இலங்கை மக்கள் மதியில் மக்களிடம் அதிக ஆதரவை பெற்று ஆட்சியிற்கு வந்திருந்தாலும் அதனைத் தொடர்ந்தும் தக்க வைப்பதில்… முன்னோக்கி நகர்த்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை வெற்றிகரமாக பயணப்பட்டு வருவதாக உணர முடிகின்றது.
இது இலங்கையில் உள்ள ஏனைய பெரும்பான்னை பேரிவாதக் அரசியல் கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என அவர்களால் உணரப்படுகின்றது.
குறிப்பாக பெரும் தேசியவாதத்தை தமது அரசியல் மூலதனமாக கொண்டு ஆட்சியில் அமர்ந்தவரகளுக்கு இது பெரும் சவால்தான்.
இவர்களின் கடந்த கால ஆட்சிக் காலங்களின் .வரகளால் செயற்படுத்தப்பட்ட முறைகேடுகள் ஊhழல்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதே இதன் பிரதான காரணமாகும்.
ஜேஆர் ஜெயவரத்தன காலத்தில் அதிகம் வேகம் எடுத்த காடையார் குழு தற்போது முழுமையாக பாதாளக் குழுக்கள் என்றாக வளர்ச்சிடைந்துள்ளன.
அது போதை வஸ்து கடத்தல் கூலிக்கு யாரையும் கொலை செய்தல் என்றாக வலைப் பின்னலாகியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற பலவேறு இனக் கலவரங்களுக்கு முதன்மையாக அவ்வப் போது ஆட்சியில் இருந்த கட்சிகளால் இவை அதிகம் பாவிக்கப்பட்ன என்பது யாவரும் அறிந்ததே.
அது வெலிக் கடைப் படுகொலையாக இருக்கலாம் 1983 கலவரமாக இருக்கலாம் இதற்கு முன்பு நடைபெற்ற பல தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந் காடையர்களே ஊர்விட்டு ஊர்மாறி இறக்குமதி செய்து அதிகம் கலவரங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்
அந்தந்த ஊர்களில் வாழ்ந்த சமான்ய சிங்கள மக்களில் மிகப் பெரும்பான்மையினர் இந்த வன்முறை இன கலவரங்களை விரும்பவில்லை… அவர்கள் நேரடியாக ஈடுபடவில்லை.
மாறாக தமிழ் பேசும் மக்களை அவர்கள் காப்பாற்றினர் என்பது கலவர காலத்தில் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நன்கு அறிவர்.
இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.
இந்த காடையர்கள் பாதாளக் குழுவினர் அவ்வப்போது ஆட்சியில் இருந்து பெரும்பான்மையான கட்சிகளாலும் தேவைக்கேற்ற விரும்பி வளர்க்கப்பட்ட மூன்றாம் படையாக செயற்பட்டனர்.
ஹிரிணி இன் தந்தை பிரேமரத்தினா இன் கொலையும் அது சார்ந்த செயற்பாடுகளும் இந்த வகையிற்குள் உள்பட்டதே.
இதனை ஜேஆரின் ஆட்சியிற்கு பின்னராக அதிகம் உணரப்பக் கூடியதாக இருந்தது.
இவர்களுக்கு பணம் வழங்குவதல் இவர்களின் குற்றச் செயல்களை கண்டு கொள்ளாது இருத்தல் என்பதாக அரசுகள் எண்ணை ஊத்தி வளர்த்து அவ்வப் போது அவர்களை தமது மூன்றாம் படையாக பாவித்தும் வந்தனர்
சிங்களப் பகுதியில் தொடர் குண்டு வெடிப்புகளை ஏற்படுத்தி சிங்களப் பொது மக்களை அழிப்பதற்கு பண விநியோகம் மூலம் இதன தமிழீழ விடுதலைப் புலிகளும் இவர்களைக் கையாண்டார்கள்.
இதன் காரணமாக ஒரு காலத்தில் சிறப்பாக கொழும்பு போன்ற தலை நகர் பகுதியில் ‘….காற்றுப் புக முடியாத இடங்களில் கூட புலிகள் புகுவார்கள்…’ என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு அதனை செயற்படுத்திக் காட்டினர்.
இங்கெல்லாம் அதே பணம்தான் தனது காரியத்தை சாதிக்க பயன்படுத்தப்பட்டது.
இந்த பாதாள கும்பல்களை முதலில் இனம் கண்டு புலிகள் பயன்படுத்த முடியாதவாறு முடமாக்கிவிட்டுத்தான் இறுதி யுத்தத்தை மகிந்த அரசு ஆரம்பித்தது.
இதனை மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களை நன்கு ஆராய்தால் இது தெரியும்.
தற்போது அனுர அரசை அனுராவை குறி வைத்து இந்த பாதாளக் குழுகள் இயக்கப்படலாம் என்பதை உணர்ந்து கொள்வதில் யாருக்கும் சிரமம் இராது.
இதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்கிகள் தாம் விரும்பாத தற்போதைய புதிய அரசை இல்லாமல் செய்வதற்குரிய செயற்பாடுகளின் தொடக்கமாக அண்மைய பாதாள உலகு கொலைகளைப் நாம் பார்க்க முற்படவும் வேண்டும்.
வெளி நாட்டுச் சக்திகள் தற்போதைய அரசை தமக்குச் சார்பான அரசாக மாற்றம் அடையச் செய்வதற்கே அதிகம் விரும்புவர்.
எனவே இலங்கை அரசம் அனுர குமார திசநாயக்காவும் குறிப்பாக அரசுத் தலைவர் போன்ற முக்கியமானவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக நாம் அவதானமாக செயற்பட்டாக வேண்டும்.
இதற்கான பிரத்தியேக கவனத்தை இலங்கை அரசு மேற்கொண்டே ஆக வேண்டும்.
இதற்கு பயங்கரவாததத் தடை சட்டம் அல்ல தீர்வு
அனுராவின் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு வழங்கலைத் தவிர்த்த மக்களை நெருங்கி பழகும் அதிக செயற்பாடுகளும் ஏனைய பிரதம மந்திரி, மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு விடயத்தில் தேவையற்ற செலவு விரயத்தை தவிர்க்கும் செயற்பாடுகளுடன் கூடிய அதி கவனத்துடன் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது.
அண்மைய நீதி மன்றக் கொலையும் அதன் பின்னணியும் இவற்றை கட்டியம் காட்டி நிற்கின்றன.
எமக்கு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா விஜகுமார ரணதுங்க போன்றவர்களின் கொலைகளும் பாடமாக இருக்கின்றன. இதற்குள் தமிழ்த் தலைவர்களின் படு கொலைகளையும் இணைத்துக் கொள்ளலாம்.
இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் பாதுகாப்பு படைகளுக்குள் இருந்தும் ராஜீவ் காந்தியிற்கு ஏற்பட்டது போன்ற செயற்பாடுகள் போல் நடைபெறலாம் என்பதையும் கருத்தில் கொண்டாக வேண்டும்.
இந்த அரசு மாற்றத்திற்கான அரசு 75 வருடத்தின் பின்னரான அரசு மக்களுக்கான அரசாக வெற்றி பெறவேண்டும் என்பதில் இலங்கை நாட்டின் மக்களாக நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டாக வேண்டும்