(சாகரன்)
இரண்டாம் உலகப் போருக்கு காரணமான ஹிட்லரின் நாஜி கோட்பாடு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஹிட்லர் தோற்கடிகப்பட்ட பின்பு தீண்டத்தகாதாகவும் வேண்டத் தகாததாகவும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் ஜேர்மனின் தற்போதைய தேர்தலில் இதே நாஜி கொள்கையை தூக்கிப்பிடித்த இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் தடவையாக தேர்தலில் பங்கு பற்றிய Alternative for Germany (AfD) கட்சியிற்கு கிடைத்த வாக்குகள் உலகிற்கு மீண்டும் அதிர்சியூட்டும் செய்தியினை சொல்லி நிற்கின்றது. இது ஜேர்மனுக்கு மட்டும் பொதுவான செய்திகள் அல்ல. அமெரிக்காவில் ட்றம் இன் வெற்றியும் அமெரிக்காவே முதன்மையானது என்பதும் இதனை ஒத்த தேர்தல் செய்திகளை சொல்லி நிற்கின்றது.
தமது தேசியத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கும் எந்த செயற்பாடும் ஏனைய தேசிய இனங்களை நிராகரித்து பாசிச் செயற்பாட்டை கொண்டிருக்கும் இது இலங்கையிலும் யுத்தத்தை ஏற்படுத்தியும் இதன் இறுதி முடிவையும் ஏற்படுத்தியது. இதனை நாம் இன்று பர்மாவில் ரொங்கியா முஸ்லீம் இற்கு எதிராக சமானத்திற்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூ கீ ஆட்சியிலும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. குறைந்த கூலிக்கு வேலையாட்களை தமது நாடுகளுக்கு வரவழைக்க அகதிகளை உருவாக்கும் இந்த நாடுகள் தமது சுரண்டல் தமது மக்களுகளால் உணரப்படும் போது இந்த அகதிகள் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து செயற்பட்டுவருவது தற்போது மேற்குலகம் எங்கும் பரவிவரும் ஒரு ‘வைரஸ்” ஆகும் இதன் வெளிப்பாடுகளே பிரித்தானியா, பிரான்ஸ் ஜேர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்டுவரும் அதி தீவிர வாலதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியாகும்.
இதற்கு இவர்களாலேயே ஒருகாலத்தில் உருவாகப்பட்ட ‘இஸ்லாமிய தீவிரவாதம்” (இவர்களின் பாஷையில்) காரணமாக இருக்கின்றது என்ற விடயம் சாதகமாக அமைந்திருக்கின்றது. உலகில் எற்பட்டுவரும் இந்தப் பொதுப் போக்கு உலகை ஒரு பொது யுத்தத்திற்கு அழைத்து செல்லும் என்ற பயப்பிராந்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்தமற்ற உலகத்தை பேணிப்பாதுகாப்பது நம் யாவரும் கடைமையாகும்.