தமிழ்நாட்டிற்கான தேர்தல் மே16 நடைபெற்று முடிவுகள் மே19 வெளிவரவுள்ளது. இம் முறை யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என எந்தவித எதிர்வும் கூறமுடியாமல் இருக்கிறது தமிழக கள நிலவரங்களை பார்க்கும் போது. யாருக்கும் அறுதிப்பெருபான்மை கிடைத்துவிடும் எனபதும் சந்தேகமே தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர். தேர்தல் கூட்டணிகள் கட்சித்தாவல்கள் கூட்டணி சேர்கைகைள், பிரிப்புகள். கழட்டிவிடபட்ட நிலைமைகள் என ஓரே அல்லோலகல்லோலப் பட்டவண்ணம் இருக்கிறது தமிழககட்சிகள்.
இறுதியாக தமிழகத்தின பிரதான இருகட்சிகளான அ.தி.மு.க கூட்டணி, தி.முக கூட்டணி மற்றும் மக்கள்நலக் கூட்டணி, பா.ஐ.கட்சி,பாட்டாளி மக்கள் கட்சி, வேல்முருகனின் தமிழர் வாழ்வுருமைக் கட்சி,மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என ஏழு முனைப்போட்டி என்ற நிலைமை ஏற்பட்ட போதிலும் தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடைதான் கடுமையா போட்டி நிலவுகிறது. இது அவர்களின் வாக்கு வங்கியினை வைத்தே சொல்லப்படும் ஒரு கணிப்பாக உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எல்லாமே தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. முதலமைச்சர் வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுவருகிறது. கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை பார்க்கும் போது யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு எல்லாமே கிடைத்து அவர்கள் எந்தவித துன்பங்களையும் சந்திக்காதவண்ணம் ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் போல் தெரிகிறது. சில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பல விடயங்கள் மாறுபட்டதாகவும் புதுமையாகவும் உள்ளது. மது ஒழிப்பு தொடர்பாக சகல கட்சிகளும் உறுதியாக உள்ளது. அதனை இவர்கள் செய்வார்களா என்பது சந்தேகமே.
இந்த தேர்தல் அறிக்கைகள் தேர்தல் காலங்கலங்களில் கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்கு செய்யும் தந்தரோபாயம் என்ற கருத்து மக்களிடம் உள்ளதால் தேர்தல் அறிக்கையின் மூலம் மக்கள் மனதை மாற்றிவிடலாம் என்ற கட்சிகளின் நம்பிக்கை பொய்யாகத்தான் போகும். தேர்தல் அறிக்கைகளில் கட்சிகளிடையே போட்டி காணப்படுவதை உணரக்கூடியதாக உள்ளது. புதுமையான விடயங்களைச் சேர்ப்பதன் மூலம் கட்சிகள் ஏதோ கண்டுபிடிப்புகளை வெளியிடுவது போல் அதனைச் செய்கிறார்கள்.
ஆட்சிமாற்றம் என்ற சிந்தனை பலரிடம் காணப்படுகின்ற போதும் அதனை யார் அறுவடை செய்வார்கள் என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது. மக்கநலக் கூட்ணியா, அல்லது தி.மு.க வா மக்கள் நலக் கூட்டணி மேல் ஒரு நம்பிக்கையின்மை காணப்படுகிறது. இதே போல் தி.மு.க விலும் நம்பிக்கைகொள்ள மாற்றத்தை விரும்புகிறவர்கள் தயாராக இருப்பதாக தெரியவில்லை.
இன்னுமொரு பிரதான விடயம் இந்தத் தேர்தலில் பிரதிபலிக்க காத்திருக்கிறது. சில மாவட்டங்களிலும் சில தொகுதிகளிலும் தி.மு.க, அ.தி.மு.க தவிர மற்றய கட்சிகள், கூட்டணிகளுக்கு வாய்ப்புகள் காணப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கு அந்தப்பகுதிகளில் பலத்த சவால்கள் காணப்படும். மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம் இதனை நீங்கள் தவறவிட்டால் தமிழ்நாட்டில் இனி மாற்றம் ஏற்படுத்த முடியாது ஆகவே எமக்கு வாங்கிளியுங்கள் என மக்கள் நலக் கூட்டணியினர் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நான் சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் ஆகவே எனக்கு வாக்களியுங்கள் என தற்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறிவருகிறார். தி.மு.க வோ தற்போதைய ஆட்சியை அகற்ற வேண்டும் நாங்கள் உங்களுக்கு நல்ல ஆட்சியைத் தருவோம் எனக் கூறுகிறார்கள். பா.ஐ.க கட்சியும் நல் ஆட்சியை தருவோம் தற்போதைய முதல்வர் மத்திய மந்திரிகளாலே பார்க்க முடியாமல் உள்ளது எங்களை ஆதரியுங்கள் எனக் கூறுகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி மாற்றம் முன்னேற்றம் என்ற கோசத்துடன் வலம் வருகிறது. எங்களது ஆட்சி அமைந்தால் நான் உங்களைவ வீடு வீடாக வந்து பார்க்கும் ஒரு முதல்வரக இருப்பேன் என்கிறார். வேலமுருகனும் தனது பகுதியில் தனது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன் எனக் கூறிவருகிறார்.
சீமானும் எதையோ எல்லாம் சொல்கிறார் ஆடு,மாடுகள் மேய்பதை அர தொழில் ஆக்குவேன் என்றெல்லாம் கூறுகிறார். இவையெல்லாத்தையும் வாக்களார்கள் அவதானமாகப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா? அல்லது மீண்டும் ஜெயலிதாவையே ஆட்சியில் அமரவைப்பார்களா? என்பதற்கு நாம் மே 19 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
(அருள்-விஜயன்)