;தர்ப்பவாதஅரசியல் தலையீடுகளற்றஅபிவிருத்திக்கானஆரம்பத்தைக் காணவிரும்புவதாககூறுகின்றனர். தேசிய இனப் பிரச்சனையும்,தேசியஅபிவிருத்தியும் இரு வேறுபட்டபிரச்சனைகள் என்பதால் தேசிய இனப் பிரச்னைக்கானதீர்வை கூட்டமைப்பினரேமுடிவுசெய்யவேண்டும் என்பதால் அதுவரைதேசியஅபிவிருத்தியைஒத்திப்போடாமல் ஈடுபடுவதுஅவசியம் எனக் கருதுகின்றனர்.
தற்போதுள்ளநிலையில் தேசியஅபிவிருத்தியில் பிரதானவேட்பாளர்களின் அணுகுமுறைகுறித்துபல்வேறுஅபிப்பிராயங்கள்,விவாதங்கள் உள்ளதுபோலவேதமிழ் அரசியலில் ‘தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி’ இன் அணுகுமுறைகளும் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. கடந்த 71 வருடங்களாகத் தீர்க்கப்படாதபிரச்சனையாகத் தொடரும் தேசிய இனப் பிரச்சனையைக் காரணமாகவைத்துதமிழ்ப் பிரதேசஅபிவிருத்தியை இனிமேல் ஒத்திப் போடுவதில் அர்த்தமில்லை. தேசியஅபிவிருத்தியைதிறந்த நவ தாராளவாதபொருளாதாரக் கொள்கைகளால் மேற்கொள்ளமுடியாதுஎன்றநிலைப்பாட்டிலிருந்தேபொதுஜன பெரமுனவின் தேசியபொருளாதாரக் கொள்கையைநோக்குவதாகத் தெரிகிறது. தேசிய மூலவளப் பாதுகாப்பு,தேசியசுற்றுச் சூழல் பாதுகாப்புஎன்பவற்றுடன் இணைந்தஅபிவிருத்தியைஆதரிப்பதாகக் கருதுகின்றனர்.
எனவே கூட்டமைப்பினரின் தேசத்துரோகஅரசியல்,மாற்றுஅரசியலுக்கானவிவாதங்களை இன்றையஅரசியல் தற்போதுதிறந்துள்ளது.