பலரும் எதிர்பார்த்ததைப் போல் அது திமுக என்ற திராவிடக் கட்சி பாஜக இற்குள்(ஆல்) மூழ்கடிக்கப்பட்ட அ.தி.மு.க என்ற நிலையில் ஒரு பிராந்தியக் திராவிடக் கட்சியாக சுருங்கிவிடும் என்ற அபாயகரமான நிலையில் இருந்து அ.த.pமு.க தன்னையும் தமிழகத்தையும் காத்து நிற்கும் தேர்தல் முடிவு நிலை தமிழகத்திற்கு ஒரு நல்ல முடிவினைத் தந்தே உள்ளது.
ஜந்து முனைப் போட்டியாக சிலரால் பார்க்கப்பட்டாலும் மாற்றுத் தலமை திராவிடக் கட்சிகள் இல்லாத புதிய தலமை… ஆட்சி என்பது இதுவரை தமிழக மக்களால் ஒரு ஆசனத்தைக் கூட வழங்கி ஆரம்பிக்கபடாத நிலமை இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
கூடவே பாரதி ஜனதா கட்சியின் இந்தியா முழுவதும் தமக்கு தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இல்லாவிட்டாலும் ஆட்சியை ஆட்டிப் படைப்போம் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்பதற்கு தமிழகத்தில் திமுக வின் வெற்றி மட்டும் அல்ல அ.தி.மு.க பெற்ற அதிக இடங்களும் சாவு மணி அடித்துள்ளதாகவே பார்க்க முடிகின்றது.
அந்த வகையில் காவி மேலாகிகத்தை திராவிட கட்சிகளுக்கு மாற்றீடாக கொண்டுவர முயன்ற பாஜக வின் தந்திரம் தோல்வி அடைந்துள்ளது.
பெரியார் இட்ட அடித்தளமும் அதனைத் தொடர்ந்த திராவிடக் கட்சிகளின் இடைவிடாத 50 வருடத்திற்கு மேலான செயற்பாடுகளும் தேசியக் கட்சிகள் தமிழகத்தில் மாநிலக் கட்சிகளை மீற வர முடியாது என்பதை உரக்கக் கூறியதாகவே இந்த தேர்தல் முடிவுகளையும் பார்க்க முடியும்.
காங்கிரஸ் இன் வெற்றி எண்ணிக்கை அதிகரிப்பு சற்று திரும்பி பார்க்க வைத்திருக்கும் வேளையில் இடதுசாரிகள் தமது வெற்றிகளை தலா இரண்டிற்குள் குறுக்கி கொள்ள திருமாவளவனின் கட்சி நாலு எண்ணிக்கை, முஸ்லீம் கட்சிகளின் வெற்றி என்பன சமூக நீதி செயற்பாட்டிற்கு வலுச் சேரத்திருக்கின்றது.
பா.ஜ.க அதிமுக ஆதரவுடன் பெற்ற நாலு இடங்களும் எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் அது தனது தமிழக தலைவர் உட்பட முக்கியஸ்தர்களின் தோல்விகளையும் பதிவும் செய்துள்ளது.
ஐந்து பிரதான அணிகளின் பிரதிநிதிகளும் சட்ட சபையிற்கு செல்லும் நிலை ஏற்படுதல் ஒரு சமநிலை ஆட்சியின் செயற்பாட்டை அதிகம் உறுதி செய்யும் என்ற நிலை எதிர்பார்க்கப்பட்டாலும் அவ்வாறு அமையாததது ஏமாற்றம் அழிப்பதாக இருக்கின்றது. இதற்கான காரணத்தை திராவிட சிந்தனையிற்கு மாற்றான அரசியைலை முன்வைத்த அமைப்புகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டி சூழலுக்குள் தள்ளப்பட்டதை உணர முடிகின்றது.
புதிதாக பதவி ஏற்கும் அரசு தமிழக நிதி நிலமை, கொரனா, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மாநில உரிகைளை மறுக்கும் செயற்பாடுகள் போன்றவற்றை அதிக சவால்களாக கொண்டிருக்கும். கூடவே திமுக அறுதிப் பெரும்பான்மையை விட எழு இடங்களே அதிகமாக தனியாக பெற்றிருத்தல் வரும் காலத்தில் பா.ஜ.க வின் சித்து விளையாட்டுகளை வட மாநிலங்களில் ஏற்படுத்தியது போன்ற ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் சிந்தனைக்கு தீனி போட்டுள்ளதாகவே என்னால் பார்க்கப்படுகின்றது.
ஆனால் இதற்கான நேரம் உடனடியானது அல்ல கூடவே திமுக அரசின் நடப்பு ஆட்சிச் செயற்பாட்டிலேயும் தங்கியுள்ளது. இன்னும் சற்று அதிகமாக 20 உறுப்பினர்களையாவது திமுக தனியாக தன் கட்சி சார்பில் வெற்றி பெற்றிருந்தால் இந்த விடயத்தைபற்றி நான் அதிகம் பேசி இருக்க மாட்டடேன் தற்போது.
1967 களில் இருந்து தமிழ் நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் பல விமர்சனங்கள் ஊழல்கள் மத்தியிலும் ஒரு வளர்சியடைந்த மாநிலமாகவும் சமூக நிதீயை ஓரளவிற்கேனும் நிறுவும் பகுத்தறிவு சமூகத்தை தமிழகத்தில் கட்டியமைப்பதில் பங்காற்றியுள்ளனர் என்பதை நாம் முழுமையாக நிராகரிக்க முடியது.
அதிமுக வின் தோலிவியற்கான காரணமாகவும் திமுக விடம் இருந்து தாம் வேறுபடுவதாகவும் கூறுவது பற்றி…. பாஜக ஆதரவு நிலைப்பாடு மத்திய அரசுடன் சமரசம் வலதுசாரி சிந்தனை சமூக நீதியை பற்றி அக்கறை கொள்ளாமை வாரிசுகள்(பிள்ளைகள்) இல்லாத குடும்ப ஆட்சியில்லை என்பதை கொண்டிருந்தாலும்…. சொத்துச் சேர்த்தமை என்று தொடர்ந்ததே அதிமுக(கையூடு ரென்டரில் கமிசன்) உம் பயணப்பட்டிருக்கின்றது. இதுவே அதன் தோல்வியிற்கான காரணங்களாகும். கூட்டணி அமைப்பதில் நட்புக் கட்சிகளை சரியாக கையாளமை…. கூடவே தமக்குள் பிளவு பட்டு நிற்கும் நிலைமையும் காரணமாக அமைகின்றன.
கடந்து வந்த 50 வருட தமிழக் அரிசியல் பாதையில் இரு திராவிட கட்சிகளும் தமிழ் நாட்டை இந்தியாவில் வளர்ச்சியடைந்த ஒரு மாநிலமாக காமராஜர் ஆரம்பித்த மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செழுமைப்படுத்தி செயற்படுத்திய செயற்பாடு காரணமாகவும் வரவேற்கத்தக்கனவாகவும் அமைகின்றன.
பெரியாரின் பகுத்தறிவை பெரும்பாலும் அதிமுக கை விட்டு எப்போதே வேறு பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டது. பொட்டு… பூ… என்று. ஆனாலும் பெரியார் இட்ட விதைகள் இன்றும் பல இடங்களில் விருட்சமாக இருப்பது ஆரோக்கியமான நிலமை. இதில் ஒரு கிளையாகவேனும் கருணாநிதியும் அவர் திமுக வும் செயற்படுவது சிறப்பே. சமத்துவபுரம் இதற்கு ஒரு உதாரணம். இதன் தொடர்ச்சியாக அவரின் வாசிசு… மகன்… திரு ஸ்டாலின் செயற்படுவார் என்று நம்புவோம்.
வாழ்த்துகள் புதிதாக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திரு ஸ்டாலின் அவரின் கட்சி திமுக இற்கு. கூடவே திராவிடக் பாரம்பரியதை யாரும் விழுங்கி விட முடியாது என்று நிரூபித்த அதிமுக விற்கு.
நல்லாட்சியை தொடர… உறுதி செய்ய…. முக்கியமாக திமுக கூட்டணியில் உள் இடதுசாரிகள் சமூ நீதிக்கட்சிகள், தேசியக் கட்சியான காங்கிரஸ் ஏனைய முஸ்லீம் கட்சிகள் நட்பு கட்சிகள் தமது செயற்பாட்டின் ஊடு உறுதி செய்வார்கள் என்று நம்புவோம்.
இறுதியாக யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது தேர்தல் வெற்றிக்காக ஈழத் தமிழர்களின் நலன்கள் கருத்தில் எடுப்பார்கள் என்ற வரையறையிற்குள் செயற்படும் தொப்புள் கொடி உறவாக தமிழக அரசுகளை நாம் எதிர்பார்க்க வேண்டும்….. உண்மையான தொப்புள் கொடி உறவாக செயற்படும் தமிழக மக்களே எமக்காக என்றும் குரல் கொடுக்கும் ஏன் உயிர் கொடுக்கவும் தயாராக இருக்கும் உறவுகள்.