1960 டிசெம்பர் 31ஆம் திகதி சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு மறுநாளே நடைமுறைக்கு வந்தது. 1961ஆம் ஆண்டு மொழிவாரிச் சிறுபான்மையினருக்கு மிகுந்த சவால்களுடன் தொடங்கியது. இது கல்வித்துறையில் எதிரொலித்தது. 1959 முதலே பல்கலைக்கழகங்கள் சிங்கள, தமிழ் மொழிமூல மாணவர்களை அனுமதித்தன. மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் ஆகிய பீடங்கள் 1960களில் சேர்க்கப்பட்டன. பல்கலைக்கழகங்களில் இணைவோரின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது.