கடந்த 25 ஆண்டுகளாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனவும் 13வது திருத்தினை முழுமையாக ஆதரிக்கும் அமைச்சர் டக்ளஸ் அவர்களை அழைக்காத விடயங்களை பார்க்கும் போது ஏதாவது ஒரு வகையில் தமிழ்பேசும் மக்களுக்காக இந்தியாவின் பங்களிப்பை தவிர்ப்பதில் தமிழரசு கட்சியும் ராஜபக்ச சகோதர்களும் திட்டமிட்டு செயற்படுவதுபோல தெரிகிறது அதனுடைய ஆரம்பம் தான் சம்பந்தன் இந்தியாவின் பிரதமர் மோடியின் அழைப்பை பங்காளி கட்சிகளுக்கும் அறிவிக்கமால் நிராகரித்ததும் அமெரிக்காவின் பயணம் போன்ற நகர்வுகளை பார்க்கின்றபோது இந்தியாவிற்க்கு எதிரான திட்டமிடல் தெளிவாக தெரிகிறது
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களின் பதிவு
வடக்கின் ஓர் ஊடகர், எனது நண்பரும் கூட, தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டு செயற்பாடு பற்றி தான் கேட்டது, ஊகிப்பது, தனக்கு தோன்றுவது என எல்லாவற்றையும் தப்பும், தவறுமாக எழுதி வருகிறார். இன்னமும் இரண்டொரு தினங்களில் இது பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும்.
இந்த செயற்பாடு முடிவுக்கு வரும் வரை இதுபற்றி இவர் சும்மா இருந்தாலே, இந்த சூழலில் இவர் செய்யக்கூடிய பேருதவி என நான் எண்ணுகிறேன்.
எனக்குள்ள பிரச்சினை, இதில் இவர் என் பெயரை சும்மா, சும்மா இழுத்து விடுகிறார். என் நீண்டகால அரசியலை பற்றியும் வேதனைப்படும்படி தொடர்பில்லாமல் எழுதுகிறார். தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டு செயற்பாடு, என்னால் பின்னடைவை கண்டுள்ளதாக இவர் ஏன் எழுதுகிறார் என தெரியவில்லை.
இன்று இந்த விடயத்தில் எவ்வளவு காத்திரமான காரியத்தை ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து நானும் செய்கிறேன் என இவருக்கு தெரியவில்லை. எல்லா விடயங்களையும் ஊடகங்களுக்கு சொல்லி, சொல்லி செய்ய முடியாதே! அப்படி ஒரு அவசியமும் கிடையாதே!
அரசில் உள்ள கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு உடன்பாடு தெரிவித்தால், அவர்களையும் இப்போதே உள்வாங்குவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது பற்றி நாம் கணக்கில் எடுக்கவே இல்லை.
மலையக கட்சிகள் மட்டுமல்ல, நீண்டகாலமாக 13ம் திருத்தம் பற்றி பேசிவரும் ஈபீடீபி, தவிகூ, மக்கள் விடுதலை புலிகள் போன்ற வடகிழக்கு கட்சிகளும் உள்ளன.
ஆனால், முதல் வட்டத்தில் எதிரணி கட்சிகளையும், பின்னர் ஆளும் அணி கட்சிகளையும் அணுகலாம் என கூட்ட ஏற்பாட்டு அழைப்பாளர்கள் எமக்கு கூறினார்கள். ஏற்பாட்டாளர்கள் கூறுவதில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. எனவே இது பற்றி சும்மா எழுதி இல்லாத பிரச்சினைகளை பூதாகரமாக்குவது பண்பல்ல.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இந்த ஒருங்கிணைவின் அதி விசேடம் வடகிழக்கு, முஸ்லிம், மலையக கட்சிகள் ஒன்றுக்கூடி இருப்பதுதான். இதை சமூக பொறுப்புடன் பக்குவமாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே எழுதப்படும் கூட்டு ஆவணம் மூன்று தரப்பாரின் பிரச்சினைகளையும் விவரிக்க வேண்டும். இது மிக மிக நியாயமான நிலைப்பாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஆகவே அதை நாம் இப்போது செய்கிறோம். எல்லாம் கூடி வந்தால், கையெழுத்திடுவோம். இல்லாவிட்டால், வெளியிலிருந்து வாழ்த்துவோம். இதையும் நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன். ஆகவே பொறுமையாக இருங்கள்.