கட்சியாகவா அல்லது கூட்டமைப்பா எனத்தெரியவில்லை. சாவகச்சேரியில் கட்டுப்பணம் செலுத்திவிட்டார்கள் என்கிறது இன்றய செய்தி. கட்சியில்தான் பணம் கட்டியிருக்கிறார்கள் போலும்… சம்பந்தர் தம் கட்சி அதிகூடிய விட்டுக்கொடுப்பிற்கு தயார் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அதனால கோஞ்சம் குழம்பியிருக்கிறேன். ரெலொ – புளட் நிலைமை தெரியவில்லை. வரதர் நிலைமை என்ன என்று தெரியவில்லை.
சைக்கிள் அணி வடக்கில் ரெடி. கிழக்கில் சில இடங்களில் ரெடியாகலாம். பெரும்பாலான இடங்களில் போட்டி இடுவது உறுதி..
மாற்று அணி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து முடித்திருக்கிறார்கள். த.வி.கூட்டணி, சுரேஷ் அணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி , ஈரோஸ், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பவை இணைந்துள்ளன. வடக்கில் கட்டுப்பணம் கட்டி விடுவார்கள். கிழக்கிலும் சில இடங்களில் ஓ.கே.தான். சில இடங்களில் பணம் கட்ட முடியுமோ தெரியவில்லை. பெரும்பாலான இடங்களில் போட்டியிடுவது உறுதி…
ஜ.தே.கட்சி, ஸ்ரீ.சு.கட்சி முழுத்தொகுதியிலும் போட்டியிடும். காசுப்பிரச்சினை இல்லை. வேட்பாளரைத் தேடணும். அதுவும் சில விதிமுறைகள் உண்டு.
தாமரை அணியும் ரெடி.. காசுப்பிரச்சினை இல்லை. வேட்பாளர்தான் பிரச்சினை….
வடக்கில் பலமான சுயேட்சைக்குழுக்கள் – டக்ளஸ் அணி, டக்ளஸ் மாற்று அணி போட்டியிடுவார்கள்…
கிழக்கில் தோணிக்காரர் புதன் கிழமை கட்டுப்பணம் செலுத்திவிட்டார்கள். ஒரே அணி. இடப்பங்கீட்டுச் சோலிகள் இல்லை.
கருணா அணி சில இடங்களில் கட்டுப்பணம் கட்ட ரெடியாகிறார்கள்.
அங்கும் பலமான சுயேட்சை அணி காரைதீவில் ரெடியாகி-இடையில் குழம்பிக்கிடக்கிறது.
இடையில் சுயேட்சைக்குழுக்கள் பணம் கட்டும்போது, குழம்பிவிட வேண்டியிருக்கு…
எங்க இருந்தாங்க, என்ன பண்ணிக்கொண்டு இருந்தாங்க, எப்படி ஆட்கள செட்பண்ணி லிஸ்ட் தயாரித்தாங்க எண்டு யோசிக்க முதலே கட்டுப்பணத்தக் கட்டிட்டுப் போறாங்க…
அப்பாடி… ஒரு வழியாக விசயத்தைப் பிடிச்சாச்சி…
இனி அப்டேட் ஆகணும்…
கட்சிகள் விபரம் மற்றும் கட்டுப்பணம் கட்டும் இடங்கள் தெரிந்தால் பகிரவும்.
விஜய்.