ஜெயலலிதா செய்திருக்கும் ஊழலைப் பார்த்தால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்தாலும் தகும் போல! 3 லட்சம் கோடி என்பது தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையில் முக்கால்வாசி. இது வருமான இழப்பு எல்லாம் அல்ல. பச்சைத் திருட்டு. பச்சை ஊழல். இந்திய வைர வியாபரத்தையே ஆட்டிப்பார்த்திருக்கும் ஊழல். ஆனால் கவலைப்படாதீர்கள். கண்டெய்னர் விவகாரம் போல இதுவும் இரண்டொரு தினங்களில் காணாமல் போகும். அல்லது, “தள்ளாத வயதில் ஜெயலலிதா ஓடி ஆடி சிறுகச் சிறுகச் சேர்த்த 3 லட்சம் கோடியை திருடிய மன்னார்குடி மாஃபியா,” என செய்தி போடுவார்கள். அதைப் பார்த்தால் ஜெயலலிதா எனும் வெள்ளை நிற, உயர்ஜாதிப் பெண்மணியின் மேல் உங்களுக்குப் பரிதாபம்தான் வரும். ஆனால் உண்மையில் யார் தெரியுமா பரிதாபத்துக்கு உரியவர்கள்?நீங்கள்தான்!!