ஜனாதிபதி நாற்காலி ஒரு முள் படுக்கை

(முருகானந்தம் தவம்)

வரலாற்றுப்  பதிவுகளுடன் நடந்து முடிந்த இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தேசிய மக்கள்  சக்தி ஆகியவற்றின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க மக்களின் 2ஆவது ‘அரகலய’ புரட்சி மூலம் 5,634,915 நேரடி வாக்குகள், 1,05,264 விருப்பு வாக்குகள் என்ற அடிப்படையில் 5,740,179 மொத்த வாக்குகளைப் பெற்று ஜனாதிபதிக் கதிரையை அலங்கரித்துள்ளார்.