1960களில் உருவான மக்கள் விடுதலை முன்னணியின் புதிய சகாப்தத் தலைவர். ஆனால், ரோஹண விஜயவீரவின் அன்றைய இனவாத விடுதலை முன்னணியல்ல அதன் இன்றைய அவதாரம். வரலாறு அக்கட்சியினருக்குப் புகட்டிய பல கசப்பான பாடங்களைக் கற்றுணர்ந்து, அதனால் விழிப்படைந்து முதிர்ச்சிபெற்று ஓர் இனவாதமற்ற தேசிய இடதுசாரி மக்கள் எழுச்சி இயக்கமாக அம்முன்னணி இன்று இயங்குகின்றது. தமிழர்களின் கோரிக்கைகளுள் நியாயமானவற்றை ஏற்று அமுல்படுத்துவேன் என்று திஸநாயக்க துணிந்து பேசியது இம்முன்னணியின் புதிய முகத்தை வெளிக்காட்டுகின்றதல்லவா? அது மட்டுமல்ல, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை இனங்களையும் மதங்களையும் மையமாகக் கொண்டல்லாது பொருளாதாரக் கொள்கைகளையும், மக்கள் நலன்பேணும் கொள்கைகளையும், யாவரும் இலங்கையரே என்ற அடிப்படையில் ஊழலற்ற ஓர் அரசியலையும், சமவுரிமைகளுள்ள ஒரு தேசிய சமுதாயத்தiயும் இலக்காகக்கொண்டு பேசிவரும் இவ்வேட்பாளனை சிறுபான்மைஇனங்களிண்டும் மிகப் பரிவுடன் நோக்க வேண்டும்.