(Maniam Shanmugam)
இந்தப் பதிவின் நோக்கம் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி. இலங்கையில் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி அந்தக் கிளர்ச்சி பற்றிச் சுருக்கமாக ஆராய்வதே.
1971 மற்றும் 1988 – 89 காலகட்டங்களில் இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான தனது உறுப்பினர்களையும், சாதாரண சிங்கள இளைஞர்கள் பொதுமக்களையும் பலி கொடுத்த பின்னரும் ஜே.வி.பி. இலங்கை அரசியலில் இன்னமும் உயிர்தப்பி வாழ்வதுடன், நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் திகழ்கிறது.